தலைமுடியை நீண்ட நாட்களுக்கு கருப்பாக வைத்திருக்க இயற்கையான முறையில் ஒரு ஹேர் டை எப்படி தயாரிப்பது.

hair
- Advertisement -

ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது நமது முடியும், சருமமும் தான். இவை இரண்டில் முதலில் நமது இளமையை இழப்பதற்கு காரணமாக அமைவது நமது முடி தான். முடியின் கருமை நிறம் மறைந்து வெளுத்து வெள்ளையாக மாறும் பொழுது மனதிற்குள் ஒரு பதட்டம் வர ஆரம்பித்துவிடும். நமக்கு வயதாகி விட்டதா? நமது அழகு குறைந்து கொண்டு வருகிறதா? என்ற கேள்விகளும் தோன்ற ஆரம்பிக்கும். இதனால் முடியை கருமையாக்க பெரும்பாலானவர்கள் பல வழிகளை முயற்சி செய்கின்றனர். இந்த பிரச்சனைக்கு சிறந்த பலனாக அமையும் ஒரு இயற்கை ஹேர்டையை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

hair1

முடி வெள்ளையாக ஆரம்பித்தவுடன் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்த நினைப்பது மருந்து கடைகளில் கிடைக்கும் ஹேர் டையை தான். ஆனால் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் அதில் உள்ள வேதியல் பொருட்களின் தாக்கத்தினால் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த ஹேர் டையை பயன்படுத்தி வருவதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் உங்கள் கூந்தலை கருமையாக்க முடியும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1, டீ தூள் – இரண்டு ஸ்பூன், அவுரி இலை பொடி – 2 ஸ்பூன்.

avuri

செய்முறை:
இரண்டு ஸ்பூன் டீ தூளுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, டீ டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து கொள்ள வேண்டும். பிறகு பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தமாக அலசி கொண்டு அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு டீ டிக்காஷன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் 2 ஸ்பூன் அவுரி இலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதன் நிறம் மாறி சற்று பிரவுன் கலராக மாற ஆரம்பிக்கும்.

Beetroot

பயன்படுத்தும் முறை:
இதனை பயன்படுத்தும் பொழுது முடியில் எண்ணெய் இருக்கக்கூடாது. முதல் நாளே தலைக்கு குளித்து எண்ணை பிசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அவுரி இலை பொடி நேரடியாக வெள்ளை முடியில் கருமை நிறத்தைக் கொண்டு வராது. எனவே இந்த பீட்ரூட்டின் சிவப்பு நிறத்தால் முடி சிறிதளவு பிரவுன் நிறமாக மாறும். அதன் பின்னரே அவுரி இலையின் தன்மை முடியுடன் சேர்ந்து கருமை நிறமாக மாற ஆரம்பிக்கும்.

long-hair

சுத்தமான தலைமுடியில் இந்த அவுரி இலை பேஸ்டடை நன்றாக தடவி விட்டு 1 அல்லது 2 மணி நேரங்கள் அப்படியே ஊற வைத்து, சாதாரண நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு அல்லது சீயக்காய் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முடியின் நிறம் கருமையாக மாறி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.

- Advertisement -