உங்கள் தலைவாசல் கதவு இப்படி மட்டும் இருக்கவே கூடாது! இருந்தால் கையில் காசு கண்டிப்பாக தங்கவே செய்யாது தெரியுமா? வந்த மகாலட்சுமியும் வெளியே சென்று விடுவாள்.

door-lakshmi

ஒருவருடைய தலைவாசல் கதவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வாஸ்து விதிமுறை உண்டு. அதன்படி அமைக்கப்பட்ட வீடு சுபீட்சம் பெறும் என்பது ஐதீகம். இந்நிலையில் உங்களுடைய தலை வாசல் கதவு எப்படி எல்லாம் இருக்கக் கூடாது? அப்படி இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

vasal-kathavu

பொதுவாக தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதனால் தான் தலைவாசலில் விளக்கேற்றுவது, மஞ்சள் பூசி, குங்கும பொட்டு வைப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றோம். தலை வாசல் கதவில் ஏறி நின்று குழந்தைகள் விளையாடுவது கூடாது. தலைவாசல் கதவு இருக்கும் தாழ்ப்பால் சத்தம் போடக்கூடாது என்று நிறைய விஷயங்களை நம் முன்னோர்கள் சொல்ல நாம் கேட்டிருப்போம். தலைவாசல் கதவு என்பது அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த காலம் முதல் இந்தக் காலம் வரை போற்றப்பட்டு வருகின்றது.

பொதுவாக ஜோதிடத்தில் நம் கைகளை பார்த்து அதில் ஒரு விரலுக்கும், இன்னொரு விரலுக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதா? என்று ஆராய்வோம். இடைவெளி இருக்கும் பட்சத்தில் அந்த நபர் அதிக செலவாளியாக இருப்பார் என்கிற கணிப்பிற்கு வருவோம். அவர்களுடைய கைகளில் பணம் தங்கவே செய்யாது என்கிற கூற்று உண்டு. அதே போல் ஒரு விஷயம் தான் தலைவாசல் கதவிலும் உண்டு என்கிறது சாஸ்திரம்.

Home 2

நம் வீட்டின் தலைவாசல் என்பது வாஸ்துபடி உயிர் மூச்சாக கருதப்படுகிறது. எனவே தலைவாசல் பகுதியில் இருக்கும் குலதெய்வத்தின் அருள் கிடைக்க வெள்ளி தோறும் மஞ்சள், குங்குமம் இட்டு, குத்து விளக்கு ஏற்றி வர வேண்டும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு மஞ்சள் குங்குமம் வைப்பதற்கு அல்லது தண்ணீர் வைத்து துடைப்பதற்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது உண்டு. இதற்கு காரணம் தலைவாசல் கதவில் தண்ணீர் பட்டால் கரையான் அரிப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் ஏற்படும் என்கிற பயம் உண்டு.

- Advertisement -

தலை வாசல் கதவில் கரையான் அரிப்பு இருந்தால் கண்டிப்பாக அதனை மாற்றிவிடுவது நல்லது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்த தண்ணீரைக் கொண்டு நன்கு கரையான் இருக்கும் இடங்களில் சுத்தம் செய்து பின்பு வார்னிஷ் பூசிக் கொள்ளலாம். கதவை திறக்கும் பொழுதும், மூடும் போதும் இடையில் இடைவெளி கட்டாயம் இருக்கக் கூடாது. தலை வாசல் கதவின் வழியே சூரிய ஒளி வருவதை வைத்து அதில் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடிக்கலாம்.

new home

இப்படி இடைவெளி இருக்கும் கதவுகளை சரி செய்வது நல்லது. இப்படியான தலைவாசல் கதவு உங்கள் வீட்டில் அமைக்கப்பட்டு இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களுடைய கைகளில் கட்டாயம் பணம் என்பது நிலைக்கச் செய்யாது. பணம் ஒரு வழியில் வந்தாலும், மறு வழியில் தண்ணீர் போல வேகமாக செலவழியும். கைரேகை ஜோதிடத்தில் கூறியது போல, வாஸ்து ஜோதிடத்திலும் இப்படி ஒரு குறிப்புகள் உண்டு.

lock-and-key

எனவே இடைவெளி இருக்கும் கதவுகளை மாற்றி அமைப்பது நல்லது. அல்லது அதிலிருந்து வரும் வெளிச்சத்தை வேறு வகையில் தடை செய்து கொள்வது நல்லது. உடைந்த தாழ்ப்பாள் போன்றவற்றை உடனடியாக சரி செய்து விட வேண்டும். கதவில் தூசிகள் இல்லாமல் அடிக்கடி சுத்தம் செய்து பூஜைகள் செய்து பராமரித்து வர வேண்டும். இப்படி செய்யும் பொழுது அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் கிடைத்து மகாலட்சுமி ஆனவள் நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்குவாள்.