ஆண் குழந்தை பிறக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இங்கு செல்லுங்கள்

sivan

இந்த உலகில் தவறு செய்யாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. தவறு செய்வது எப்படி மனித இயல்போ அவற்றை பொருத்தருள்வது தெய்வத்தின் இயல்பாகும். எப்படிப்பட்ட தவறு செய்யும் எவரையும் மன்னிக்கும் விசாலமான மனம் கொண்டவர் சிவபெருமான். அந்த சிவபெருமானைச் சரணடைந்து தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவர்களுக்கு அந்த சிவன் அருள் புரிகிறார். அப்படி சிவபெருமான் பலருக்கு அருள் புரிந்த அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் கோயிலின் சிறப்புகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nanda-sivan-viratham

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் வரலாறு

சுமார் 2000ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இது இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். கோயிலின் தல விருட்சமாக கொடிமுல்லை இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, இந்திர தீர்த்தம், பொற்றாமரை என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. புராணகாலத்தில் இவ்வூர் கருப்பறியலூர், கர்மநாசபுரம் என அறியப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற சிவதல தலமாக இக்கோயில் இருக்கிறது.

தல புராணங்களின் படி இலங்கை வேந்தன் இராவணனின் மைந்தன் மேகநாதன் தேவலோக வேந்தனான இந்திரனை வெற்றி கொண்டு மேகநாதன் என்கிற பெயர் பெற்றான். ஒரு முறை படிக விமான பறந்து கொண்டு கொண்டிருந்த போது அந்த விமானம் தடை ஏற்பட்டு யே நின்று விட்டது. இதை கண்ட இந்திரஜித் விமானத்திற்கு கீழே பார்த்தபோது இத்தல சிவபெருமானின் கோபுரத்தின் மீது பறந்ததால் தான் இத்தடை ஏற்பட்டது என எண்ணி வருந்தினான். பிறகு தலத்தில் இறங்கி, இக்கோயிலின் குளத்தில் நீராடி தனது தவறை உணர்ந்து சிவபெருமானை வழிபட அந்த தடை நீங்கியது. பிறகு அவனின் விமானம் தடையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. இக்கோவிலின் சிவலிங்கத்தின் அழகில் மயங்கிய மேகநாதன், இந்த சிவலிங்கத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த முயற்சியில் தோல்வியுற்று மயங்கி விழுந்தான். இதைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் இராவணன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானிடம் தன் மகனின் தவறுக்கு வருந்தி அவனை மன்னிக்குமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் இந்திரஜித்தின் குற்றத்தை பொறுத்து அருள் புரிந்ததால் “குற்றம் பொறுத்த நாதர்” என்கிற பெயர் இத்தல சிவ பெருமானுக்கு ஏற்பட்டது.

Sivan

சித்திராங்கதன் எனும் மன்னன் தனது மனைவி சுசீலை உடன் இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டி வழிபட்டான். அதன்படியே அவனுக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. இத்தலத்தில் சூரிய பகவான் வழிபட்டதால் இத்தலம் தலைஞாயிறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் செய்யப்படும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என பிரம்மதேவன் வசிஷ்டருக்கு கூறினார். இதனால் வசிஷ்டர் இங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு மெய்ஞ்ஞானம் பெற்றார். 72 ரிஷிகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றது. இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது அவர்கள் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்றும், மீண்டும் பிறவாமை பேறு கிடைத்து விடுவதாக ஐதீகம் அதனால் தான் இத்தலம் கருப்பறியலூர் என அழைக்கப்படுகிறது. அனுமனின் தோஷத்தை நீங்கிய தலம் இதுவாகும்.

- Advertisement -

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலின் இறைவன் சிவபெருமானின் லிங்கம் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இத்தலத்தை மேலைகாழி என அழைக்கின்றனர். கோயிலின் முதல் தளத்தில் உமாமகேஸ்வரர், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் விட்டிருக்கிறார்

Baby

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
தலைஞாயிறு
நாகப்பட்டினம் மாவட்டம் – 614712

தொலைபேசி எண்

4364 – 258833

இதையும் படிக்கலாமே:
பித்ரு தோஷம் நீங்க இக்கோயிலுக்கு செல்லுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thalaignayiru temple in Tamil. It is also called as Sri kutram poruttha naathar temple in Tamil or Thalaignayiru sivan kovil in Tamil or Nagapattinam temples temples in Tamil or Kulandhai dhosham neenga in Tamil.