தலையில் இப்படிப்பட்ட சுழி இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா? வாங்க உங்க தலையில் இருக்கும் சுழியின் அதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்

suzhi
- Advertisement -

ஒரு சில சிறு பிள்ளைகளை தலையில் இருக்கும் சுழியை வைத்து பலர் கேலி செய்வதை பார்த்திருப்போம். தலையில் 2 சுழி இருப்பதனால் உனக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்றும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை தான் பலே பலே என்றும் கிண்டல் செய்வார்கள். அவ்வாறு தலையில் இருக்கும் சுழியை வைத்து பலரும் பலவித கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தலையில் சுழி இருப்பதன் உண்மை காரணத்தையும் அதனால் உண்டாகின்ற ஆன்மீக பலன்களையும் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thalai-suzhi

ஆன்மீக ரீதியாக எவ்வாறு கைகளில் இருக்கும் ரேகையைப் பொருத்து மனித வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்கிறோமோ, அதுபோல தலையில் உள்ள சுழியை வைத்தும் சில தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். சாமுத்ரிகா லட்சணத்தில் இருக்கும் சில குறிப்புகள் மூலமும், ஜோதிடத்தின் குறிப்புகள் மூலமும் மனித வாழ்க்கையின் ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும்.

- Advertisement -

ஒருவரின் தலையில் வடப்பக்கம் சுழி இருந்து அவர் சந்திக்கும் நபரின் காலையில் இடது பக்கம் சுழி இருந்தால் இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கும். அவ்வாறு கணவன் மனைவி இருவருக்கும் இதுபோன்ற வலது, இடது என சுழிகள் இருந்தால் அவர்களுக்கிடையேயான அன்பும், நெருக்கமும் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மாறாக இருவருக்கும் வட பக்கமும் அல்லது இருவருக்கும் இடது பக்கமும் ஒரே மாதிரி சுழி இருந்தால் இவர்களின் உறவு எதிர்மாறாக தான் இருக்கும்.

thalai-suzhi1

உங்கள் தலையில் வலது புறம் ஒற்றை சுழி இருந்தால் நீங்கள் மிகவும் அன்பானவராகவும், உங்களை சுற்றி அப்பாவிடம் பெரிய நட்பு வட்டாரம் இருக்கும். சொந்த பந்தம் அனைவரும் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் அதனை தெளிவாக சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பீர்கள். இவ்வாறு ஒற்றை சுழிக்கு பதிலாக இரட்டைசுழி இருந்தால் அதுவும் வலதுபுறம் சுழன்று இருந்தால் நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக இருப்பீர்கள். பேரும், புகழும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள்.

- Advertisement -

உங்கள் தலையில் இடது பக்கம் ஒற்றை சுழியாக இருந்து அதுவும் வலது பக்கம் சுழன்று இருந்தால் உங்கள் வாழ்க்கை மிகவும் போராட்டமாகத்தான் இருக்கும். சிறுவயது முதலே மிகவும் கஷ்டமான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இது நிரந்தரம் அல்ல. உங்களது பெரிய வயது வரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைவீர்கள். உங்களின் பாதி வாழ்க்கை போராட்டம் உள்ளதாகவும், பாதி வாழ்க்கை இன்பமானதாகவும் இருக்கும். போராடி ஜெயித்தவர்கள் பட்டியலில் இடதுபக்க சுழிஉள்ளவர்களும் அடக்கமாவார்கள்.

thalai-suzhi2

இடது பக்கத்தில் ஒற்றைச் சுழிக்கு பதிலாக இரட்டை சுழி இருந்தால் அதுவும் அவை இடப்புறமாக சுழிந்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான துன்பத்தை அனுபவிப்பீர்கள். சொல்லப்போனால் நாய் படாத பாடு என்றும் கூட சொல்லலாம். எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதற்காக பெரிய அளவில் போராடித்தான் அதனை நீங்கள் பெற முடியும். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் மிகவும் போராட்டமாகத்தான் அமைந்திருக்கும்.

suzhi

தலையில் ஒருவருக்கு சுழிகள் வலது இடது என்று ஆங்காங்கே இருந்தால் சிறிது காலம் துன்பமும், சிறிது காலம் செல்வாக்கும் என மாறி மாறி வந்து கொண்டிருக்கும். வாழ்க்கை எப்போதும் ஏற்றத் தாழ்வாக தான் சென்று கொண்டிருக்கும் நிரந்தரமான நிலை என்று இருக்காது.

- Advertisement -