சுருள் சுருளாக இருக்கும் முடி, அடர்த்தியற்ற மெலிந்த முடி, வறண்ட மற்றும் சொரசொரப்பான தலைமுடி உள்ளவர்கள் இந்த 2 பொருட்களை இப்படி செய்தால் ஒரே மாதத்தில் கருகருவென்று அடர்த்தியான முடியை பெற்று விடலாம்!

hair-fall-olive-oil
- Advertisement -

எல்லோருக்குமே தன்னுடைய முடி ரொம்பவே மிருதுவாகவும், நல்ல திடமான அடர்த்தியுடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆண்களோ, பெண்களோ முடி உதிர்வதை ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்வது இல்லை. ஓரளவுக்கு மேல் முடி உதிர்வது ஆரம்பிக்கும் பொழுதே, நீங்கள் உங்களுடைய தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கா விட்டால் நாளடைவில் அது மிகப் பெரிய பிரச்சனையாகி வந்து நிற்கும்.

மெலிந்த முடி உடையவர்கள், சொரசொரப்பான மற்றும் வறண்ட கூந்தல் கொண்டவர்கள், சுருள் சுருளான முடியை விரும்பாதவர்கள் அனைவரும் இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி ஒரு பேக் போல வாரம் ஒரு முறை உங்கள் தலையில் போட்டுக் கொண்டால் ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும். அடர்த்தியான கூந்தல் பெறுவதற்கு இந்த இரண்டு பொருட்கள் எந்த வகையில் உதவுகிறது? இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

வேகமாக உதிரும் தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனர் போல செயல்படக் கூடிய ஆலிவ் எண்ணெயில் பல தரப்பட்டது விற்பனைக்கு இருக்கும். அதில் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தலைமுடி உதிர்வை வேகமாக நிறுத்துகிறது. அதனுடன் முட்டையில் இருக்கும் புரத சத்துக்கள் அடர்த்தியான தலை முடி வளர்வதற்கு உதவுகிறது.

இதற்காக நாம் பயன்படுத்த போக இருக்கும் இந்த இரண்டு பொருட்களை இந்த வகையில் பயன்படுத்த வேண்டும்! முதலில் 2 முட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். முட்டையில் இருக்கும் வெள்ளை கரு இப்போது நமக்கு தேவையில்லை. மஞ்சள் கருவை நன்கு பீட்டர் கொண்டு பீட் செய்ய வேண்டும். முட்டையை 5 நிமிடம் தொடர்ந்து பீட் செய்தால் அதாவது கரண்டியை வைத்து அடித்து நன்கு கலக்கிக் கொண்டு இருந்தால் முட்டையின் மஞ்சள் கரு கிரீமி பதத்திற்கு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெர்ஜின் ஆலிவ் ஆயில் விட்டு நன்கு கலக்க வேண்டும். ஐந்து நிமிடம் பின்பு மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அப்போது கெட்டியான பதத்திற்கு முட்டை கிடைக்கும். முதலில் உங்களுடைய தலை முடியை லேசாக சாதாரண ஷாம்புவை கொண்டு எப்போதும் போல அலசிக் கொள்ளுங்கள். பின்பு ஈரத் தலையுடன் அப்படியே இந்த கலவையை தலை முடி முழுவதும் வேர்களிலிருந்து தடவி, நுனி வரை பூசிக் கொள்ளுங்கள். பின்னர் ஷவர் கேப் அல்லது ஏதாவது ஒரு கவர் போட்டு 30 நிமிடங்கள் அப்படியே காய விட்டு விடுங்கள்.

30 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் அதே மாதிரி மைல்டான ஷாம்பு அல்லது ஷாம்பூவை தண்ணீரில் கலந்து தலையை அலசுங்கள். இதனால் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் நேரடியாக உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயத்தில் நீங்கள் போட்டிருக்கும் இந்த பேக்கில் புரதச்சத்து, நீர்ச்சத்து, இதர சத்துக்கள் அடங்கி உள்ளதால் உங்கள் முடிக்கு வேகமாக நல்ல பலன் கொடுத்து சிறந்த கண்டிஷனர் போலவும் செயல்படும். ஒரு மாதத்திற்கு வாரம் ஒரு முறை போட்டு பாருங்கள். நீங்களே அடிக்கடி போட ஆரம்பித்து விடுவீர்கள்.

- Advertisement -