நிலை வாசலில் மறந்தும் கூட இந்த ஒரு பொருளை மட்டும் வைக்காதீங்க. உங்கள் வீட்டிற்குள் தரித்திரம் விரைவாக வர இதுவும் ஒரு காரணம்தான்.

vasal
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும். சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், நாம் ஒரு சில விஷயங்களை செய்யவே கூடாது. நமக்கு தெரியும், இந்த விஷயங்கள் எல்லாம் தரித்திரத்தை தரும் என்று. ஆனாலும் ஏனோ தெரியவில்லை நம்முடைய கெட்ட நேரம், அந்த விஷயத்தை நம்மை செய்ய தூண்டும். கெட்ட நேரத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை கொஞ்சம் சிரமப்பட்டு தவிர்த்து தான் ஆக வேண்டும். அந்த வரிசையில் நிலை வாசலுக்கு முன்பு எந்தெந்த பொருட்களை நாம் வைக்கவே கூடாது. எந்தெந்த பொருட்கள் எல்லாம் நமக்கு தரித்து தரும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நிலைவாசல் முன்பு இருக்கக் கூடாத பொருள்:
முதலில் நிலை வாசலுக்கு வெளியே தேவையற்ற எந்த பொருளையும் போட்டு வைக்கக்கூடாது. நிலைவாசல் சுத்தமாக இருக்க வேண்டும். நிலை வாசலை தினமும் கூட்டி, துடைத்து வைக்க வேண்டும். நிலை வாசலில் தினமும் கோலம் போடப்பட வேண்டும். ஓடாத சைக்கிள், உதவாத துடைப்பம், ஓடாத பைக், பயன்படுத்தாத எல்லா பொருட்களையும் நிலை வாசலில் இருக்கக்கூடிய இடத்தில் போட்டு வைக்க கூடாது. விராண்டா என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த இடத்தில் அவ்வளவு அடைச்சல் சில பேர் வீட்டில் இருக்கும். தேவையில்லாத பொருட்களை எல்லாம் கொண்டு வந்து அங்கே சேர்த்து வைப்பார்கள். இது கட்டாயம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்த்து விடும்.

- Advertisement -

வீட்டில் நிறைய ஜாமான்கள் இருக்கலாம். எல்லா சாமான்களையும் நாம் பயன்படுத்தலாம். ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு பொருள், ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது என்பது தவறு. உதாரணத்திற்கு தையல் மிஷின், சைக்கிள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கடிகாரம் இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் இயங்கிக் கொண்டு இருக்கக்கூடியவை. அவை இயங்காமல் ஒரு மாதம், ஒரு மூலையில் கிடைக்கிறது என்றால், அந்த பொருட்களை வீட்டிலிருந்து உடனே அகற்றி விடுங்கள். பயன்படாத பொருளை வீட்டில் வைக்காதீர்கள்.

மிக மிக முக்கியமான விஷயம் நிலை வாசலுக்கு வெளியில் அழகுக்காக ஒரு உருளியில் பூ போட்டு வைப்பது வழக்கமாக இருக்கும். அந்த உருளியை நிலை வாசலுக்கு நேராக வைக்காதீங்க. நிலை வாசலுக்கு நேராக நம்முடைய வீட்டில் தண்ணீர் தேங்கக் கூடாது. அது நம்முடைய வீட்டிற்கு நல்லது அல்ல. நிலை வாசலுக்கு ஓரத்தில், வலது கை பக்கம் அல்லது இடது கை பக்கம் இப்படி உருளி வைக்கலாம். அது நல்லது.

- Advertisement -

நிலை வாசலுக்கு வெளியே எல்லோர் வீட்டிலும் போடக்கூடிய விஷயம் மேட், மிதியடி. இந்த மிதியடிக்காக எப்போதுமே கிழிந்த துணிகளை நாம் பயன்படுத்தக் கூடாது. கிழிந்த துணியை நிலை வாசலுக்கு வெளியேவோ, நிலை வாசலுக்கு உள்ளேயோ கால்மிதிக்க போட்டால், அது வீட்டிற்கு மிக மிக தரித்திரத்தை உண்டு பண்ணும். கூடுமானவரை பழைய துணிகளை வாசலில் கால் மிதிப்பதற்கு போடாதீங்க. வீட்டிற்கு உள்ளேயும் கால் மிதிப்பதற்கு பழைய கிழிந்த நைட்டி, பழைய கிழிந்த பாவாடை இவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கிழிந்த இந்த ஆடைகளை வீட்டிற்குள் வைத்து கால் மிதிக்க பயன்படுத்தினாலும் அது நமக்கு தரித்திரத்தை உண்டு பண்ணும். பழைய துணிகளை தீயில் போட்டு எரிப்பது சிறந்தது. இல்லை என்றால் மூட்டை கட்டி குப்பையில் போட்டு விடுங்கள். வேறு வழி கிடையாது. ஓடும் தண்ணீரில் பழைய துணிகளை விடும்போது நீரில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது. ஆகவே அந்த தவறையும் இனி நீங்க செய்யாதீங்க.

இதையும் படிக்கலாமே: இன்று சனி பெயர்ச்சி! காகத்திற்கு உங்கள் கையால் இந்த உணவை வைத்துவிட்டால், இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களை எந்த ஒரு தோஷமும் தாக்காது.

நமக்கு எல்லாம் வாழ்வாதாரத்தை கொடுக்கும் நீர் நிலைகளை நம் கையால் அசுத்தப்படுத்துவதும் ஒரு பாவம்தான். இப்படி சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து கடைபிடிப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவி நிலையாக குடி இருப்பாள் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால் கடைபிடித்து பின்பற்றலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -