பள்ளி செல்லும் இளம் பெண்கள் தலையில் கொத்துக்கொத்தாக பேன் இருக்கிறதா? என்ன செய்தாலும் போகமாட்டேன் என்கிறதா? அப்படின்னா இதை செஞ்சு பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இருக்கவே இருக்காது!

pen-thollai-vaseline
- Advertisement -

பெரியவர்களை விட இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த பேன் தொந்தரவு அதிகரித்தால் நாளடைவில் தலைமுடியை மொத்தமாக இழக்க வேண்டி இருக்கும். தலை முடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு வகையான இந்த சிறிய ஒட்டுண்ணி மனிதர்கள் மூலம் இன்னொரு மனிதர்களுக்கு பரவக்கூடியதாக இருக்கிறது. தொந்தரவு அதிகம் இருப்பவர்களுக்கு தலைமுடி மட்டுமல்ல, முகத்தில் முகப்பருவும் அதிகரித்து காணப்படும். பேனால் ஏற்படக்கூடிய ஒரு வகையான திரவம் தலைமுடியில் காணப்படும். தலையை சொரிந்து விட்டு பின் முகத்தை தொட்டுவிட்டால் முகத்தில் தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் அதிகரிக்க துவங்கி விடுகிறது எனவே பேன் அதிகம் இருப்பவர்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கொத்து கொத்தாக தலையில் இருக்கும் இத்தகைய பேன் தொல்லையை எப்படி எளிதாக நீக்குவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சருமத்தை பாதுகாக்க கூடிய ஒரு வகையான பெட்ரோலியம் ஜெல்லி வாஸ்லின் என்று அழைக்கப்படும். இந்த வாஸ்லின் சிறியது முதல் பெரியது வரை நிறைய வடிவங்களில் கிடைக்கிறது. உதடு வெடிப்பு, வறட்சியை போன்றவற்றிலிருந்து தக்க வைத்துக் கொள்ளவும் வாஸ்லின் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாஸ்லினை நீங்கள் இரவு தூங்கப் போகும் முன்பு உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் மட்டும் நன்கு எல்லா இடங்களிலும் படுமாறு தேய்த்து விடுங்கள். பின்னர் அப்படியே தூங்கி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து தலை முழுவதும் தேங்காய் எண்ணெயால் தடவி கொடுங்கள். பின்னர் பேன் சீவ பயன்படுத்தும் சீப்பு கொண்டு தலையை சீவினால் எல்லா பேனும் வழிந்து வந்து விடும். பெட்ரோலியம் ஜெல்லியின் வாசனை மற்றும் அதில் இருக்கும் மூலக்கூறுகள் பேனை தலையில் தங்க விடாது.

- Advertisement -

தலைக்கு குளிப்பதற்கு முன்னர் ஒரு ஐந்து பூண்டு பற்களை எடுத்து நன்கு இடித்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் தலை முழுவதும் மசாஜ் செய்து தலைக்கு குளித்து விட்டால் ஒரு பேன் கூட உங்கள் தலையில் இருக்காது. பூண்டின் வாசனை கொஞ்சம் கூட பேனுக்கு பிடிக்காது. அது அசௌகரியமாக உணர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து முடியை நோக்கி நகர செய்யும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அது முடியிலிருந்து வெளியில் வந்துவிடும்.

சமையலுக்கு பயன்படுத்தும் வினிகர் மற்றும் உப்பு ஆகியவற்றை சம அளவிற்கு எடுத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் போட்டு கலந்து கொள்ளுங்கள். பின்னர் தலையின் வேர்க்கால்களில் ஸ்பிரே செய்து அப்படியே ஊற விட்டு விடுங்கள். ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து தலைக்கு வழக்கம் போல நீங்கள் ஷாம்பு போட்டு குளித்தால் ஒரு பேனும் உங்கள் தலையில் இருக்காது.

- Advertisement -

ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றுங்கள். அதனுடன் சூடம் எனப்படும் கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். மிதமான சூட்டில் தலைக்கு தேங்காய் எண்ணெயை முழுவதுமாக அப்ளை செய்து இரவு நேரத்தில் அப்படியே ஊற விட்டு தூங்கி விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து தலைக்கு குளித்தால் ஒரு பேன் கூட தலையில் இருக்காது. கற்பூரத்தில் இருக்கும் ஆண்டிபாராசிடிக் எனும் வேதிப்பொருள் பேனை தலையில் இருக்க செய்யாது.

தலைமுடி வேகமாக வளர, இது தலை முடியில் இருக்கும் தொற்றுகள், பேன், கிருமிகள் போன்றவற்றை நீக்க வேப்பிலை மற்றும் துளசி சாறை சம அளவிற்கு தலைமுடி முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து ஊற வைக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

- Advertisement -