தலையில் வைக்கும் பூவை பெண்கள் தப்பி தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்! உங்கள் கையில் பணம் சேரவே சேராது.

flower-cash

இயற்கையிலேயே பெண்களுக்கு கூந்தல் மணம் உடையதாக இருக்கின்றது என்று புராணங்கள் வாயிலாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய மணமான வாசம் மிகுந்த கூந்தலுக்கு மேலும் மணம் சேர்க்க பூச்சூடி அழகு பார்க்கிறோம். பெண்களுடைய அழகிற்கு தங்களது தலையில் வைத்துக் கொள்ளும் பூக்களும் ஒரு காரணமாக இருக்கும். தலை நிறைய பூ வைத்து கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே அழகு கூடி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

malli-poo

பூ எவ்வளவு விலையாக இருந்தாலும் வெளியில் செல்லும் போது தலையில் பூ சூடாமல் சென்றால் உங்களுக்கு அன்றைய நாளில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. தினமும் வைக்க முடியாவிட்டாலும், நல்ல நாள், விசேஷம், வெளியில் செல்கிறோம் என்கிற பொழுது நிச்சயம் தலையில் பூச்சூடி கொள்வது எல்லா பெண்களும் விரும்பும் ஒரு விஷயமாகும்.

பூ வாங்கிக் கொடுக்காத கணவன்மார்களை பெண்கள் மதிப்பதே இல்லை என்கிறது ஒரு ஆய்வு. இவ்வாறாக பெண்கள் அதிகம் விரும்பும் பூவை தலையில் சூடிக் கொள்ளும் பொழுது எவ்வளவு பிரஷ்சாக இருக்கிறதோ! அந்த அளவுக்கு அவர்களுடைய அன்றைய பொழுதும் சிறப்பாகவே கழியும்.

mallipoo

தலையிலிருந்த பூவை ஒரு சிலர் வாடுவதற்கு முன்னரே எடுத்து தூக்கி வீசுவது உண்டு. அல்லது குப்பையில் போட்டு விடுவார்கள். இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள். தலையில் சூடிய பூ முழுமையாக காய்ந்து போகும் வரை அதை தலையில் இருந்து எடுப்பது என்பது தவறான செயலாகும். பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் என்பது ஐதீகம் உள்ளது.

- Advertisement -

நிறைய பேர் ஒரு நாள் இருந்து விட்டு வாடிப் போகும் பூக்களுக்கு எதற்காக இவ்வளவு காசு கொடுத்து வாங்க வேண்டும்? என்கிற மனநிலையில் இருப்பார்கள். உண்மையில் பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் பூக்களுக்கு பின்னால் பண சேர்க்கைக்கு உரிய தாந்திரீகம் உண்டு. ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது என்கிறது சாஸ்திரம்.

money

அது போல் பெண்களுடைய தலையில் இருக்கும் பூக்கள் வாடுவதற்கு முன்னரே எடுத்து விட்டால் நிச்சயம் கையில் பணமே தங்காது. காய்ந்த பின்னர் எடுத்து தூக்கி குப்பையில் வீசி கொள்ளலாம் அதில் தவறில்லை. அதே போல தலையில் இருக்கும் பூவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் வைத்துக் கொள்வதும் தவறான செயலாகும்.

flower-poo

ஒரு முறை தலையில் வைத்த பூவை எந்த காரணத்தைக் கொண்டும் காய்வதற்கு முன்னர் மீண்டும் எடுத்து விடக்கூடாது என்பது தான் ஐதீகம். அப்படி நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்கள் கைகளில் பணம் சேர்வது தடைபடும். பூக்களுக்காக செலவு செய்வதற்கு தயங்கினால் ஒரு முழம் பூ கூட வாங்க முடியாத வறுமையான நிலைக்கு தான் நாம் தள்ளப்படுவோம். அதற்காக தினமும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

malligai poo

நல்ல நாள், விசேஷங்கள் வரும் பொழுது தலை நிறைய பூச்சூடி மங்களகரமான முகத்துடன் இருந்து பாருங்கள். உங்களிடம் பணவரவு தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக திருமணமான புது மணப்பெண்கள் தலை நிறைய பூ இல்லாமல் வெளியில் எங்கும் செல்லாதீர்கள். வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வாங்கிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துங்கள். நாம் எவ்வளவோ வீணாக செலவு செய்யும் பொழுது ஒரு முழம் பூவில் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை.

இதையும் படிக்கலாமே
தினம் தினம் இனி உங்களுக்கு வெற்றி மட்டும்தான்! தினசரி வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி தர சூரிய பகவானுக்கு காலையில் இப்படி வணக்கம் சொல்லிப் பாருங்களேன். அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.