தினம் தினம் இனி உங்களுக்கு வெற்றி மட்டும்தான்! தினசரி வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி தர சூரிய பகவானுக்கு காலையில் இப்படி வணக்கம் சொல்லிப் பாருங்களேன். அதிசயம் நடக்கும்.

surya-bhagavan2
- Advertisement -

உங்களோட வாழ்க்கையில் ஒரு நாளைக் கூட வீணாக்கக் கூடாது என்று நினைப்பவர்களா நீங்கள்! எப்படியாவது முன்னேறிய ஆகவேண்டும் என்ற துடிப்புடன், போராட்டத்தோடு தினசரி நாளை தொடங்குவீர்களா? ஆனாலும், ஏதாவது ஒரு பிரச்சனை தினசரி நாளை கெடுப்பதற்காக வந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த பிரச்சனையை தடுக்க என்ன வழி? அட, ஒரு நாள விட்ருங்க! உங்க வாழ்க்கையோட முன்னேற்றத்திற்காக ஒரு நிமிஷத்தை கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முற்றிலும் உங்களுக்கான பதிவு தான் இது. காலை எழுந்த உடனேயே இதை செய்து விடுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவும் இதை செய்ய மறக்காதீர்கள்.

தினசரி வாழ்வில் நாம் செய்யக்கூடிய இரண்டு முக்கியமான வழிபாட்டு முறைகள் என்னென்ன. நிறைய பேருக்கு இந்த வழிபாட்டு முறைகள் தெரிந்திருக்கலாம். இருப்பினும் சரியான முறையில் இதை எப்படி செய்வது தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளப் போவது சூரிய நமஸ்காரம். அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் நமக்காக வலியுறுத்தி சொல்லக்கூடிய, வழிபாட்டு முறைகளில் சூரிய நமஸ்காரமும் ஒன்று. ஒரு நாள் முழுமையாக நிறைவடைய வேண்டும் என்றால், ஒரு மனிதன் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்தாலே போதும். அந்த நாள் அவனுக்கு நிறைவான நாளாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது.

surya-namaskar1

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, கிழக்கு பக்கமாக நோக்கி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்த பின்பு, ‘ஓம் சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை மட்டும் உச்சரித்தால் கூட போதும். அதன் பின்பு குலதெய்வத்தை வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சூரிய நமஸ்காரம் செய்ய செல்லும் போதே ஒரு பித்தளை சொம்பு நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். சூரிய நமஸ்காரத்தை முடித்தபின்பு சூரிய பகவானை நோக்கியவாறு அந்த தண்ணீரை, இரண்டு கைகளாலும், சொம்போடு எடுத்து, சிறிதளவு பூமித்தாய்க்கு சமர்ப்பிக்க வேண்டும். அதாவது சொம்பில் இருக்கும் தண்ணீரில் இருந்து, சிறிதளவு தண்ணீரை தரையில் ஊற்ற வேண்டும்.

surya bhagavan

இவ்வாறாக தண்ணீரை தரையில் ஊற்றும் போது உங்களது பின்னங்கால்களை மட்டும் கொஞ்சம் தூக்கிக் கொள்ளுங்கள். பாதங்கள் தரையில் படும்படி இருக்குமல்லவா? கொஞ்சம் அந்த பாதத்தின் பின்னங்கால் மட்டும் பூமியில் படாமல் தூக்கிக் கொண்டு அதன் பின்பு தண்ணீரை கீழே சமர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை சூரியபகவானுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, இடது பக்கம் திரும்பவே கூடாது. வலப்பக்கமாக திரும்பி ஒரு பிரதட்சணம் செய்து விட்டு, அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று தீபமேற்றி விநாயகர் வழிபாட்டையும், குல தெய்வ வழிபாட்டையும் நிறைவுசெய்ய வேண்டும்.

hanuman

ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இரு கைகளையும் கூப்பி விநாயகப் பெருமானது பெயரை மனதார உச்சரித்து, உங்கள் குலதெய்வ பெயரை மனதார உச்சரித்து இன்றைய நாள் நல்ல நாளாக செல்ல வேண்டுமென்று சொல்லுங்கள் அவ்வளவுதான். இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அதன் பின்பு உங்களது தினசரி வேலையை தொடங்குங்கள். பின்பு பாருங்கள் அன்றைய தினத்தில் இருக்கக்கூடிய மாற்றத்தை. நிச்சயம் அந்த நாள் சிறப்பான நாளாக தான் அமையும் சந்தேகமே கிடையாது.

bairavar

சரி, அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக சென்றுவிட்டது. நன்றியை இறைவனுக்கு எப்படி செலுத்த வேண்டும். இரவு தூங்கும் போது பைரவரையும், அனுமனையும் மனதார வேண்டிக்கொண்டு நாளை பிறக்கக்கூடிய நாளையும் எனக்கு சிறப்பான நாளாக ஆக்கித் தர வேண்டும் என்றவாறு வேண்டுதலை வைத்துக்கொண்டு, தூங்க செல்ல வேண்டும். தினம்தோறும் இப்படி உங்களது வழிபாட்டை செய்து வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் எதிர்பாராத மாற்றங்கள் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கண்ணாடி முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைத்தோம்! ஆனால் இப்படியும் சில ரகசியங்கள் இருக்கிறதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -