- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval23-11-2024 கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

23-11-2024 கடன் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு

- Advertisement -

இன்று தேய்பிறை அஷ்டமி திதி. சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது அல்லவா. திதிகளில் எட்டாவது திதி அஷ்டமி திதி. அமாவாசை முடிந்த பிறகு வரும் எட்டாவது திதியை தான் வளர்பிறை அஷ்டமி திதியாகவும், பௌர்ணமி முடிந்து வரக்கூடிய எட்டாவது திதியை, தேய்பிறை அஷ்டமி திதி ஆகவும் கணக்கில் வைத்துக்கொண்டு, நாம் வழிபாட்டை மேற்கொள்கின்றோம்.

இன்றைய தினம் 23-11-2024 கார்த்திகை மாதம் வந்திருக்கக்கூடிய, தேய்பிறை அஷ்டமி திதியை பைரவ ஜெயந்தி அல்லது பைரவ அஷ்டமி என்று சொல்கிறார்கள். இன்றுதான் பைரவர் அவதரித்த தினம். நமக்கெல்லாம் புரியும்படி சொல்ல போனால் பைரவருக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளில் அவருக்கு பிடித்த நம்பரை கணக்கில் கொண்டு இந்த வேண்டுதலை, இந்த பிரபஞ்சத்திடம் நாம் வைக்கும் போது நாம் வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பதுதான் நம்பிக்கை.

- Advertisement -

அதன் அடிப்படையில் 8 என்பது பைரவருக்கு உரிய எண். பைரவரை வழிபாடு செய்ய வேண்டிய நேரம் மாலை நேரம். இன்று இரவு 8:00 மணிக்கு கணக்கு வைத்துக் கொள்வோம். இன்று இரவு எட்டு மணிக்கு, எட்டு முறை இந்த வார்த்தையை சொல்லி பைரவரிடம் நீங்கள் வேண்டுதல் வைத்தால், கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான ஆசீர்வாதத்தை அந்த பைரவ பெருமான் உங்களுக்கு கொடுத்து விடுவார். இன்று இரவு எட்டு மணிக்கு என்ன செய்யணும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

தேய்பிறை பைரவர் மிளகு பரிகாரம்

இன்று இரவு 8 மணிக்கு இதை செய்ய வேண்டும். கையில் முதலில் 8 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். ‘கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் பைரவா!’ என்ற வார்த்தையை எட்டு முறை சொல்லி விடுங்கள். முன்னாடி மண் அகல் விளக்கில் ஒரு கற்பூரம் ஏற்றி கையில் இருக்கும் மிளகை அந்த நெருப்பில் போட்டு, பொசுக்க வேண்டும். இந்த மிளகு நெருப்பில் வெடித்து சிதறுவது போல என்னுடைய கஷ்டமும் கடனும் வெடித்து சிதற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முழு நம்பிக்கையோடு இந்த வேண்டுதலை வையுங்கள். உங்களால் மிளகை கையில் வைத்துக்கொண்டு ’88 முறை கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் பைரவா’ என்ற வார்த்தையை சொல்ல முடிந்தாலும் சொல்லலாம். தவறு கிடையாது. எட்டு என்கின்ற வார்த்தைக்கு அத்தனை சக்தி இருக்கிறது. அதிலும் இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் சுமை குறையும்.

முதலில் உங்களுடைய ஆழ்மனதில் நம்புங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய கடன் பிரச்சனை நம்மை விட்டு விலகிவிடும், கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான வரத்தை அந்த பைரவர் நிச்சயம் நமக்கு கொடுப்பான். காவல் தெய்வமான பைரவர் நம்முடைய வாழ்க்கையும் பாதுகாப்பார் என்று நம்பி இந்த வழிபாட்டை செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்.

- Advertisement -

நம்பிக்கை இல்லாதவர்கள் பரிகாரத்தையும் செய்ய வேண்டாம். வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டாம். நிச்சயம் பலன் இருக்காது. வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கும் 99 சதவிகிதம் சக்தி இருக்கிறது என்றால், 1 சதவீதம் நம்பிக்கை இல்லாமல் போனாலும் சரி, 99 சதவீதம் நம்பிக்கையோடு பரிகாரம் செய்தும் பலன் இருக்காது. இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை ஞாயிறு வழிபாடு

மீண்டும் பைரவர் பிறந்த நாளில் நாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்‌. பைரவரை நம்புபவர்கள் என்றுமே கைவிடப்பட்டதில்லை. காவல் தெய்வமான பைரவர் உங்களையும் காத்தருள்வார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்