தனம் தானியம் பெருக தீப வழிபாடு

deepam
- Advertisement -

ஒருவர் அனுதினமும் கஷ்டப்பட்டு உழைப்பதற்கு காரணம் பணம் சம்பாதிப்பது என்றாலும் அந்த பணத்தை சம்பாதித்து முதலில் குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதை குறிக்கோளாகக் கொண்டுதான் செயலாற்றுவார்கள். அப்படிப்பட்ட அடிப்படை வசதிகளில் ஒன்றாக திகழ்வதுதான் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து தானியங்களும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தனம் மற்றும் தானியம் என்றென்றும் நம் வீட்டில் நிலைத்து நிற்க செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

வெள்ளிக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு வருவது மகாலட்சுமி பூஜை. தனம் தானியம் என்று அனைத்து விதமான செல்வங்களையும் பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக நமக்கு வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு வெள்ளிக்கிழமை அன்று மாலையில் எப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் மாலை ஆறு மணிக்கு ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு உரிய பொருட்களை முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது ஒரு மடங்கு. மண்ணால் ஆன ஒரு சிறிய பாத்திரத்தை தான் மடங்கு என்று கூறுகிறோம். இதை வாங்கி உப்பு கலந்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

இது நிறைய பச்சரிசியை நிரப்ப வேண்டும். இந்த பச்சரிசிக்கு நடுவில் ஒரு விரலி மஞ்சளை உள்ளே வைத்து விட வேண்டும். அந்த விரலி மஞ்சளுக்கு மேல் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் பச்சரிசிக்குள் வைத்து விட வேண்டும். இந்த இரண்டுமே வெளியில் தெரியாத அளவிற்கு வைக்க வேண்டும். பிறகு இதை மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்து பச்சரிசிக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி தாமரை தண்டு திரி அல்லது குபேர திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஏற்றிய இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை கூறி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் எரியட்டும். பிறகு தீபத்தை குளிர வைத்து விடுங்கள். இது அப்படியே அன்று இரவு முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது பச்சரிசியின் மேல் வைத்த தீபத்தை எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்து அந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு அந்த மண் பாத்திரத்தை தனியாக எடுத்து அதில் இருக்கும் பச்சரிசியில் ஏதாவது ஒரு உணவு தயார் செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தர வேண்டும். இந்த பச்சரிசியை வீணாக்க கூடாது. வேறு யாருக்கும் தரவும் கூடாது. சமைத்து வீட்டில் இருக்கும் நபர்கள் உண்ண வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தையும் மஞ்சளையும் பணம் மற்றும் நக இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட நம் வீட்டில் தனம் தானியம் அனைத்தும் நிலைத்து இருக்கும். அதோடு எந்த காரியத்தை நினைத்து தீபம் ஏற்றுகிறோமோ அந்த காரியமும் நடைபெறும்.

- Advertisement -