தங்க நகைகளை இதை மட்டும் செய்யாதீங்க! அழுக்கு படிந்த தங்க நகையும் பளபளன்னு பாலிஷ் போட்ட மாதிரி மின்னுவதற்கு இந்த காயை இப்படி செய்யலாமே!

gold-poosani
- Advertisement -

எப்பொழுதும் தங்க நகைகளை சுத்தமாகவும், பளிச்செனவும் வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. தங்க நகை பராமரிப்பில் தான் அதன் தரமும் அடங்கி இருக்கிறது. நீங்கள் பல காலங்களாக அணிந்து கொண்டிருந்த ஒரு நகையை நீங்கள் அடகு வைக்க சென்றாலும் சேதாரத்தை கழிப்பார்கள். அழுக்கு படிந்த நகைகளுக்கு சேதாரம் அதிகம் சேர்ப்பதை பார்த்திருக்கிறீர்களா? எப்பேர்பட்ட தங்க நகையையும் பளிச்சென மாற்றுவதற்கு இந்த காயை இப்படி பயன்படுத்த வேண்டும்! அது என்ன காய்? எப்படி பயன்படுத்த வேண்டும்? முறையாக தங்க நகையை பராமரிப்பது எப்படி? போன்ற பயனுள்ள வீட்டு குறிப்பு தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தங்க நகைகளை அணிந்து கொள்பவர்கள் அதன் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சரியான படி லாக் செய்யப்பட்டு உள்ளதா? அல்லது கழண்டு வந்து விடுமா? என்பதை எந்த அளவிற்கு பரிசோதித்து கொள்ள வேண்டுமோ, அந்த அளவிற்கு பரிசோதித்துக் கொள்கிறோம். இந்த தங்க நகைகளை நகையாக மட்டும் அல்லாமல் அதை ஒரு சொத்தாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

குண்டுமணி தங்க நகை ஆவது வீட்டின் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். இதனால் தங்க நகை அதிகம் சேரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளை நிற கட்டன் துணியில் தங்க நகைகளை வைத்து முடித்து பூஜை அறையில் பத்திரமாக ஓரிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் தங்க நகை சேர்க்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

ஒருமுறை தங்க நகைகளை அணிந்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் அதை சோப்பு நுரையில் லேசாக தேய்த்து பின்னர் மெல்லிய காட்டன் துணியில் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ளுமாறு துடைத்து பின்னர் ஒரு பனியன் துணியில் வைத்து பீரோவில் சேர்த்து விடலாம், இதனால் நீங்கள் மறுமுறை அதை அணிந்து கொள்ளும் பொழுது பளிச்சென அப்படியே இருக்கும்.

- Advertisement -

அழுக்கு படிந்த தங்க நகைகளையும், பளிச்சென மாற்றுவதற்கு பூசணிக்காய் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். பூசணிக்காயிலிருந்து கிடைக்க பெறும் சாற்றில் அரை மணி நேரம் உங்களுடைய தங்க நகைகளை போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பூந்திக் கொட்டையை பொடித்து பவுடராக்கி தண்ணீரில் கலந்து நுரை வர செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் ஊற வைத்த தங்க நகைகளை இதில் சேர்த்து லேசாக தேய்த்தாலே போதும், எல்லா விதமான அழுக்குகளும் நீங்கி பளிச்சென புதிய நகை போல உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
புதுசா வாங்கிய துணி கிழிந்து விட்டதா? ஊசி இல்லாமல், நூல் இல்லாமல், தையல் போட்ட தடமே தெரியாமல் அந்த கிழிந்த துணியை ஒட்ட வைக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

தங்க நகையை சரியாக பராமரிக்காவிட்டால் அதில் அழுக்குகளும், தூசுகளும் சேர்ந்து கொள்ளும். மேலும் சிகப்பு அல்லது பச்சை நிற வண்ணம் படியவும் வாய்ப்புகள் உண்டு. இது போல நமக்கு தங்க நகையின் மீது ஏற்பட்டால் தங்க நகை சேர்க்கை என்பது குறைய ஆரம்பிக்குமாம். அதனால் தான் தங்க நகையை எப்பொழுதும் சுத்தமாகவும், பளிச்செனவும், அழுக்குகள் சேராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் காசு கொடுத்து பாலிஷ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போல சாதாரணமான பொருட்களை வைத்து சுத்தப்படுத்தினாலே போதும், எப்பொழுதும் தங்க நகை பளிச்சென மின்னும்.

- Advertisement -