புதுசா வாங்கிய துணி கிழிந்து விட்டதா? ஊசி இல்லாமல், நூல் இல்லாமல், தையல் போட்ட தடமே தெரியாமல் அந்த கிழிந்த துணியை ஒட்ட வைக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

cloth
- Advertisement -

சில சமயம் நாம் வாங்கிய புது துணி கிழிந்து விடும். கிழிந்த இடத்தில் நூல் போட்டு தைத்தால் அந்த தடம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்காது. குறிப்பாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களில் துணி கிழிந்து விட்டால் அதை சரி செய்வது ரொம்ப ரொம்ப சிரமமான ஒரு விஷயம். உதாரணத்திற்கு சுடிதார் முன் பக்கம் கிழிந்து போய்விட்டால் அதை தைத்து போட்டால் அவ்வளவு நல்லா இருக்காது. கிழிந்த துணியை அடையாளம் இல்லாமல் ஒட்ட வைக்க எளிமையான சுலபமான ஒரு குறிப்பையும், கரண்ட் இல்லாமல் அயன் பாக்ஸ் இல்லாமல் கூட, மிக மிக சுலபமாக சுருங்கிய துணிகளை இஸ்திரி போட ஒரு பயனுள்ள வீட்டுக் குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கிழிந்த துணியை சரி செய்ய குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு திக்கான பேப்பர் 2, வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய கவர், அயர்ன் பாக்ஸ், இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும். எந்த அளவுக்கு துணி கிழிந்திருக்கிறதோ, அந்த அளவைவிட கொஞ்சம் பெரியதாக ஒரு வெள்ளை நிற கவர், அந்த வெள்ளை நிற கவருக்கு தகுந்தபடி ஒரு காகிதம் வெட்டி தயார் படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பெரிய அளவில் ஒரு வெள்ளை காகிதம் உங்களுடைய அயன் பாக்ஸுக்கு அடிப்பக்கம் எவ்வளவு நீளம் அகலம் இருக்கிறதோ அந்த சைஸில் திக்கான பேப்பர் தேவை. பிள்ளைகளின் பழைய புத்தகக் காகிதம் இருந்தால் கூட எடுத்துக் கொள்ளலாம். (உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு போட்டு தரக்கூடிய வெள்ளை நிற ட்ரான்ஸ்வரட் கவர் இருக்கும். அதை இதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

துணி கிழிந்திருக்கக் கூடிய இடத்தில் அடியில் முதலில் தயார் செய்த கவர், அந்த கவருக்கு அடியில் சின்ன சைஸில் இருக்கும் காகிதத்தை வைத்து விடுங்கள். இதை அப்படியே ஒரு டேபிளில் செட் செய்துவிட்டு, கிழிந்த துணிக்கு மேல் பகுதியில் திக்கான பெரிய காகிதத்தை வைத்து காகிதத்துக்கும் மேலே சூடு செய்த அயன் பாக்ஸை வைத்து இரண்டு நிமிடம் போல லேசாக தேய்த்தபடி வைக்க வேண்டும்.

அவ்வளவுதான். கிழிசலுக்கு அடியில் ஒரு வெள்ளை நிற கவர் வைத்திருக்கிறோம் அல்லவா. அது இந்த அயன் பாக்ஸிங் சூட்டில் உருகி அப்படியே துணியில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு அடியில் வைத்த காகிதத்தை மட்டும் பிரித்து எடுத்து விடுங்கள். உள்ளே இந்த கவர் ஒட்டி இருப்பதால் நமக்கு எந்த ஒரு டிஸ்டர்பன்ஸும் இருக்காது. வெளிப்பக்கம் கிழிந்த துணி அப்படியே அந்த கவர் ஓடு ஒட்டிக் கொள்ளும். எந்த அடையாளமும் தெரியாது. ஆனால், கிழிந்த துணியை சரியாக ஓட்டின படி வைத்து, அடியில் கவர் வைத்து மேலே மற்றொரு காகிதத்தை வைத்து அயன் பாக்சை வைத்து தேய்க்க வேண்டும். அதில் கொஞ்சம் கவனம் தேவை.

- Advertisement -

அயன் பாக்ஸ் இல்லாமல் கசங்கிய துணிகளை இஸ்திரிபோட எளிய வழி:
ஒரு குக்கரில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் குக்கரை மூடி, மேலே விசில் போட்டுக் கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு இந்த சூடான குக்கரை எடுத்து அப்படியே சுருங்கிய துணியின் மேல் வைத்து தேய்த்து கொடுத்தால் உங்களுடைய கசங்கிய துணி இஸ்திரி போட்டது போல கிடைக்கும்.

அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு நேராக அப்படியே, அந்த சூடான குக்கரை துணியில் வைக்காமல், அதை ஒரு முறை பழைய துணையின் மேல் வைத்துவிட்டு தேய்த்து, பிறகு நல்ல துணியின் மேல் வைத்து அயன் செய்ய தொடங்குங்கள். காரணம் குக்கருக்கு அடியில் இருக்கும் கருப்பு ஏதாவது புது துணியில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: ஃப்ரிட்ஜை ஒருமுறை இப்படி சுத்தம் செய்தால் வருடக் கணக்கு ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருந்து கெட்டவாடை வீசவே வீசாது. பாட்டி காலத்தில் வாங்கிய ஃபிரிட்ஜ் கூட பார்ப்பதற்கு அப்படியே புத்தம் புதுசு போல ஜொலிக்கும்.

குக்கரை மூடி இருப்பதால் உள்ளே இருக்கும் சூடு அவ்வளவு சீக்கிரத்தில் ஆறாது. குக்கரில் இருக்கும் சூடும் நீண்ட நேரத்திற்கு தாக்கு பிடிக்கும். ஒரு துணியை சுலபமாக இந்த குக்கரை வைத்து நம்மால் அயன் செய்து கொள்ள முடியும். அவசரத்துக்கு கரண்ட் இல்லை. ஆனால் சுருங்கிய துணியை அயன் செய்து ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது இந்த குறிப்பு கொஞ்சம் உதவியாக இருக்கும். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -