தங்க நகைகளை அடுத்தவர்களுக்கு இரவல் கொடுக்கலாமா?

mahalashmi8
- Advertisement -

நம்மிடம் இருக்கும் தங்க நகைகளை, நம் சொந்த பந்தங்களுக்கோ, தெரிந்தவர்களுக்கோ இரவலாக கொடுக்கலாமா? கூடாதா? இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக உங்களுடைய சொந்தத்திற்கு, உங்களுடைய தங்க நகையை இரவலாக கொடுத்து விட்டீர்கள்.

அதை திரும்பவும் வாங்கிய பிறகு அப்படியே, அந்த நகையை மீண்டும் நாம் அணிந்து கொள்ளலாமா. இதற்குப் பின்னால் ஏதாவது பிரச்சனை வருமா. இந்த கேள்விகளுக்கு உண்டான தெளிவான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

தங்க நகை இரவல் கொடுக்கலாமா

நம்ம வீட்டு தங்கத்தை அடுத்தவர்களுக்கு இரவல் கொடுக்கலாமா வேண்டாமா? என்று கேட்டால் பதில், கொடுக்கக் கூடாது என்பதுதான். நம் வீட்டு மகாலட்சுமியை அனாவசியமாக அடுத்தவர்கள் கையில் தூக்கி கொடுக்காதிங்க. ரொம்ப நெருங்கிய நண்பர் சொந்த பந்தங்கள் நம்மிடம் தங்க நகையை இரவலாக கேட்கும்போது, அப்போது நம்மால், நம் நகையை தர முடியாது என்ற வார்த்தையை சொல்லவே முடியாது. தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கி விடுவோம் நம்முடைய நகையை, இரவலுக்கு கொடுத்தும் விடுவோம்.

ஆனால் அந்த நகையை இரவல் கொடுத்து வாங்கிய பிறகு, நம்முடைய வீட்டில் சில பிரச்சனைகள் ஆரம்பிக்கும். நம் வீட்டு தங்கம் அடமானத்திற்கு செல்லும். இதற்கு காரணம் என்ன தெரியுமா. நம் நகையை இரவலாக வாங்கி சென்றவர்கள், அந்த நகையை அணியும் போது அவர்களுக்குள் வரும் ஏக்கம். இது இரவில் நகை.

- Advertisement -

இதுபோல ஒரு நகை நம்மிடம் இல்லை என்ற கஷ்டம் அவங்களுக்குள் வரும். அந்த கஷ்டத்துடன் நம் நகையை போட்டுவிட்டு, அதை நம்மிடம் திருப்பிக் கொடுக்கும் போது, அந்த தங்க நகை நம்மிடம் நிலையாக தாங்காது. ஒன்று அந்த நகை உடைந்து போகும், தொலைந்து போகும், இல்லை அடமானம் போகும். இல்லை விற்பதற்கு கூட வாய்ப்புகள் வந்துவிடும்.

இல்லைங்க என்னுடைய சொந்த பந்தம் அப்படி நினைக்காது. என்னுடைய தோழி, அப்படி நினைக்க மாட்டாள். நான் என்னுடைய நகையை இரவல் கேட்டால் தருவேன் என்று சில பேர் சொல்லலாம். எவ்வளவு நல்ல மனிதர்களாக இருந்தாலும் சரி, நம்மை விட, நம்முடைய சொந்த பந்தங்களோ நம்முடைய நண்பர்களோ, வசதியில் உயர்ந்து விட்டால், அதை பார்க்கும்போது ஒரு குட்டி ஏக்கம், குட்டி பொறாமை மனிதர்களுக்கு வருவது இயல்பு.

- Advertisement -

யாரோ பணக்காரரான கூட நமக்கு கஷ்டம் வராது. நமக்குத் தெரிந்தவன், நம் கூடவே இருந்தவன், நம்மோடு பைக்கில் சென்றவன், திடீரென்று காரில் போனால் நிச்சயம், கூட இருந்தவன் வயிறு எரியத்தான் செய்யும். சரி, இரவலாக நகையை கொடுத்து விட்டோம். பிறகு அந்த நகை நம் கைக்கு வந்துவிட்டது. இதை என்ன செய்வது.

முதலில் ஒரு மஞ்சள் தண்ணீரில் இந்த நகையை 10 நிமிடங்கள் போட்டு எடுக்க வேண்டும். பிறகு நல்ல தண்ணீரில் இந்த நகையை சுத்தமாக கழுவி விட்டு, இந்த நகையை சுத்தமான பசும்பாலில் முக்கி எடுத்து, பிறகு மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி ஒரு துணியைக் கொண்டு நன்றாக துடைத்து விடுங்கள். பிறகு ஒரு சிவப்பு துணியில் கொஞ்சமாக பச்சரிசி வைத்து, அதில் இந்த தங்க நகையை வைத்து, முடிச்சு போட்டு பூஜை அறையிலோ, பீரோவிலோ ஒரு நாள் முழுவதும் வைத்து விடுங்கள்.

பிறகு அந்த நகையை எடுத்து நீங்கள் அணிந்து கொண்டு கண்ணாடியில் ஒரு முறை உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் இரவலாக கொடுத்த தங்க நகைக்கு வந்த தோஷம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக பரிகாரம்

தங்க நகையை இரவலாக கொடுத்திருப்பார்கள். அந்த நகையை திரும்பவும் கேட்கும் போது பகைவரும். பகையோட அந்த நகையை திரும்பி வாங்கி இருப்போம். அந்த நகை நம்ம கையில் தங்காமல் போயிருக்கும். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு நடந்திருந்தால் கமெண்டில் பதிவு செய்யுங்கள். அடுத்தவர்களுக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -