என்னங்க தங்க நகையை கடையில் கொடுத்து பாலிஷ் போட பயமாக இருக்கா? இனி கொஞ்சமும் பயப்படாம உங்க பழைய நகையை நீங்களே பைசா செலவில்லாமல் பளிச்சென்று மாற்ற முடியும். இதோ அதுக்கான சூப்பர் ஐடியா

gold
- Advertisement -

நகையை பாலிஷ் போடுவது என்றாலே பெரும்பாலும் கவரிங் நகையை தான் போடுவார்கள் தங்க நகையை பாலிஷ் போட்டு பயன்படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும். அதை வெளியில் கொடுத்து பாலிஷ் போட பலருக்கும் பயமாக இருக்கும். இப்படி பாலிஷ் போட்ட தங்கத்தின் தரம் குறைந்து விடுமோ என்ற அச்சம் அல்லது பாலிஷ் போட கொடுக்கும் இடத்தில் அதை சரியாக செய்வார்களா என்ற எண்ணமும் இருக்கும். இந்த வீட்டு குறிப்பு பதிவில் எவ்வளவு பழைய தங்க நகையும் இப்ப புதுசா வாங்கின நகை போல ஜொலிக்க வைக்க ஒரு சூப்பரான ஐடியா இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

பழைய தங்க நகைகளை புதிய தங்க நகை போல மற்ற:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கோல்கேட் டூ பவுடர் (இதற்கு இந்த பவுடரை தான் பயன்படுத்த வேண்டும்) இவை இரண்டையும் அந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்த பிறகு, உங்களுடைய பழைய தங்க நகைகளை அதில் போட்டு 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு டூத் பிரஷர் வைத்து கொஞ்சமாக கோல்கேட் பவுடரை தொட்டு தேய்த்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நகை மின்ன தொடங்கி விடும்.

- Advertisement -

இதில் இன்னொரு முறையையும் நாம் பின்பற்றலாம். அதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடர் ஒரு ஸ்பூன், இரண்டையும் போட்டு லேசாக சூடு ஏறியதும் இந்த நகைகளை சுடு தண்ணீரில் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக சூடு ஆறிய பிறகு நகைகளை அந்த சூடு தண்ணீரில் இருந்து எடுத்து வேறு நல்ல தண்ணீருக்கு மாற்றிய பிறகு நீங்கள் டூத் பிரஷை வைத்து இந்த நகைகளை தேய்த்துக் கொடுக்க வேண்டும்.

நாம் ஏற்கனவே அதில் டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து இருப்பதால் நீங்கள் தேய்க்கும் போது அதிலிருந்து நன்றாக நுரை வர ஆரம்பிக்கும். இப்படி தேய்த்த பின் நகைகளை மற்றும் ஒரு தண்ணீரில் போட்டு நன்றாக அலசி துணி வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையிலும் உங்களில் பழைய தங்க நகைகள் புதிய நகைகள் போல் மாறி விடும்.

- Advertisement -

இந்த முறைகளில் தங்க நகையை சுத்தம் செய்யும் போது கல் வைத்து நகைகளை இப்படி சுத்தம் செய்ய பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. ஏன் என்றால் சூடான தண்ணீரில் நகையை சேர்க்கும் பொழுது கல் பதித்த இடங்கள் லேசாக இளகி கல் கீழே விழுந்து விடும். அது மட்டுமின்றி எப்போதும் தண்ணீர் கொதி நிலையில் இருக்கும் போது தங்கத்தை அதில் சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தாலும் தங்கம் இளகி விடும். இந்த இரண்டு கவனத்தில் வைத்துக் கொண்டு உங்கள் நகையை சுத்தம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: துணிகளில் சாயம் போகாமல் இருக்க துணி துவைக்கும் தண்ணீரில் இதை கொஞ்சம் சேர்த்துக்கோங்க. இப்படி மட்டும் துவைச்சீங்கன்னா எவ்வளவு நாள் ஆனாலும் துணி புதுசாவே இருக்கும்.

இந்தக் குறிப்பில் உள்ள தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக விலை கொடுத்து கடையில் பாலிஷ் செய்து அதில் தங்கத்தின் தரம் குறைந்து விட்டதா? என்ற ஐயப்பாடுடன் இருப்பதைவிட, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ரொம்பவே சுலபமாக இப்படி நம்முடைய பழைய நகைகளை புதிய நகைகள் போல் மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -