- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெண்கள் தங்க நகைகளை அணிவதற்கு முன்பாக இதெல்லாம் தவறாமல் செய்தாலே, தங்கம் வாங்கும் யோகம் தானாகவே...

பெண்கள் தங்க நகைகளை அணிவதற்கு முன்பாக இதெல்லாம் தவறாமல் செய்தாலே, தங்கம் வாங்கும் யோகம் தானாகவே உங்களை தேடி வரும் என்பது உறுதி.

- Advertisement -

தங்கம் நம்மிடம் நிலைக்காமல் போவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது சொர்ண தோஷம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷம் உள்ளவர்கள் எந்த நகை வாங்கினாலும் அவர்களிடம் நிலைக்காது. நகை வாங்கியவுடன் அடகு கடைக்கு சென்று விடுவது அல்லது தொலைந்து விடுவதும் இப்படியாக அந்த நகையை அணிவதற்காக சந்தர்ப்பமே இல்லாமல் போவதுடன் அதை ஒரு நாளும் போட்டு அழகு பார்க்க முடியாது. இந்த சொர்ண தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அதே போல நாம் கடைக்கு சென்று நகை வாங்குவோம், அது இறந்தவர்களின் நகை, விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் நகை, அல்லது கஷ்டத்தில் மன வருத்தத்தோடு அடமானம் வைத்து மூழ்கிப் போகும் நகை, கஷ்டத்திற்காக தங்களுடைய நகையை விற்பவர்களுடைய நகை இப்படி அடுத்தவர்களுடைய கஷ்டமும், திருடு போன நகை இன்னும் பல தோஷங்கள் உள்ளடங்கிய நகைகளும் இதில் அடங்கி இருக்கும் இது நமக்கு தெரியாது அல்லவா, இப்படியான நகைகள் நம் வீட்டிற்கு வந்தால் நகை கையில் தாங்காமல் போவதுடன், இது நம் குடும்பத்திற்கு பல துன்பங்களை ஏற்படுத்தும் என்று சொல்லபடுகிறது.

- Advertisement -

நம் வாங்கும் நகை, நம்மிடம் இருக்கும் நகை இந்த இரண்டின் தோஷங்களும் நிவர்த்தியாக இந்த எளிய பரிகாரங்கள் செய்யலாம் என்று சொல்ல படுகிறது அது என்ன வென்று பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்க நகை சேர செய்ய வேண்டிய பரிகாரம்:
நீங்கள் தங்கம் வாங்கிய உடனே அதை அப்படியே கொண்டு வந்து வைக்காமல், முதலில் கொஞ்சம் தண்ணீரில் பன்னீர் கலந்த பிறகு அந்தத் தண்ணீரில் இந்த நகைகளை அலசி எடுத்து சுத்தமாக துடைத்த பிறகு ஒரு தட்டில் மல்லிகைப் பூக்களை நிரப்பி அதன் மேல் வாங்கிய நகைகளை வைத்து வீட்டில் மகாலட்சுமி தாயார் அல்லது பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு அந்த நகை நீங்கள் அணிந்து கொண்டால் தங்கம் மேலும் மேலும் பெருகி கொண்டே போகும்.

- Advertisement -

நம் வாங்கும் தங்க நகைகளின் தோஷம் விலக இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்து கொள்ளுங்கள். இதற்கு வீட்டில் இருக்கும் தங்க நகையை எடுத்து ஒரு கிண்ணத்தில் (சிறிய குண்டு மணி தங்கம் இருந்தால் கூட போதும் ) போட்டு சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் தாமரை பூ, பன்னீர்ப் பூ, ஆவாரம் பூ இந்த மூன்று பூவையும் போட வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீரின் மேல் கை வைத்து, சொர்ண தேவதையை நினைத்து தோஷம் விலக என்றும் தங்கம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த நகைகளை அணிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: அட காசு கொடுக்காம தானே கிடைக்குது! அப்படின்னு இந்த 5 பொருட்களை யார் கையில் இருந்தும் இனாமாக வாங்காதீங்க. உங்கள் குடும்பத்தில் பெரிய கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த பரிகாரங்களை செய்வதின் மூலம் சொர்ண தோஷம் விலகுவதுடன், தங்கம் மேலும் மேலும் பெருகுவதகற்க்கான வாய்ப்புகள் அதிகரிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. நாம் பாடுபட்டு வாங்கும் நகை நம்மிடம் நிலைக்க இது போன்ற பரிகாரங்களை செய்து தங்கதை மேலும் சேர்த்து கொள்ளலாம் என்ற இந்த கருத்தோடு பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்