வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தங்கத்துடன் இந்த பொருட்களை சேர்த்து வையுங்கள்.

thangam thulasi
- Advertisement -

தங்கம் என்று சொன்னதும் தங்கம் போல் முகம் பிரகாசிக்கும் பெண்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். இதை தங்கள் ஆசைக்காக சேர்ப்பதற்கு பதிலாக தங்கள் சேமிப்பாக சிறுக சிறுக பெண்கள் சேர்த்து வைப்பார்கள். அவ்வாறு சேர்த்து வைத்தாலும் பலரால் அதை நிலையாக தங்களிடம் வைத்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்துடன் எந்த பொருட்களை சேர்த்து வைத்தால் தங்கம் சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளால் நமக்கு தங்கம் சேர்வது தடைப்படும். தங்கத்தை நாம் அணிந்த பிறகு அதை அப்படியே தங்கம் வைக்கும் பெட்டியில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் தங்கத்தில் தோஷம் என்பது ஏற்பட்டுவிடும். அப்படி வைப்பதற்கு பதிலாக நாம் அணிந்திருந்த தங்கத்தை உப்பு கலந்த மஞ்சள் நீரில் நன்றாக சுத்தம் செய்து தண்ணீரை துடைத்து விட்டு பிறகு நகை வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நகையில் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். அது மட்டும் அல்லாமல் தங்கத்தை நாம் நேரடியாக பீரோவிலோ அல்லது பெட்டிலோ வைக்காமல் அதில் ஒரு சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் தங்கத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது நகை அதிகமாக சேர நகையுடன் எந்த பொருட்களை வைக்க வேண்டும் என்று பார்ப்போம். நகை சேர வேண்டும் என்றால் நமக்கு பணம் சேர வேண்டும். பணத்திற்குரியவராக திகழக் கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்தது வாசனை நிறைந்த பொருட்கள். எந்த இடத்தில் நறுமணம் வீசுகிறதோ அந்த இடத்தில் சுக்கிர பகவானும், மகாலட்சுமி தாயாரும் வீற்றிருப்பார்கள் என்பது பலரும் அறிந்ததே.

அந்த வகையில் நாம் முதலில் எடுத்துக் கொள்ளும் பொருள்தான் பச்சை கற்பூரம். பச்சைக் கற்பூரத்திற்கு ஈர்ப்பு சக்தி என்பது அதிகம் இருக்கும். அதே போல் வாசனையும் அதிகம் இருக்கும். எந்த ஒரு இடத்தில் பச்சை கற்பூரம் இருக்கிறதோ அந்த இடத்தில் சுக்கிரனின் அருள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பச்சை கற்பூரத்தை நாம் தங்கத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது தங்கம் அதிகமாக ஈர்க்கப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக இதனுடன் நாம் சேர்த்து வைக்கக்கூடிய பொருள்தான் துளசி இலை. இந்த துளசி இலை மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி இலையை நாம் தங்கத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது ஸ்வர்ணலட்சுமி அங்கு வீற்றிருப்பாள்.

துளசியை வியாழன் அன்று மாலையில் பறித்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் 6 முதல் 7 மணிக்குள் மண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் வைக்க வேண்டும். உபயோகப்படுத்தாத புது விளக்கை கூட இதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதில் பச்சை கற்பூரத்தையும் துளசியையும் வைத்து நாம் நகை வைத்திருக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும். துளசி இலை எப்பொழுது வாடி காய்ந்து விடுகிறதோ அப்பொழுது புதிதாக வேறு துளசி இலையை வைத்துக் கொள்ளலாம். பச்சை கற்பூரம் எப்பொழுது கரைகிறதோ அப்பொழுது புதிதாக பச்சை கற்பூரத்தை அதில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபட்டால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் விலகும்.

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை நாம் வைத்திருக்கும் தங்கத்துடன் சேர்த்து வைப்பதன் மூலம் ஸ்வர்ணலட்சுமி நம் வீட்டில் குடியேறுவாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -