பழைய தங்க நகையை கூட இப்படி சுத்தம் செய்தால் புதிதாக வாங்கியது போல மாறி விடும். அப்புறம் இது பழைய நகை தான் என்று சொன்னால் யாரும் நம்ப கூட மாட்டார்கள்.

- Advertisement -

கவரிங் நகைகள் வெள்ளி நகைகள் என்று இவற்றையெல்லாம் சுத்தம் செய்ய நிறைய வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் தங்க நகையை பொருத்த வரையில் ஒரு முறை நாம் வாங்கினால் அதன் பிறகு அதை பராமரிப்பது கிடையாது. அது எத்தனை அழுக்காக ஆனாலும் அதை அப்படியே தான் பயன்படுத்திக் கொள்கிறோம் கொஞ்சம் அதில் அழுக்கு நீக்கி துடைத்து போட்டால் அப்போது வாங்கிய தங்கம் நகை போலவே பள பளப்பாக இருக்கும். ஆனால் அப்படி செய்ய நமக்கு கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்கிறது சுத்தம் செய்கிறேன் என்று அதில் சுத்தம் செய்யும் போது தங்கத்தின் மதிப்பு குறைந்து விடுமோ என்று கவலையும் வருவது இயல்பு தானே. ஏனென்றால் தங்கம் வாங்குவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை அல்லவா. இனி அந்த கவலை எல்லாம் உங்களுக்கு தேவையே இல்லை தங்கம் நகை எவ்வளவு அழுக்கேறி இருந்தாலும் இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்யும்போது புது நகை போலவே பளிச்சென்று இருக்கும். இப்போது இந்த பதிவில் தங்க நகை சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து அதில் ஒரு ஸ்பூன் லிக்விட், ( துணி துவைக்கும் அல்லது பாத்திரம் தேய்க்கும் எது வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ளலாம்) அரை ஸ்பூன் பேக்கிங் சோடா இரண்டையும் தண்ணீரில் சேர்த்து பிறகு தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு இந்த நகையும் அதில் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த நகை அந்த நீரின் சூட்டிலே அப்படியே இருக்கும் போது அதில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடும். இன்னொரு பவுலில் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே கொதித்து நன்றாக ஆறிய தண்ணீரில் இருக்கும் நகையை எடுத்து இந்த குளிர்ந்த நீரில் போட்டு விடுங்கள்.

சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரில் இருந்து நகையை எடுத்து ஒரு துணி வைத்து துடைத்து விடுங்கள். கழுவிய பிறகு இடுக்குகளில் அழுக்கு இருந்தால் மட்டும், பிரஷ் வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இந்த முறையிலே உங்கள் நகைகள் எல்லாம் கறை அழுக்கு நீங்கி புதிய நகைகள் போல் பளிச்சென்று மாறியிருக்கும்.

- Advertisement -

இந்த தங்க நகைகளை இப்படி சுடு தண்ணீரில் போடுவதால் தங்கத்திற்கு ஏதும் பாதிப்பு என்ற பயம் கொள்ள வேண்டாம். அப்படி எதுவும் நடக்காது. இதில் உள்ள அழுக்குகளை மட்டுமே இந்த முறை அகற்றும் தங்கத்திற்கு ஒன்றும் ஆகாது.

இதையும் படிக்கலாமே: 15 நாட்கள் ஆனாலும் அரைத்த இட்லி மாவு புளிக்காமல் இருக்க இதோ ஒரு புத்தம் புதிய ஐடியா.

தங்கம் புதிதாக தான் இருக்கிறது கொஞ்சம் அழுக்கு மட்டும் சேர்ந்து இருக்கிறது என்றால்டூத் பேஸ்ட் மட்டும் வைத்து பிரஷ் வைத்து தேய்த்தால் போதும் அழுக்கு நீங்கி விடும். இந்த இரண்டு குறிப்புகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பயன் படுத்தி உங்கள் தங்க நகைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்

- Advertisement -