தங்கம் சேர குலதெய்வ வழிபாடு

kuladheiva poojai
- Advertisement -

ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும் குலதெய்வத்தை வணங்குவதற்கு இணையாகாது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அதனால் தான் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை சென்று வழிபட்டு வர வேண்டும் என்ற பழக்கமும் இருந்து வருகிறது. குலதெய்வத்திடம் நாம் வைக்கும் அனைத்து வேண்டுதலையும் குலதெய்வம் நிறைவேற்றி விடும் என்றாலும் குறிப்பிட்ட வேண்டுதலுக்காக சில பரிகாரங்களை நாம் செய்ய வேண்டியது வரும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தங்கம் வீட்டில் சேர குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தங்க நகைகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதை அணிவதற்காக மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் பொழுது பிறரிடம் கடன் வாங்காமல் அந்த பொருளை வைத்து பணத்தை பெறலாம் என்பதற்காகவும் தான். அதோடு மட்டுமல்லாமல் பெண் குழந்தை இருக்கும் குடும்பத்தில் தங்கள் குழந்தையின் திருமணத்திற்காக சிறு வயது குழந்தையின் சிறு வயதில் இருந்தே சிறுக சிறுக தங்கத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

- Advertisement -

இப்படி தங்கம் தங்கள் வீட்டில் அதிகமாக சேர வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம். இந்த வழிபாட்டை எந்த நாட்களில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வத்திற்கு தங்களால் இயன்ற அளவு அபிஷேகங்களை செய்ய வேண்டும். அபிஷேக பொருட்களை வாங்கி தர வேண்டும். பிறகு சர்க்கரை பொங்கல் வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். மாவிளக்கு வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதையும் செய்யலாம். இப்படி அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு அங்கு பொறுமையாக இருந்து அபிஷேகத்தை பார்க்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு அபிஷேகம் நடக்கும் பொழுது தங்களிடம் இருக்கக்கூடிய தங்க நகையை அது சிறிய அளவாக இருந்தாலும் அதை குலதெய்வத்தின் பாதத்தில் வைக்க கொடுக்க வேண்டும். அபிஷேகம் முழுவதும் நடந்து முடிந்த பிறகு அந்த தங்கத்தை திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அன்று வீட்டிற்கு வந்து வீட்டு பூஜை அறையில் ஒரு தலைவாழை இலையைப் போட்டு அதற்கு நடுவில் பச்சரிசியை கொட்டி பூஜை செய்து வாங்கி வந்த நகையை அந்த பச்சரிசியின் நடுவில் வைத்து குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வழிபட வேண்டும். மறுநாள் அந்த நகையை எடுத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

குலதெய்வ கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை திதியில் இருந்து நான்காவது திதியான திரிதியை திதி அன்று வீட்டு பூஜை அறையில் வாழை இலையை விரித்து பச்சரிசியை நடுவில் வைத்து அதற்கு நடுவில் தங்கத்தை வைத்து குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு நிலம் வாங்க செய்ய வேண்டிய வழிபாடு

இப்படி குலதெய்வத்தை நினைத்து குலதெய்வ கோயிலுக்கு செல்லும் பொழுது அல்லது வீட்டிலேயே தங்கத்தை பச்சரிசிக்குள் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் படிப்படியாக தங்கம் சேர ஆரம்பிக்கும்.

- Advertisement -