தங்கம் என்கிற பெயரை சொன்னாலே முகத்தில் ஒரு வித புன்னகை மலர துவங்கி விடும். தங்கத்திற்கு அத்தகைய ஒரு சக்தி உண்டு தங்கத்தை அணிந்து செல்லும் பொழுது ஒரு வித கம்பீரத்துடனும் சந்தோஷத்துடனும் தான் செல்வார்கள். தங்கம் அத்தனை ஒரு சந்தோஷத்தையும் அந்தஸ்தையும் தரக் கூடியதாக இருக்கிறது. தங்கத்தை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதெல்லாம் சரி தான். இங்கு ஒரு குண்டுமணி தங்கத்திற்கே வழியில்லை இதில் தங்கத்தை முழுவதுமாக அணிந்து கொண்டு எங்கே செல்வது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தங்கம் நம்மிடம் சேராமல் போவதற்கும் தங்கம் வாங்க வேண்டிய சூழ்நிலை வராமல் இருப்பதற்கும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அவற்றில் குறிப்பாக ஸ்வர்ண தோஷமும் ஒன்று.
ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தங்கம் நம்மிடம் சேர்வதற்கான பரிகார முறையும், ஸ்வர்ண தோஷம் நீங்குவதற்கான வழிபாட்டு முறையும் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இவற்றை முறையாக பின்பற்றினாலே தங்கம் வாங்கக் கூடிய யோகம் நம்மிடம் உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
தங்கம் வாங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
தங்கம் நம்மிடம் சேர வேண்டும் எனில் முதலில் குரு பகவானின் அனுகிரகம் வேண்டும். ஜாதகத்தில் குரு பகவான் சரியான இடத்தில் இல்லை என்றால் தங்கம் வாங்குவதற்கான யோகம் இருக்காது. வீட்டில் தங்கமும் சேராது. ஆகையால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது தங்கம் சேர நாம் செய்யும் முதல் பரிகாரமாக ஆகும்.
அடுத்து வீட்டில் துளசி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. துளசியானது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவும் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. இருவருமே தங்கத்தை சேர்க்க கூடிய தன்மை கொண்டவர்கள். யார் ஒருவர் வீட்டில் துளசி பூஜையை முறையாக செய்கிறார்களோ? அங்கே தங்கம் இல்லை என்ற வார்த்தைக்கு வழியில்லை என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்யுங்கள் இதற்கு வியாழக்கிழமை உகந்த நாள் வியாழக்கிழமை செய்ய முடியாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை செய்யுங்கள். ஒரு சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு துளசி இரண்டையும் போட்டு விடுங்கள்.
அத்துடன் ஒரு சிறிய தங்க நாணயம் அல்லது நீங்கள் அணிந்திருக்கும் மோதிரம் போன்ற எதாவது ஒன்றை அதில் போடுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் நகையை போடுவதாக இருந்தால் ஒரு முறை அதை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு இந்த தண்ணீரில் போட வேண்டும். இப்போது பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இந்த தண்ணீரை உங்கள் வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையை கொண்டு பாத்திரத்தில் மேல் மூடுங்கள். அடுத்து தங்கம் சேர வேண்டும் என்று எண்ணத்துடன் இந்த ஒரு மந்திரத்தை சொல்ல துவங்குங்கள்.
ஓம் மகாலட்சுமி நமக
ஓம் குபேர லட்சுமி நமக
என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொன்ன பிறகு அந்த தண்ணீரை நீங்கள் நகையை வைக்கும் இடத்தில் தெளித்து விடுங்கள். ஒரு வேளை நகையே இல்லை என்றாலும் நகை வாங்கினால் இங்கு தான் வைப்போம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா அந்த இடத்தில் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.
தெளித்து மீதம் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இதே போல் வியாழன் தோறும் இந்த பரிகாரத்தை செய்து வரும் பொழுது தங்கம் வாங்குவதற்கான யோகம் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. வியாழக்கிழமை செய்ய முடியாதவர்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே: சண்டை சச்சரவுகள் நீங்க பைரவர் வழிபாடு
நம்முடைய உழைப்பு முயற்சிகளுடன் இதுபோன்ற பரிகாரங்களை செய்யும் பொழுது விரைவில் அதற்கான பலன் தம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம்.