சண்டை சச்சரவுகள் நீங்க பைரவர் வழிபாடு

bhairavar family
- Advertisement -

ஒரு குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இருக்கக் கூடாது. சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இப்படி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். அது உடனே சரியாகி விட்டாலும் பரவாயில்லை மாதக்கணக்காக, வருட கணக்காக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் மன வருத்தத்திலேயே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பைரவரை எந்த முறையில் வழிபட்டால் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றால் அந்த பிரச்சினைகளை நீக்குவதற்குரிய வழிகளை கண்டுபிடித்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்தாலும் அந்த பிரச்சனையிலிருந்து வெளியில் வர முடியவில்லை என்னும் பட்சத்தில் தெய்வீக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் நபர்களின் மனம் மாறி அவர்கள் மறுபடியும் திரும்ப பேச ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் பைரவர் வழிபாட்டை பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய கால பைரவருக்கு தான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். முதலில் காலபைரவரை வணங்கும் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக செவ்வரளி பூ மாலையை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டிலேயே துவரம் பருப்பு சாதம் தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு மாதுளம் பழத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் மாதுளம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதேபோல் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை முழம் செவ்வரளி பூக்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால் ஐந்து முழம் செவ்வரளி பூ, 5 மாதுளம் பழம் என்று வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது பைரவரின் சன்னதிக்கு சென்று செவ்வரளி மாலையை பைரவருக்கு சாற்ற சொல்லி கொடுக்க வேண்டும். பிறகு நாம் எடுத்து வந்த துவரம் பருப்பு சாதத்தையும் மாதுளம் பழத்தையும் பைரவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதற்கு அடுத்தார் போல் நம் வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அகல் விளக்கின் சுத்தமான நெய்யை ஊற்றி சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி ஏற்றி முடித்த பிறகு பைரவரை மனதார வழிபட்டு விட்டு அவரை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரவேண்டும். இந்த முறையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நாம் செய்து வர வீட்டின் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சண்டை சச்சரவாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி இன்பமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: விபத்துகள் நேராமல் இருக்க வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

- Advertisement -