உங்கள் வீட்டு தங்கம் அடிக்கடி அடமான கடைக்கு போகாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும். நிரந்தரமாக தங்கம் நிச்சயம் உங்கள் வீட்டில் தங்கும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதித்து அதை வைத்து ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது என்பது முடியாத விஷயம் ஆகிவிட்டது. காரணம் தங்கத்தின் விலை. புதியதாக நம்மால் தங்கம் வாங்க முடிகின்றதோ இல்லையோ நம்மிடம் இருக்கக்கூடிய தங்கத்தையாவது பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் என்பது அந்த தங்கத்திலும் இருக்கின்றது. வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் ஆவது நிச்சயம் இருக்க வேண்டும். வீட்டு பெண்களின் உடம்பில் ஒரு குண்டுமணி தங்கமாவது அணிந்திருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் காரணமாக தங்கம் அடிக்கடி அடமானத்துக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறதா, அல்லது அடமானம் வைத்த நகையை மீண்டும் மீட்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறீர்களா. இந்த குறிப்பு உங்களுக்காக மட்டும்.

முதலில் அடமானக் கடையில் வைத்திருக்கக் கூடிய தங்கத்தை மீட்பதற்கான வழியை பார்த்து விடுவோம். சில இடங்களில் தங்கத்தை கொண்டு போய் அடமானம் வைத்தால், நாம் வைத்த நேரமோ என்னமோ தெரியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அந்த குறிப்பிட்ட தங்க நகை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வருவோம். அடமான வைத்த நகைக்கு நிறைய வட்டியை வேற கட்டியிருப்போம். புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது தங்கத்தை அடமானம் வைத்த ரசீதையும் உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

அடமானம் வைத்த நகையை மீட்க வேண்டும் என்று மனதார முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் துளசி பிரசாதமும் தீர்த்தமும் நிச்சயமாக கிடைக்கும். கோவிலிலேயே உங்கள் கைக்கு வந்த துளசி பிரசாதத்தை அந்த அடமான சீட்டில் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். அடமான சீட்டை கசக்க வேண்டாம். லேசாக உள்ளே வைத்து சீட்டை நான்காக மடித்தால் போதுமானது.

அந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை மட்டும் எடுத்து நீங்கள் அடமானம் வைத்த சீட்டில் தெளித்து விடுங்கள். இதிலும் நிறைய தண்ணீரை எடுத்து சீட்டில் நனைத்து விடாதீர்கள். ரசீது கழிந்து விட்டால், அடமானம் வைத்த நகையை மீட்டுவதில் சிரமம் வந்துவிடும். பிறகு மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு வீட்டிற்கு வந்து உங்கள் கையில் இருக்கும் அடமான சீட்டை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நகையை எவ்வளவு தொகைக்கு அடமானம் வைத்திருக்கிறீர்களோ அந்த தொகையை சேமிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். அந்த பெருமாள், மகாலட்சுமியை மீட்டுக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் திரும்ப வைப்பதற்கு தேவையான உதவிகளை உங்களுடனே இருந்து நிச்சயம் செய்து தருவார். நீங்கள் வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை ஒரே ஒரு முறை நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்களேன். நம்ப முடியாத நல்லது கூடிய சீக்கிரம் நடக்கும்.

வீட்டில் இருக்கும் தங்க நகை ஒருபோதும் அடமானத்திற்கு செல்லக்கூடாது என்றால், அதற்கான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு கையில் எப்போதும் பணம் சேமிப்பு இருக்க வேண்டும். அவசர தேவைக்கு பணம் இல்லை என்றால் தான் நம்முடைய கண்கள், நம் வீட்டில் இருக்கும் நகை பக்கம் திரும்பும். இதற்கு நீங்கள் வாய்ப்பே கொடுக்கக் கூடாது. நீங்கள் அயராது உழைத்து பணம் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அனாவசிய செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்கும் போது, நம் வீட்டில் இருக்கும் தங்கத்திற்கு எந்த பிரச்சனையும் வராது.

பீரோவில் இருக்கும் தங்க நகைகள் எப்போதும் வாசமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் பச்சை கற்பூரம் பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி வரப்பட்ட துளசி இலைகள், கிராம்பு, பட்டை, போன்ற வாசனை பொருட்களை அந்த இடத்தில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். சில பேர் தங்கத்தை மிகவும் பத்திரப்படுத்தி வைக்கின்றேன் என்று லாக்கருக்குள் போட்டு பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடுவார்கள். அந்த தங்க நகைகள் தூசி படிந்து அழுக்கு படிந்து பூசனம் பிடித்து அப்படியே கிடக்கும். இப்படிப்பட்ட அசுத்தமான இடத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க விரும்ப மாட்டாள்.

இதே போல கவரிங் நகைகளோடு தங்க நகைகளை அணியும் வழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தங்க நகைகளோடு கவரிங் நகைகளை சேர்த்து பீரோவில் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது. வெள்ளி நகைகளை எந்த அளவிற்கு நீங்கள் வாங்கி பயன்படுத்துகிறீர்களோ, அதைவிட அதிகமாக தங்க நகைகள் நம்மிடம் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -