வீட்டில் கிடு கிடுவென தங்கம் சேர வெள்ளிக்கிழமையில் வெள்ளியை என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? சுக்ர ஹோரையில் இதை செய்யுங்க நகை சேர்க்கை உண்டாகும்!

sukran-gold-silver
- Advertisement -

ஆடம்பர பொருட்களுக்கு காரகத்துவம் கொண்டவர் சுக்கிர பகவான் ஆவார். தங்கம், வைரம் போன்ற நகைகள் சேருவதற்கு சுக்கிர பகவானுடைய அனுகிரஹமும் தேவை. வீட்டில் கிடு கிடுவென தங்கம் சேர்ந்து கொண்டே செல்வதற்கும், நகை சேர்க்கை ஏற்படுவதற்கும் வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு என்ன செய்ய வேண்டும்? இதைத் தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவலாக நாம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

சுக்ர யோகம் பெற சுக்கிரனையும், மகாலட்சுமியின் அருளை அடைவதற்கு மகாலட்சுமியையும் இவ்வகையில் வெள்ளிக் கிழமையில் பூஜை செய்ய சகல யோகங்களும் கிட்டும், சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும், ஐஸ்வர்யம் நிலைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையில் இந்த எளிய பூஜையை தொடர்ந்து செய்து வாருங்கள், நிச்சயம் உங்களுடைய வீட்டில் செல்வ சேர்க்கை அதிகரிக்கும், குறிப்பாக நகை சேர்க்கை அதிகரிக்கும்.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கு உகந்த உலோகம் வெள்ளி ஆகும். வெள்ளியால் ஆன பொருட்கள் அனைத்திலும் சுக்கிர யோகம் உண்டாக கூடிய அதனை அம்சமும் நிறைந்துள்ளன. பெண்கள் எப்பொழுதும் வெள்ளியில் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு சுக்கிர யோகம் கிட்டுகிறது. ஒரு பெண் தங்க மோதிரம் அணிவதை விட, ஒரே ஒரு வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகம்.

எந்த ராசியினரும் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு உலோகம் வெள்ளி ஒன்றே ஆகும் எனவே வெள்ளி அணிவதற்கு எந்த விதமான சாஸ்திர சம்பிரதாயங்களும் கிடையாது. உங்கள் ராசிக்கு எந்த விரலில் அணிய வேண்டும்? என்பது போன்ற சில விஷயங்கள் இருக்கிறது ஆனால் எல்லா வயதினரும், எல்லா ராசியினரும் தயக்கமில்லாமல் வெள்ளியை அணிந்து சுக்கிர பலன் பெறலாம். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை என்பது நான்கு நேரங்களில் வரும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், பிறகு 8 மணி முதல் 9 மணி வரையிலும் சுக்கிர ஹோரை இருக்கும். அதே போல பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையிலும், 3 மணி முதல் 4 மணி வரையிலும் சுக்கிர ஹோரை இருக்கும். இதில் எந்த நேரத்திலும் நீங்கள் இந்த பரிகாரத்தை துவங்கலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். மகாலட்சுமியின் படத்தை முன்வைத்து ஒரு அகல் தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுவது சிறப்பு! பின்னர் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு வெள்ளி பொருட்களை பன்னீரில் நனைத்து கொள்ளுங்கள். கொலுசு, மோதிரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னர் ஒரு சிறிய அளவிலான தாம்பாலத்தில் வெற்றிலையை விரித்துக் கொள்ளுங்கள். அதன் மீது நீங்கள் பன்னீரில் நனைத்த வெள்ளி பொருளை வைக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் மஞ்சள் போட்டு அதில் பன்னீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மகாலட்சுமியின் 108 திருநாமாவளிகளையும் இப்பொழுது நீங்கள் உச்சரிக்க வேண்டும். 108 போற்றிகளில் ஒவ்வொரு வரியையும் உச்சரிக்கும் பொழுது மஞ்சளை கையில் எடுத்து அந்த வெள்ளியின் மீது லேசாக சொட்டு சொட்டாக தெளிக்க வேண்டும். இப்படி 108 முறையும் மந்திரத்தை உச்சரித்து, வெள்ளியின் மீது இவ்வாறு மஞ்சளை தெளித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வரும் பொழுது வீட்டில் கிடு கிடுவென தங்கம் சேர ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -