தங்க ஆபரணங்களை உங்களுடைய உடம்பிலிருந்து கழட்டுவதற்கு முன்பு கட்டாயம் இதை செய்ய வேண்டும். அப்போது தான் தங்கம் உங்களிடம் தங்கும்.

gold
- Advertisement -

நம் உடம்பில் நீண்ட நாட்களாக அணிந்து கொண்டிருக்கும் தங்க நகைகளாக இருந்தாலும் சரி, வெள்ளி நகைகளாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த நகைகளை கழட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாம் அணிந்திருக்கும் நகை ரொம்பவும் பழைசாகி சேதாரம் அடைந்து விட்டால், அதை மாற்றுவதற்காக கழட்டுவோம். கொலுசு போன்ற பொருட்கள் அறுந்து போய்விட்டால் அதை புதியதாக மாற்றுவதற்காக அந்த நகைகளை கழட்டி வைப்போம். இவை எல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்கள் தான். ஆனால் கஷ்டம் என்று வரும்போது உங்கள் உடம்பில் அணிந்திருக்கும் நகையை கழட்டி அடமானம் வைப்பது என்பது ரொம்பவும் சிரமமான விஷயம்.

எந்த சூழ்நிலையில் உங்களுடைய நகையை உடம்பிலிருந்து நீங்கள் கழட்டி வைப்பதாக இருந்தாலும் சரி, அந்த நகையை கழட்டுவதற்கு முன்பு இப்படி செய்து கொள்ளுங்கள். கழட்டிய நகைகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். சூழ்நிலை காரணமாக இந்த நகையை கழட்ட வேண்டிய நேரம் இப்போது.

- Advertisement -

கூடிய சீக்கிரம் இந்த நகையை நான் மீண்டும் அணிந்து கொள்ள வேண்டும் என்று 11 ரூபாயை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த நகையை நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம். அதாவது அடமானம் வைப்பதாக இருந்தால் வைக்கலாம். அல்லது அந்த நகையை மாற்றி விட்டு, புதிய நகையாக வாங்கி நீங்கள் போட்டுக் கொள்வதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.

நீங்கள் பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து முடிந்து வைத்த முடிச்சை குலதெய்வ கோவிலுக்கு போகும் போது, அப்படியே எடுத்து போய் உண்டியலில் செலுத்தி விட்டு வர வேண்டும். இந்த பரிகாரம் எதற்காக என்றால், நம் உடம்பை விட்டு நகை போனாலும், அந்த நகை மீண்டும் நம் கையில் வந்து சேர குலதெய்வத்தை பிரார்த்தனை செய்வதற்காக சொல்லப்பட்டுள்ள சின்ன பரிகாரம். இதை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் நகை அடமானத்திற்கு போயிருந்தாலும் அந்த நகையை சீக்கிரமே மீட்டு எடுத்து திரும்பவும் அணியக்கூடிய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும்.

- Advertisement -

அடமானம் வைத்த நகை மீண்டும் உங்கள் கைக்கு திரும்பவும் வந்துவிட்டது. என்ன செய்வது. முதலில் அதை மஞ்சள் தண்ணீரில் கழுவி, பன்னீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்து பூஜை அறையில் இருக்கும் குலதெய்வ படத்திற்கோ அல்லது வேற ஏதாவது சுவாமி படத்திற்கோ சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டு அதன் பின்பு அந்த நகையை எடுத்து நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு பரிகாரங்கள் நமக்கு சொல்லப்படுகிறது. எல்லா பரிகாரங்களும் எல்லாருக்கும் பலன் தருமா, என்று கேட்டால் நிச்சயம் அது சந்தேகத்திற்குரிய கேள்விதான். ஆனால் நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் பரிகாரமும், வழிபாடும் உங்களுக்கு பலனை நிச்சயம் கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -