இந்த தங்க நகை உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால், சந்தோஷமும் நிம்மதியும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்று விடும்.

- Advertisement -

ஒரு குண்டு மணி தங்கத்தால் ஒரு மனிதன் வாழ்க்கையில் மேலோங்கி உயர்ந்து செல்லவும் முடியும். அதே சமயம் ஒரு குண்டுமணி தங்கத்தால் ஒரு மனிதன் வாழ்க்கையில் வீழ்ச்சி அடையவும் முடியும். தங்கம் என்பது மனிதனின் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கத்தை வகிக்கின்றது. புதியதாக தங்கம் வாங்கினால் நம்முடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருமா. தோஷம் நிறைந்த தங்கம் நம் வீட்டிற்குள் வந்திருக்கிறது என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது. வாங்கிய தங்க நகையில் இருக்கக்கூடிய தோஷத்தை நாம் எப்படி நீக்குவது என்பதை பற்றிய சின்ன சின்ன ஆன்மீக ரீதியான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தங்கத்திற்கு தோஷமே இல்லை என்று சிலர் சொல்லுவார்கள். சில நேரங்களில் நம்முடைய குடும்பத்தில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு என்ன காரணம் என்று தெரியாது. புதியதாக நாம் ஒரு நகையை வாங்கி இருப்போம். அந்த நகையை வாங்கிய அடுத்த நிமிடத்தில் இருந்து நம்முடைய குடும்பத்தில் பிரச்சனை ஆரம்பித்து இருக்கும். பிரச்சனைக்கு காரணம் என்ன என்று நாம் பல விதங்களில் யோசித்து இருக்கலாம். ஆனால் அந்த தங்க நகை வாங்கியது நம் நினைவிற்கு வரவே வராது. சிலருக்கு சில தங்க நகைகள் வாழ்வில் வீழ்ச்சியை கொடுத்து விடும். (அப்படி உங்களுக்கு ஏதாவது சகுனம் தெரிந்தால் அந்த தங்க நகையை யோசிக்காமல் திரும்பவும் விற்று விடுங்கள்.)

- Advertisement -

நாம் வாங்கக்கூடிய புதிய தங்க நகைகள் எல்லாம் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட புதிய தங்கத்திலிருந்து தான் செய்யப்பட்டது என்று யாராலும் சொல்லிவிட முடியாது. கஷ்டத்திற்கு அடமானம் வைத்த நகைகள், இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், சில பேர் தாலி கொடியை எல்லாம் கழட்டி கஷ்டத்திற்கு அடமானம் வைத்து மூழ்கி இருக்கும். அடுத்தவர்களை ஏமாற்றி திருடி வாங்கிய நகைகள் என்று பல விதங்களில் வந்த பழைய நகைகளை எல்லாம் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றித்தான் புதிய நகைகளை செய்து கொடுக்கிறார்கள்.

இதில் நம்முடைய கெட்ட நேரம் அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலோடு விற்ற தங்கத்தில் செய்யப்பட்ட நகை நம் கைக்கு வந்து விட்டால் அதன் மூலம் நமக்கு தோஷம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய நேரம் காலம் நன்றாக இருந்தாலும் சரி, சில தங்க நகைகளை வாங்கும் போது அது நமக்கு ராசியாகவே இருக்காது. நீங்கள் உங்களுடைய குடும்பத்தில் நன்றாக கவனித்து பாருங்கள்.

- Advertisement -

நிறைய பேர் இதை கவனிக்க மறந்து இருப்பார்கள். ‘ஏற்கனவே ஒரு குடும்பத்தில் நிறைய தங்க நகைகள் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு 20 பவுன் நகை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் வீட்டில். வருமானம் வந்து கொண்டே இருக்கும் போது, புதியதாக ஒரே ஒரு பவுனில் இன்னொரு நகையை வாங்கி இருப்பார்கள். ஆனால் அந்த நகை வந்த பிறகு நம் வீட்டில் இருக்கக்கூடிய மற்ற பழைய நகைகளையும் கொண்டு போய் அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலை வந்துவிடும்’. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் தோஷமான தங்க நகை உங்கள் கைக்கு வருவதுதான். சரி இதை சரி செய்ய ஏதாவது பரிகாரம் உள்ளதா.

இருக்கிறது. புதியதாக வாங்கிய தங்க நகைகளை அப்படியே எடுத்து முதலில் நீங்கள் அணிந்து கொள்ள கூடாது. ஒரு கிண்ணத்தில் நிரம்ப கல்லுப்பு வைத்துவிட்டு, அந்த கல்லுப்புக்கு மேலே ஒரு விரலி மஞ்சள் வைத்து, ஒரே ஒரு ஜாதிக்காயையும் அந்த கல்லுப்புக்கு மேலே வையுங்கள். அதன் பின்பு நீங்கள் வாங்கிய தங்க நகையை கல் உப்புக்கு மேலே வைக்க வேண்டும். தங்க நகையை பெட்டிக்குள் இருந்து அப்படியே கல்லுப்புக்கு மேலே வைக்காதீங்க. நகை கல்லுப்பில் படும்படி வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்த அந்த கிண்ணத்தை அப்படியே ஒரு அம்மி கல்லின் மேல் வைக்க வேண்டும்.

இப்படி செய்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் அந்த நகை அம்மிக்கல்லின் மேலேயே இருக்கட்டும். அம்மிகல் உங்களுடைய வீட்டின் வெளிப்பக்கத்தில் இருந்தால் ஜாக்கிரதையாக பரிகாரத்தை செய்யுங்கள். நகையை தொலைத்து விடாதீர்கள். (அம்மி கல்லை கொண்டு வந்து வீட்டிற்குள் வைத்து இந்த பரிகாரத்தை செய்வது தவறு கிடையாது.) அதன் பின்பு அந்த நகையை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி சிலைக்கோ அல்லது சுவாமி படத்திற்கோ சாத்திவிட்டு அதன் பின்பு அந்த நகையை நீங்கள் அணிந்து கொள்வது நல்லது. தங்கத்தின் மூலம் உண்டாகக்கூடிய தோஷம் உங்கள் குடும்பத்திற்கு வராமல் இருக்கும்.

வாங்கிய நகை எல்லாமே அடமானத்தில் இருக்கிறது. என்ன செய்வது. அடமானம் வைத்த சீட்டை தங்கத்துக்கு பதிலாக பரிகாரத்தில் பயன்படுத்துங்கள். அந்த சீட்டை கொண்டு போய் குலதெய்வ பாதத்தில் வைத்து அடமானம் வைத்து தங்க நகைகள் சீக்கிரம் மீட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய அடமான நகைகளை நல்லபடியாக மீட்டெடுத்து விடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -