தங்கம் வாங்க உங்கள் கையில் காசு பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை! 1 டம்ளர் இந்த தண்ணீர் இருந்தாலே போதுமே! போதும் போதும் என்ற அளவுக்கு தங்கத்தை வாங்கி குவிக்கலாம்.

theertham

ஒரு வீட்டினுடைய மகாலட்சுமி அம்சம் தான் இந்த தங்கம். கோடி கோடியாக பணத்தை சேர்த்து வைத்திருப்பவர்கள் தான் தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. சராசரியாக நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் நிச்சயமாக வீட்டில் தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும். இது ஒரு வகையில் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை தேடித் தரும் என்றாலும், மற்றொரு வகையில் பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம். பணத்தை மண்ணில் போட்டாலும், பொன்னில் போட்டாலும் வீணாகாது என்பது முன்னோர்களுடைய கூற்று. இது ஒரு போதும் பொய்யாகாது.

பணத்தை பணமாகவே கையில் வைத்துக் கொண்டால் நிச்சயம் என்றாவது ஒரு நாள் அது வீண்விரையம் ஆகத்தான் போகின்றது. அந்தப் பணத்தை தங்கமாக வாங்கி வைக்கும் பட்சத்தில் நமக்கு ஒரு பக்கம் சேமிப்பு, ஒரு பக்கம் தன்னம்பிக்கை, ஒரு பக்கம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம். ஆக பெண்கள் சிறுக சிறுக பணத்தை சேமித்து தங்கம் வாங்குவது என்றைக்குமே நம் வீட்டிற்கு நல்லதை மட்டுமே கொண்டு வந்து சேர்க்கும்.

இன்றைய சூழ்நிலையில், வரும் வருமானத்தில், தங்கம் விற்கின்ற விலைக்கு தங்கத்தை வாங்கவா முடியும்? என்று உங்கள் மனதில் எழும் கேள்வி புரிகின்றது. இருப்பினும் ஒரு பவுன் தங்கம் வாங்க வேண்டிய இடத்தில், ஒரு கிராம் தங்கத்தை வாங்கி வைப்போமே. அதுவும் நமக்கு லாபத்தை கொடுப்பது தானே. வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால், அவர்கள் வீட்டில் சீக்கிரமே தங்கம் வாங்கும் யோகம் வரும். அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரத்தை இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

perumal

புதன் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். பெருமாள் கோவில்களுக்கு சென்றால் கட்டாயமாக பெருமாள் கோவில் தீர்த்தமும் துளசியும் நமக்கு பிரசாதமாக கிடைக்கும். தீர்த்தத்தை அங்கேயே குடித்து விடுவோம். ஆனால், ஒரு சிறிய டப்பாவில் அந்த தீர்த்தத்தை உங்களுடைய வீட்டிற்கு வாங்கி வரவேண்டும்.

- Advertisement -

ஒரு செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட தீர்த்தம், துளசி இலை, இந்த இரண்டையும் அந்த செம்பு பாத்திரத்தில் போட்டு விட்டு, அந்த செம்பு பாத்திரம் நிரம்ப தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் கோவிலில் இருந்து பெறப்படும் தீர்த்தம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நாம் இந்த இடத்தில் அரைகுறையாக தண்ணீரை அந்த பாத்திரத்தில் வைக்க கூடாது. நீர் நிரம்ப வைக்க வேண்டும்.

sembu-sombu

அந்த செம்பு பாத்திரத்தில் இருக்கும் தீர்த்த தண்ணீரில், உங்கள் வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கத்தை போட்டு, இந்த செம்பு பாத்திரத்தை அப்படியே உங்கள் வீட்டு பீரோவுக்குள் பத்திரமாக வைத்துவிடுங்கள். கீழே ஊற்றும் படி துணிகளில் ஊற்றும் படி, வைக்க வேண்டாம். பத்திரமாக நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். பெருமாள் கோவிலில் இருந்து பெறப்பட்ட தீர்த்தத்தில் கட்டாயமாக பச்சை கற்பூரம் ஏலக்காய் துளசி போன்ற வாசனை மிகுந்த பொருட்கள் கலந்து இருக்கும்.

pachai-karpooram-yelakkai-sombu

இந்த தீர்த்தத்தை உங்களுடைய வீட்டு பீரோவில் வைக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு தங்கம் வாங்கும் யோகம் வரும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது. உங்களிடம் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லையென்றால், ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து பெருமாளிடம் வேண்டிக் கொண்டு அந்த சொம்பில் போட்டு வையுங்கள். தங்கம் வாங்கும் யோகம் வந்தவுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டுபோய் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இதே போல் வாரம் ஒரு முறை அந்த தண்ணீரை மாற்றிக் கொண்டே வரவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Today Gold rate

பெருமாள் கோவில் தீர்த்தம் கிடைக்காதவர்கள் அந்த செம்பு சொம்பில் கொஞ்சமாக பன்னீர், பச்சை கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகளை போட்டு, பாத்திரம் நிரம்ப தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் தங்கத்தை போட்டு வைத்தாலும் நன்மையை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும். நல்லதே நடக்கும்.