வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் தீர எந்தெந்த கோவிலுக்கு சென்று எப்படி வழிபடவேண்டும் தெரியுமா?

temple
- Advertisement -

“ஆன்மீகம், அறம்” ஆகிய இரண்டும் தமிழர் வாழ்வியலில் இரு கண்களாக போற்றப்படுகின்றன. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, “கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே போன்ற பழமொழிகள் தமிழர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் ஆலய வழிபாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பாரதத் திருநாட்டில் மற்ற எந்த மாநிலங்களை காட்டிலும் “ஆன்மீக பூமி” யான தமிழ்நாட்டில் மட்டுமே அதிகளவு ஆலயங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சோழமண்டலம் என குறிப்பிடப்படுகின்ற தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு பழங்கால கோயில்கள் நிறைந்துள்ளன. அத்தகைய கோயில்களின் சிறப்புகள் குறித்தும், எந்த கோயில்களில் சென்று வழிபாடு செய்வதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

temple

பொதுவாக ஆலய வழிபாடு என்பது நமது ஆன்மாவை தெய்வீக தன்மையாக மாற்றிக் கொள்ளும் ஒரு புனித தலம் என்றாலும் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் புனித இடமாக திருக்கோயில்கள் இருக்கின்றன. நம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பரிகாரத் தலங்களாக விளங்குகின்றன. இங்கு தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் சோழ நாட்டு பரிகாரத் தலங்களாக இருக்கும் கோவில்கள் குறித்த விவரங்கள் இதோ.

- Advertisement -

திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள் கும்பகோணம் நகருக்கு அருகே அமைந்துள்ள கருவளர்சேரி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதால் அழகும், அறிவும் நிறைந்த குழந்தை பேறு உண்டாகும்.

temple

திருமணமான பெண்கள் கருத்தரித்து பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கவலைப்படுபவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊரில் அருகே இருக்கும் திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோயில் சென்று வழிபாடு செய்வதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு பலனடைந்த பெண்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் கூத்தனூர் அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கவும், வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கவும் கும்பகோணம் நகரில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.

saraswati

செல்வச் சிறப்பான வாழ்க்கையை பெற தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அருள்மிகு ஒப்பிலியப்பன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். உறுதியான உடலும், நோய் நொடிகளற்ற வாழ்க்கையும் கிடைக்க மயிலாடுதுறை மாவட்டத்திலிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வேண்டும்.

- Advertisement -

தொடர் திருமண தடைகள், சரியான வரன் அமையாமை, ஜாதக பிரச்சனை போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறாமல் கவலைப்படும் ஆண், பெண் ஆகிய இரு பாலரும் மயிலாடுதுறை மாவட்டத்திலிருக்கும் திருமணஞ்சேரி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கே கூறப்படும் பரிகார பூஜையை முறைப்படி செய்ய வேண்டும். இப்படி பரிகார பூஜை செய்த நபர்களுக்கு அதிகபட்சம் 90 நாட்களுக்குள்ளாக வரன் அமைவதாக இக்கோவிலுக்கு சென்று பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

Thirumanancheri

தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கடன் பிரச்சனை மிக விரைவில் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

பல மனக் கசப்புகளால் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழ்கின்ற தம்பதிகள், விவாகரத்து வேண்டி இருக்கும் தம்பதிகளில் கணவன் அல்லது மனைவி மீண்டும் தங்கள் துணையுடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ளவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து இணைபிரியாமல் வாழ கும்பகோணம் வட்டத்தில் இருக்கின்ற திருவலஞ்சுழி அருள்மிகு கபர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் விரும்பிய பலனை

temple

நீண்ட ஆயுட்காலம் பெற்று வாழ நினைப்பவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கின்ற திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் உங்கள் விருப்பம் போலவே நீண்ட ஆயுளை பெறலாம்.

- Advertisement -