சொந்த அல்லது வாடகை வீட்டில் தண்ணீர் பிரச்சனையா? எங்கு போனாலும் தண்ணீருக்கு அல்லாட வேண்டி இருக்கிறதா? நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதுதான்!

ganga-water
- Advertisement -

இன்றைய கால கட்டத்தில் சொந்த அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எல்லோருக்கும் தண்ணீர் என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. உலகில் பிறந்த எல்லா ஜீவராசிகளும் உயிர் பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த தண்ணீர் எப்போது இல்லாமல் போகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று கூறுவார்கள். இத்தகைய தண்ணீர் ரொம்பவே சரளமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அப்படி அல்லாமல் தண்ணீருக்குப் அல்லாட வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு ஏன் ஏற்படுகிறது? வீட்டில் தண்ணீர் பிரச்சனை தாண்டவமாடினால் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் தண்ணீர் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. ஒரு சிலருடைய ராசியின் படி அவர்கள் எந்த வீட்டுக்குப் போனாலும் அங்கு தண்ணீர் பிரச்சினை நிச்சயம் தலைவிரித்தாடும். குடிப்பதற்கு, குளிப்பதற்கு அல்லது சமைப்பதற்கு தண்ணீர் இல்லை என்றால், தண்ணீர் கிடைப்பதில் இடையூறுகள் இருந்தால் உங்களுக்கு கங்காதேவியால் ஏற்பட்ட தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீரை வீண் விரயம் செய்வது மற்றும் தண்ணீரை அவமதிப்பதை போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படுகிறது. தண்ணீருக்கு அதிபதியாக இருக்கும் இந்த கங்கை வற்றாத ஜீவநதியாக காணப்படுகிறது.

- Advertisement -

தண்ணீர் என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் போல இலவசமாக, எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். ஆனால் இன்று இருக்கும் சுயநல உலகில் ஒருவருக்கு ஒருவர் கூடிய சீக்கிரமே தண்ணீருக்காக அடித்துக் கொண்டு சாகும் நிலை கூட உருவாகக்கூடும். இப்படி இருக்கும் நிலையில் நீங்கள் எந்த வீட்டிற்குப் போனாலும் அங்கு தண்ணீர் பிரச்சனை இருக்கிறது. தண்ணீரை கஷ்டப்பட்டு சுமந்து வர வேண்டி இருக்கிறது அல்லது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது என்கிற நிலை இருந்தால் நீங்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம்.

நன்கு நீரோட்டமுள்ள நீர்நிலைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஓடிக் கொண்டிருக்கும் நீரை கங்காஜலம் என்று நினைத்து நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீர் நிலைகளில் அமர்ந்து அங்கு ஒரு சிறு பூஜையை செய்யுங்கள். மங்கலப் பொருட்களாக இருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை நீர் நிலைகளில் விட்டுவிட்டு தூபம் காண்பித்து, கற்பூரம் ஏற்றி கங்கா தேவியை நினைத்து மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

இனி எங்கு சென்றாலும் எங்களுக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படக் கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் ரொம்ப எளிதாக உங்களுடைய தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். பிறகு நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும் அங்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. தண்ணீரால் ஏற்படும் தோஷங்கள் நீங்க மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு அபிஷேகம் செய்ய பன்னீர் வாங்கி கொடுங்கள்.

நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுது உங்களுக்கு கங்கையினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி தண்ணீர் பிரச்சனை குறையும். மேலும் பசுக்களுக்கு புண்ணாக்கு மற்றும் வெல்லம் கலந்து தானமாக கொடுங்கள். இதனாலும் நீங்கள் கங்கை நீரால் ஏற்பட்ட தோஷங்களில் இருந்து எளிதாக விடுபடலாம்.

- Advertisement -