ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் கேஸ் ஸ்டவ்வை இப்படி சுத்தம் செய்து பாருங்களேன். 10 வருடம் ஆனாலும் உங்கள் கேஸ் ஸ்டவ் புத்தம் புதுசு போலவே ஜொலிக்கும்.

gas
- Advertisement -

சமையலறையில் கால் கடுக்க நின்று சமைப்பது ஒரு கஷ்டம் என்றால், சமைத்த பின்பு அந்த அடுப்பை சுத்தம் செய்வது அதைவிட ரொம்ப ரொம்ப கஷ்டம். சில பெண்கள் துடைப்பதற்கு சிரமப்பட்டு கேஸ் ஸ்டவ்வின் மேல் தண்ணீரை ஊற்றி அப்படியே கழுவி விடுவார்கள். கேஸ் ஸ்டவ் சீக்கிரம் துருப்பிடித்து கெட்டுப் போவதற்கு தண்ணீர் ஊற்றி கழுவுவதும் ஒரு காரணம். ஆகவே அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவாதீங்க.

நீங்கள் அசைவம் சமைத்தால் கூட, அந்த துர்நாற்றம் வீசாமல் இருக்க, கேஸ் ஸ்டவ்வை தண்ணீர் ஊற்றாமல் சுத்தம் செய்ய ஒரு சுலபமான ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்போடு சேர்த்து இல்லத்தரசிகள் கால்கடுக்க நின்று சமைத்த பின்பு, கால் பாதத்தில் இருக்கும் வலியை போக்க எளிமையான ஒரு டிப்ஸும் உங்களுக்காக.

- Advertisement -

தண்ணீர் இல்லாமல் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் முறை:
கேஸ் ஸ்டவ்வில் சமைத்து முடித்த பின்பு, அதன் மேலே சிந்தி இருக்கும் பொருட்களை எல்லாம் ஒரு ஸ்பான்ச் நாரை வைத்து துடைத்து கீழே தள்ளி விடுங்கள். அதன் பின்பு ஒரு எலுமிச்ச பழ தோல் எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து விட்டு, தோலை குப்பையில் போடாதீங்க. ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.

எலுமிச்சம் பழத்தோலை தலைகீழாக திருப்ப வேண்டும். விளக்கு போட திருப்புவோம் அல்லவா, அதேபோல எலுமிச்சம் பழத்துக்கு உள்பக்கம் இருக்கக்கூடிய பகுதியை கேஸ் ஸ்டவ்வில் வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். வெறும் தோல் தான். இருந்தாலும் அதில் அந்த எலுமிச்சை வாசம் இருக்கும்.

- Advertisement -

பிறகு கேஸ் ஸ்டவ்வின் மேல் லேசாக தூள் உப்பு, லேசாக ஆப்ப சோடா தூவி விட்டு, சாதாரண ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து நன்றாக துடைத்து கொடுத்தால், கேஸ் ஸ்டவ்வில் இருக்கும் பிசுபிசுப்பு அழுக்கு கெட்ட வாடை அனைத்தும் முழுசாக நீங்கிவிடும். அதன் பிறகு ஒரு நல்ல காய்ந்த துணியை வைத்து துடைத்துக் கொள்ளலாம்.

அடுத்தபடியாக நம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்யும்போதும், ஆஃப் செய்யும் போதும், இருக்கக்கூடிய இடத்தில் ஓரங்களில் ஒட்டி இருக்கும் பிசுபிசுப்பை நீக்க வேண்டும். இதை சுத்தம் செய்ய காலியான மருந்து அட்டை போதும். அது ரொம்பவும் ஷார்ப்பாக இருக்கும் அல்லவா. அந்த மருந்து கவரை எடுத்து நீல வாக்கில் கத்தி போல வெட்டிக்கோங்க. அந்த நாபுக்கு ஓரங்களில் இருக்கும் இடத்தை எல்லாம் லேசாக கீரி கொடுத்தால், உள்ளே பிசுபிசுப்போடு இருக்கும் அழுக்கு எல்லாம் வெளியேறிவிடும். பிறகு உங்கள் கேஸ் ஸ்டவ், ஆன் செய்யவும், ஆஃப் செய்யவும் எந்த சிரமமும் இருக்காது.

- Advertisement -

சமைத்த பின்பு இல்லத்தரசிகளுக்கு இருக்கும் பாத வலி நீங்க:
நாள் முழுவதும் நின்று கொண்டு கால் கடுக்க சமைத்து, கால் கடுக்க ஓடி ஓடி வேலை செய்வீர்கள் அல்லவா. இரவு நேரத்தில் உங்களுடைய பாதங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வேண்டும். பாதங்களை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி துடைத்து விடுங்கள். அழுக்கு இருக்கக் கூடாது. நம்முடைய எல்லோர் வீட்டிலும் இருக்கும் வாஸ்லீனை கொஞ்சமாக எடுத்து பாதங்களில் நன்றாக தடவி மசாஜ் செய்யுங்கள்.

இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை சொல்லப்போனால் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தாலும் தவறில்லை. உங்கள் நேரத்தை பொறுத்தது. பாதங்களை நன்றாக அழுத்தம் கொடுத்து, வாசலின் தடவி மசாஜ் செய்து விட்டு, ஒரு ஷாக்ஸ் போட்டுக் கொள்ளுங்கள். காட்டன் சாக்ஸ் ஆக இருக்கட்டும். அதன் பின்பு சுடச்சுட கை பொறுக்கும் சூடு தண்ணீரை ஒரு வாட்டர் கேனில் ஊற்றிக் கொள்ளலாம் அல்லது வாட்டர் பேக் இருந்தால் இன்னும் சௌகரியம். சுட சுட அந்த மசாஜ் பேகை கீழே வைத்துவிட்டு அதன் மேலே உங்களுடைய பாதங்களை வைத்து வைத்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இனி கூலிங்கே ஆகாதுன்னு முடிவு பண்ண உங்க பழைய பிரிட்ஜை கூட, ரொம்ப சுலபமா செலவே இல்லாம சூப்பரா ஓட வெச்சிடலாம். என்னங்க ஆச்சரியமா இருக்கா! வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

அதாவது சுடுதண்ணீர் ஒத்தடம் குதிகால்களில், பாதங்களில் கொடுக்க வேண்டும். இந்த மசாஜ் ஒத்தடத்தை முடிந்தால் நீங்களே கொடுத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டில் உங்கள் கணவர் இந்த மசாஜ் செய்து கொடுத்தால் இன்னும் சூப்பராக இருக்கும். தினமும் இரவு தூங்கும் போது இதை செய்தால் நிம்மதியான தூக்கம் இருக்கும். பாத வலி இருக்காது. பித்தவெடிப்பு படிப்படியாக குறையும். (தேவைப்பட்டால் ஷாக்சை ஒரு மணி நேரம் கழித்து கட்டலாம் இல்லையென்றால் இரவு அப்படியே தூங்குங்கள்.) இல்லத்தரசிகள் ரொம்ப ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. மறுநாள் காலை எழுந்து வீட்டில் இருப்பவர்களை திட்ட மாட்டீங்க. அந்த அளவுக்கு பிரஷா இருப்பீங்க. இந்த சின்ன சின்ன பயனுள்ள வீட்டு குறிப்பு கஷ்டப்படும் இல்லத்தரசிகளான உங்களுக்காக மட்டும். ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -