தீராத மன வேதனையாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் கரைக்கும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. உங்கள் கையால் இந்த 1 பொருளை மட்டும் குளத்தில் கரைத்து விடுங்கள்.

temple

தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தைத் தரும் மன வேதனை என்பது வேறு! ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சில பேருக்கு பிரச்சனைகள் உண்டு. ஆனால் பெரிய பெரிய பிரச்சினைகளுக்குக் கூட, சுலபமான ஒரு வழிபாட்டுமுறை நமக்கு பலனை கொடுத்து விடும். அது தெரியாமல் நிறைய பேர் வாழ்க்கையில் திண்டாடி கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிக மிக சுலபமான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும், அதற்கு முழு நம்பிக்கையே மூலாதாரம். இந்த பரிகாரத்திற்கும் அப்படிதான். முழு நம்பிக்கையோடு உங்கள் கைகளில், இந்த ஒரு பொருளை எடுத்து, இந்த தண்ணீரில் கரைத்து விட்டாலும் போதும் உங்கள் கஷ்டம் கண்ணுக்கே தெரியாமல் கரைந்து போய்விடும்.

இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்று ஒன்று உள்ளது. தீரா துயரத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு வருபவர்களாக இருந்தால், உங்களுடைய கஷ்ட காலத்திலும் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையோடு இருக்க வேண்டும். இந்த ஒரு மனப்பான்மையே உங்களை தீராத கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவந்துவிடும்.

அந்த வரிசையில் ரோட்டோரங்களில் வெயிலில் காய்ந்து அல்லது மழையில் நனைந்து தங்களுடைய பிழைப்பை செய்துகொண்டிருக்கும் சிறிய வியாபாரிகளுக்கு அதாவது ரோட்டோர கடைகளில் தங்களுக்கான நிழலை கூட தேடிக் கொள்ள முடியாமல் வியாபாரம் நடத்தி வரும், கஷ்டப்பட்டு வரும் ஒரு ரோட்டோர கடை வைத்திருப்பவர்களுக்கு நிற்க நிழலாக ஒரு குடையை வாங்கி தானமாகக் கொடுப்பது உங்களுக்கு பெரிய நன்மையை தேடி தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.

kudai

சரி, இப்போது பரிகாரத்தையும் பார்த்துவிடுவோம். இந்த பரிகாரம் உங்கள் கஷ்டத்தை கரைக்கப் போகின்றது. உங்களால் முடிந்த அளவு வெல்லம், மண்டை வெல்லம் என்று சொல்லப்படும் சாதாரண வெல்லத்தை கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய குலதெய்வ கோவிலில் இருக்கும் குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் கோவில் குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக கோவிலில் இருக்கக்கூடிய மீன்கள் வசிக்கக்கூடிய குளத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் 100% பலன் உண்டு.

- Advertisement -

அந்த மண்டை வெல்லத்தை உங்கள் கையாலேயே வாங்கி உங்கள் கையாலேயே அந்த குளத்தின் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். அப்படியே தூக்கிக் கொண்டு போய் கொட்ட வேண்டாம். உங்கள் கையால் ஒரு பிடி வெல்லத்தை எடுத்து முதலில் குளத்தில் உள்ள தண்ணீரில் கையை மூழ்க வைத்து அப்படியே கரைத்து விடுங்கள். அந்த வெல்லம் கரைவது போல உங்களுடைய கஷ்டங்களும் காணாமல் போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

vellam

இதோடு சேர்த்து அந்தக் குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது ஒன்று, பொறியை கூட வாங்கி போட்டுவிடலாம். குளத்தில் இருக்கும் மீன்கள் நீங்கள் இட்ட உணவை சாப்பிட்டால், நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். தீராத நோய்கள் தீராத வினைகள் தீராத கஷ்டங்கள் தீராத மன அழுத்தம் இப்படி உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய, துயரங்களை துடைக்கக் கூடிய பரிகாரங்கள் இவை. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் உண்டு என்று கருதி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் மனசுக்கு பிடிச்ச வேலை கிடைத்து, கைநிறைய போதும் போதும் என்ற அளவுக்கு, பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கா? பசுமாட்டுக்கு இந்த 1 பொருளை கொடுங்க போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.