உங்கள் மனசுக்கு பிடிச்ச வேலை கிடைத்து, கைநிறைய போதும் போதும் என்ற அளவுக்கு, பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கா? பசுமாட்டுக்கு இந்த 1 பொருளை கொடுங்க போதும்.

pudhan

வாழ்க்கையை நடத்திச் செல்ல, பணம் சம்பாதிக்க ஏதாவது ஒரு வேலை கிடைப்பது என்பது வேறு. நீங்கள் படித்த படிப்பிற்கு உங்கள் மனதிற்கு இஷ்டப்பட்ட வேலை கிடைப்பது என்பது வேறு. மனதிற்கு பிடித்த வேலையாக இருந்தாலும் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும். உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆண்களுக்காக இருந்தாலும் இந்த காலத்தில் பெண்களாகவே இருந்தாலும் மரியாதை இருக்கின்றது. பணம் காசு சம்பாதிக்காத மனிதர்களை ஒரு பொருட்டாகக் கூட இந்த உலகம் மதிப்பது கிடையாது. யாரும் திரும்பிப் பார்க்கப் போவதும் கிடையாது. இந்த சமூகத்தில் நீங்களும் உயர்ந்த மனிதராக வேண்டுமா? உங்கள் மனதிற்குப் பிடித்த வேலையை செய்து கைநிறைய சம்பாதித்து, கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? மனதார ஆன்மீக ரீதியான இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

money1

மாதத்தில் ஒருநாள் உங்களுடைய பிறந்த நட்சத்திரம் வரும். அந்த நட்சத்திரத்தன்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரத்திற்கு கட்டாயம் இந்த பொருளைதான் பிரசாதமாக வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தேங்காய் உங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரே ஒரு தேங்காய் தான் வாங்க முடியும் என்றாலும் பரவாயில்லை. புதிய தேங்காயாக வாங்கி உடைத்து தேங்காயை நன்றாக துருவி ஒரு கிண்ணத்தில் போட்டு, நாட்டு சர்க்கரையையோ அல்லது வெல்லத்தை போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

இந்த தேங்காயை வெல்லம் போட்டு பிசைந்த உடன், உங்களால் உருண்டை பிடிக்க முடியும். 9 உருண்டைகள் பிடித்து ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தேங்காய் போட்டால் பெரிய உருண்டைகள் கிடைக்கும். ஒரு தேங்காய் போட்டால் சிறிய உருண்டைகள் கிடைக்கும் அவ்வளவுதான்.

coconut2

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை தயார் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜை போல செய்ய வேண்டும். சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, தீப தூப ஆராதனைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம். நீங்கள் வைக்கக்கூடிய இந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேற வேண்டுமென்று குலதெய்வத்தின் முன்பு ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற மறக்கவே கூடாது. அதன் பின்பு சுவாமி படங்களுக்கு முன்பு நீங்கள் தயார் செய்த பிரசாதத்தை வைத்து இரண்டு கைகளையும் ஏந்தி ‘நல்ல வேலை கிடைக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த வேலை கிடைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். மனதார நம்பிக்கையோடு வேண்டுதலை வையுங்கள்.

vellam

இறுதியாக தூப தீப ஆராதனை காட்டி வீட்டில் பூஜையை நிறைவு செய்துவிட்டு, பிரசாதமாக வைத்திருக்கும் தேங்காய் உருண்டைகளை ஒரு டப்பாவில் போட்டு உங்கள் கையிலேயே எடுத்து, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த கோவிலில் நவகிரக சந்நிதி இருக்க வேண்டும்.

navagragam-mantra

அந்த நவகிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு பூ பழம் வாங்கிக் கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, அங்கிருந்து நேராக பசு மாடு இருக்கும் இடத்திற்கு சென்று உங்கள் கையில் இருக்கும் பிரசாதத்தை பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும். பசுமாடு கட்டாயம் அந்த பிரசாதத்தை சாப்பிட வேண்டும். மூன்று மாதங்கள், உங்களுடைய பிறந்த நட்சத்திரம் வரும் அன்று மட்டும் இந்த பூஜையை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும். அம்மன் வழிபாட்டை இப்படி செய்து வந்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.