ஜென்ம தரித்திரம் நீங்க தீபம்

lingam dheepam
- Advertisement -

பிரதோஷம் என்றாலே மனிதனுடைய பாவங்களை தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு வழிபாட்டு தினம் என்று சொல்லலாம். இந்தப் பிறவியில் நாம் மனிதராக பிறப்பெடுத்திருப்பது நம்முடைய கர்மவினையின் பயன் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த கர்மாவானது நம்முடைய கர்மா பலன் மட்டும் இன்றி நம்முடைய முன்னோரின்கர்ம பலனையும் சேர்த்தே தான் நாம் அனுபவிப்போம்.

இந்த கர்மபலன் தீரவும் நம்முடைய ஜென்ம தரித்திரங்கள் நீங்கவும் சிவபெருமானை வழிபடுவது சிறந்த வழியாக கருதப்படுகிறது. பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சாராம்சமே அது தான். அத்தகைய வழிபாட்டு தினத்தில் நாம் ஏற்றக் கூடிய இந்த ஒரு தீபம் இவை அனைத்தையும் சரி செய்யக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ஜென்ம தரித்திரம், கர்ம பலன் குறைய

இந்த தீபத்தை பிரதோஷ நாளில் பிரதோஷ வேளையில் ஏற்ற வேண்டும் பிரதோஷ வேளையில் ஏற்ற முடியாதவர்கள் திங்கட்கிழமையில் ஏற்றலாம். அதுவும் முடியாதவர்கள் பௌர்ணமி, அமாவாசை போன்ற முக்கிய தினங்கள் ஏற்றலாம். எதுவாயினும் பிரதோஷ தினத்தில் ஏற்றுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தீபம் ஏற்ற பெரிய அகல் விளக்கை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த அகலில் உங்கள் வயது எத்தனையோ அத்தனை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஆகையால் அதற்கு ஏற்றார் போல் அகல் வாங்கிக் கொள்ளுங்கள். தீபத்தை வீட்டிலிருந்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பிறகு சிவ ஆலயத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

சிவாலயத்தில் உள்ள கொடிமரத்தின் கீழே இந்த அகல் விளக்கை வைத்து உங்கள் வயது எத்தனையோ அத்தனை திரி போடுங்கள். இந்த விளக்கு நின்று நிதானமாக எரிய வேண்டும். ஆகையால் விளக்கு முழுவதும் நல்லெண்ணையை தாராளமாக ஊற்றுங்கள். அதன் பிறகு அத்தனை திரியையும் ஏற்றங்கள். உங்களுக்கு வயது 30 என்றால் 30 திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்த தீப வழிபாட்டு முறையை வீட்டில் செய்யக் கூடாது கட்டாயமாக சிவாலயத்தில் உள்ள கொடிமரத்தடியில் தான் செய்ய வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரையும் சிவபெருமானையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு உங்களுடைய கர்மபலன், ஜென்ம தரித்திரம் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றியதற்கு மறுநாள் சிவாலயத்திற்கு நீங்கள் ருத்ராட்சம் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். இதை அனைத்து சிவாலயங்களும் செய்வார்கள். இந்த தீபம் ஏற்றும் போதே இந்த அபிஷேகம் முறையும் பற்றி கேட்டு அதற்கான கட்டணத்தையும் செலுத்தி விட்டு வந்து விடுங்கள். அதன் பிறகு மறுநாள் ஆலயத்திற்கு சென்று இந்த ருத்ராட்ச வழிபாட்டை செய்து விடுங்கள்.

ஒரு மனிதனுடைய ஜென்ம தரித்திரத்தையும் கர்ம பலனையும் தீர்ப்பது அத்தனை எளிமையான காரியமில்லை. ஒரு சிலர் அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் துன்பப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ வாழ்க்கை எப்போதும் முன்னேறவே மாட்டார்கள். அவர்களுக்கு நல்லதே நடக்காது ஜாதகம் கோவில் என எதிர்பார்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட பரிகாரம்

இப்படியானவர்களுக்கு நிச்சயம் ஜென்ம தரித்திரமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை கணித்து சொல்வது கூட அவ்வளவு எளிதல்ல. அப்படியான தரித்திரம் விலகி புண்ணியம் சேர இந்த தீப வழிபாடு நல்ல பலனை தரக்கூடியதாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -