வீட்டில் தரித்திரம் தாண்டவமாடுவதற்க்கு முதல் 3 முக்கிய காரணங்கள் எவை?

sad-lakshmi
- Advertisement -

வீட்டிலிருக்கும் சுபிட்சம் குறைய, வீட்டை தரித்திரம் பிடிக்க நிறைய காரணங்கள் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு. இருந்தாலும் ஒரு சில காரணங்களுக்கு மிகமிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான சில விஷயங்களை, சில தவறுகளை நம் வீட்டில் செய்யவே கூடாது. அது எந்தெந்த தவறுகள் என்பதைப் பற்றி தான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தத் தவறுகள் உங்களுக்கு சரி என்று பட்டால், சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் மட்டும் இந்த விஷயங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.

முதலில் ஒரு வீட்டில் சுபிட்சம் குறைய தரிதிரம் தலைதூக்க காரணம் ‘பிறகு’ என்று சொல்லப்படும் இந்த ஒரு வார்த்தைதான். பிறகு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தை நம் வாழ்க்கையை பின்நோக்கி தள்ளி விடும். எந்த வேலையாக இருந்தாலும், அந்தந்த வேலைகளை அந்தந்த நேரத்தில் அப்பொழுதே செய்து முடித்து விட வேண்டுமே தவிர, சோம்பேறித்தனப்பட்டு பிறகு என்று தள்ளிப்போடும் பழக்கத்தை நமக்குள் கொண்டு வரக்கூடாது. இது முதலாவது விஷயம். அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி அலுவலக பணியாக இருந்தாலும் சரி.

- Advertisement -

இரண்டாவதாக வீட்டில் இருக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, தான் பயன்படுத்திய எச்சில் பாத்திரங்களை அப்படியே உலர வைக்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு டீ காபி குடித்த டம்ளராக இருந்தாலும், சாப்பாடு சாப்பிட்ட தட்டாக இருந்தாலும், தண்ணீர் குடித்த சொம்பாக இருந்தாலும், அதை உடனே சிங்கிள் போட்டு கழுவி விடவேண்டும். எச்சில் ஒரு வீட்டில் உலர்ந்தால், அதாவது ஏச்சில் செய்யப்பட்ட பாத்திரங்கள் ஒரு வீட்டில் உலர்ந்தால், அந்த வீட்டிலிருக்கும் செல்வ கடாட்சமும் வற்றிவிடும், உலர்ந்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுதான் இரண்டாவது விஷயம்.

un-clean-shink

மூன்றாவதாக சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். கையில் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வாயிலேயே வைத்திருப்பார்கள். இதுவும் எச்சில் செய்வதற்கு சமமான ஒரு விஷயம் தான். உங்கள் கையில் எச்சில் ஆகிவிட்டது அல்லவா. தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்களது கையை வாயில் வைத்து விட்டீர்கள். உடனடியாக அந்த கையை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் எந்த பொருளையும் தொடாமல் கையை அலம்பி விடுங்கள். உங்கள் கையில் எச்சில் உலர்ந்தாலும் அது உங்களுக்கு தரித்திரத்தை தேடித் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது மூன்றாவது விஷயம்.

- Advertisement -

மேல் சொன்ன இந்த மூன்று விஷயங்களை உங்களுடைய வீட்டில் நீங்கள் இதுநாள்வரை செய்து வந்திருந்தால் அதை இன்றிலிருந்து மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய வித்தியாசத்தை சிலநாட்களிலேயே நிச்சயமாக உணர முடியும். இதை தவிர்த்து சில வீடுகளில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும்.

family fight

இப்படி வரக்கூடிய பிரச்சனைகளில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளை கொண்டு வீட்டில் திட்டிக்கொண்டே இருக்க கூடாது. எந்த வீட்டில் தகாத வார்த்தைகள் அடிக்கடி உச்சரிக்க படுகின்றதோ அந்த வீட்டிலும் நிச்சயமாக கஷ்டம் வரத்தான் செய்யும். நமக்கு கோபம் உச்சத்தில் இருக்கும்போது நம் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் என்ன என்றே நமக்குத் தெரிவது கிடையாது. அப்படி யோசிக்காமல் நாம் பேசக்கூடிய சில வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. முடிந்தவரை உங்கள் வாயால் எதிர்மறையான தகாத வார்த்தைகளை பேசிக்கொள்ளும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டாலே வாழ்க்கையில் பல நன்மைகள் தானாக உங்களைத் தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -