ஒவ்வொரு மாத பிறப்பும் நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பலரும் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு அல்லது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். எப்படி மாதத்தின் முதல் நாள் நாம் வழிபாடு செய்து ஆரம்பிக்கிறோமோ அதே போல் ஒவ்வொரு மாதத்தையும் கடைசி நாளன்று நம்மை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்று திருஷ்டி சுத்தி போட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த மாதம் முழுவதும் நமக்கு ஏற்பட்ட அனைத்து விதமான கஷ்டங்களும், துன்பங்களும், எதிர்மறை ஆற்றல்களும், தடைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எலுமிச்சம் பழத்தை வைத்து எப்படி தரித்திரத்தையும் தடைகளையும் விலகச் செய்யலாம் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
தரித்திரமும் தடைகளும் நீங்க
ஒவ்வொரு விஷயத்திற்கும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கர்ம வினைகளுமே காரணமாக திகழ்கின்றன. கர்ம வினைகளை நீக்குவதற்கு நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்ய வேண்டும். எதிர்மறை ஆற்றலை விலக்குவதற்கு பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கு பல முக்கியமான நாட்கள் இருந்தாலும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாள் அன்று நாம் எதிர்மறை ஆற்றலை விலக்கினோம் என்றால் அடுத்து பிறக்கக்கூடிய புதிய மாதம் நமக்கு மிகவும் நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மாசி மாதத்தின் கடைசி நாளன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்.
மாசி மாதத்தின் கடைசி நாளான இன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழம் வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தின் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அவர்களின் பெயர்களை சிவப்பு நிற பேனாவைக் கொண்டு எலுமிச்சம் பழத்தை சுற்றி எழுத வேண்டும். பிறகு எலுமிச்சம் பழத்தின் நுனியிலும் அடியிலும் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு எழுமிச்சம் பழத்தின் நுனியில் பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி வீடு முழுவதும் பொறுமையாக அந்த கற்பூரத்தை காட்ட வேண்டும். இப்படி வீடு முழுவதும் காட்டிய பிறகு வீட்டிற்கு வெளியே வந்து கற்பூரம் அணையலாம். ஆனால் வீட்டிற்குள் அணையக்கூடாது. வீட்டிற்கு வெளியே வந்த பிறகு மூன்று தெருக்கள் சந்திக்கக்கூடிய முச்சந்தியில் இந்த எலுமிச்சம் பழத்தை தூக்கி போட்டுவிட்டு வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு கல் உப்பு கலந்த தண்ணீரில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் குளிக்க வேண்டும்.
பிறகு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து நெற்றி நிறைய திருநீறை பூசி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். பிறகு “ஓம் ரிங் வசி வசி” என்னும் மந்திரத்தை முழு மனதோடு 108 முறை கூறி இந்த புகையோடு சேர்த்து எங்களுடைய கஷ்டமும் காணாமல் போக வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு படுத்து உறங்கலாம். இப்படி செய்வதன் மூலம் நம்மை பிடித்த தரித்திரமும், தடைகளும், எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும்.
இதையும் படிக்கலாமே:சிதறு தேங்காய் எண்ணிக்கை பலன்
முழு நம்பிக்கையோடு ஒவ்வொரு மாதத்தையும் கடைசி நாளன்று இந்த முறையில் நாம் எலுமிச்சம் பழத்தை வைத்து பரிகாரம் செய்ய நம்மை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். புதிதாக பிறக்கக்கூடிய மாதம் நம் வாழ்க்கையில் சிறப்பான மாதமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.