தெய்வ சக்தி வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றால், எப்போதுமே நம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 1 பொருள். இந்தப் பொருள் இருந்தால் தெய்வம் நம் வீட்டை விட்டு வெளியில் போவதற்கு வாய்ப்பே கிடையாது.

vasal-kathavu-kuladheivam

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், தெய்வ சக்தி கட்டாயம் நம் வீட்டில் குடியிருக்க வேண்டும். சில சூழ்நிலைகளில், சில காரணத்தினால், நம் வீட்டை விட்டு தெய்வங்கள் வெளியேறிவிடும். இதன் மூலம் குடும்பத்தில் பண கஷ்டத்தோடு சேர்ந்த மன கஷ்டமும் வரத்தான் செய்யும். இதற்காக தீர்வைத் தேடி குடும்ப ஜோசியரை அணுகினால், நமக்கான தீவினை அவர்கள் கட்டாயம் சொல்லுவார்கள். ‘உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா? குலதெய்வ குறை உள்ளதா! அல்லது ஏதேனும் கெட்ட சக்திகளின் சூழ்ச்சியா’ என்பது உங்களது ஜாதகத்தைப் பார்த்தே சொல்லிவிட முடியும்.

இப்படியாக, உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் இருந்தாலும் சரி, பிரச்சனைகள் இல்லை என்றாலும் சரி, இருக்கின்ற பிரச்சினையை தீர்ப்பதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரச்சினைகள் வராமல் இருக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கெட்ட சக்திகளிடம் இருந்து நம் வீட்டையும் நம்மையும், பாதுகாக்க போகும் அந்த ஒரு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?

நாம் எல்லோரும் அறிந்த தர்ப்பைப்புல் தான் அது. தர்ப்பைப் புல்லுக்கு கெடுதலை நீக்கக் கூடிய சக்தியும், நன்மையை தன்வசப்படுத்திக் கூடிய சக்தியும் அதிகமாகவே உள்ளது. எதிர்மறை ஆற்றல் நம்மையும், நம் வீட்டையும் தாக்காமல் இருக்க வேண்டும் என்றாலும், தெய்வம் நம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்றாலும் நம் வீட்டில் கட்டாயம் தர்ப்பைப்புல் இருக்க வேண்டும்.

tharpai-1

நாட்டு மருந்து கடைகளில் விற்கும் தர்ப்பைப் புல்லை சிறிதளவு வாங்கி சுத்தபத்தமாக பூஜை அறையில் சேமித்து வைப்பதால் தவறொன்றும் கிடையாது. மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை பாயின் மீது அமர்ந்து உச்சரித்தால் அந்த மந்திரம் சீக்கிரம் சித்தி ஆகும் என்றும் சாஸ்திரம் சொல்கின்றது.

- Advertisement -

அந்த அளவிற்கு அற்புதம் கொண்ட, சக்தி கொண்ட பொருள் தான் இந்த தர்ப்பைப் புல். வாரம்தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் இந்த தர்ப்பைப் புல்லில் இருந்து இரண்டுபுல்லை எடுத்து தூபம் போட்டால், இந்த வாசத்திற்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியே சென்றுவிடும்.

உங்கள் வீட்டு குல தெய்வம் வீட்டிற்குள் வர தடை இருந்தாலும், அந்த தடையை தகற்த்தெரியக் கூடிய சக்தி இந்த தர்ப்பைப் புல்லுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. வீட்டில் தொடர் பிரச்சனை உள்ளவர்கள் தூபம் போடும் போது, வாரத்தில் இரண்டு முறையோ மூன்று முறையோ தர்ப்பைப்புல் புகையை வீடு முழுவதும் காட்டுங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

Amman deepam

இதோடு சேர்த்து நீங்கள் பூஜை அறையில் செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தீபம் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரத்தையும், 2 டைமன் கற்கண்டையும் போட்டு தீபம் ஏற்றினால், வீட்டில் பணக்கஷ்டம் வராமல் இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
என்னதான் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடுகிறதா? செவ்வாய் கிழமை இப்படி தீபம் ஏற்றுங்கள் கையில் காசு புழங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.