பெயர், புகழ், பதவி, பட்டம், இவையோடு சேர்ந்து பணமும் உங்களைத் தேடி வர, 3 முறை மோதிர விரலால் இதை எழுதினாலே போதும்.

saraswathi

இந்த காலகட்டத்தில், உயர் பதவியும், புகழும், அந்தஸ்த்தும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு தான் கிடைக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்தால், நிச்சயம் இல்லை. அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு, தகுதியே இல்லை என்றாலும் கூட, பெயர் புகழ் பட்டம் பதவி கிடைக்கும். தகுதி இருந்தும் தனக்கான பெயர் புகழ் பதவி பட்டம் பணம் இவைகளை பெறமுடியாமல் இன்றளவும் எத்தனையோ பேர் தவித்து வருகிறார்கள். விடா முயற்சி செய்தும் கடின உழைப்பு இருந்தும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியவில்லையா? உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்காக, சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான பரிகாரத்தை பற்றிதான் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

saraswathi11

வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய விஜயதசமி அன்று நாம் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் அது நமக்கு வெற்றிதரும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமில்லை. ஆனால் இந்த தசமி திதி மாதம்தோறும் 2 முறை வருகிறது. இது சிலபேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்காது. ஆனால், இந்த தசமி திதி அன்று நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால், அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

குறிப்பாக மாதம் தோறும் வரும் வளர்பிறை தசமி திதி அன்று, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு சுத்தமான ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் பித்தளை அல்லது செம்பு தாம்பூலத்தட்டு இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாதவர்கள் எவர்சில்வர் தாம்பூலத் தட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

poojai

அதன் மேல் நவதானியத்தை பரப்பி, உங்களுடைய மோதிர விரலால் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, பெயரா புகழா பதவியா பணமா அல்லது எல்லாவற்றிற்கும் சேர்ந்த ‘வெற்றி’ என்ற ஒரு வார்த்தையை  வேண்டுமென்றாலும் நம்பிக்கையோடு அந்த நவதானியத்தில் 3 முறை எழுத வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒருமுறை தசமி திதியில் உங்கள் வீட்டில் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் கூட, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தடைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். எதை தொட்டாலும் தோல்வி, என்ற பிரச்சனை உங்களை விட்டு நீங்கி விடும். உங்களுக்கு இதுநாள் வரை கிடைக்காத பெயர் புகழ் பதவி பட்டம் பணம் உங்களைத் தேடி வரும். பரிகாரம் முடிந்த மூன்றாவது நாள் நவதானியத்தை காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிடலாம்.

navadhanyam

திறமை இருந்தும் உங்களால் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இதோடு சேர்த்து காலை நேரத்தில் உங்கள் நெற்றியில் விபூதி குங்குமம் சந்தனம் எந்த திலகத்தை இட்டுக் கொண்டாலும், அதை உங்களுடைய மோதிர விரலால் உங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.

praying-god1

நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதும், உங்களது குறிக்கோளை 3 முறை உங்கள் மனதில் சொல்லிவிட்டு, அதன் பின்பு நெற்றியில் விபூதி வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, இஷ்ட தெய்வத்தின் ஆசீர்வாதத்தோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் அடிக்கடி மருத்துவ செலவு ஏற்பட இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது ஏன்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.