1/2 கப் தயிர் இருந்தா நல்ல காரசாராமான இந்த சட்னியை சட்டுனு செய்ஞ்சி பாருங்க. ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாத இந்த சட்னி இட்லி, தோசை சப்பாத்தி என எல்லாத்துக்குமே நல்ல காம்பினேஷன்.

curd chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு எப்பவுமே சட்னி நல்ல காம்பினேஷன் தான். சட்னியில் எத்தனையோ வகை இருந்தாலும், தயிர் வைத்து இந்த காரசாரமாக சட்னியை எப்படி செய்வது என்று உங்களுக்கு தோன்றலாம். அரை கப் தயிர் இருந்தால் போதும் அதை வைத்து நல்ல சுவையான அதே சமயம் நாக்குக்கு நல்ல ருசியுட்டக்கூடிய காரசாரமான இந்த சட்னியை நிமிடத்தில் தயார் செய்து விடலாம். வாங்க அந்த சட்னி எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1, தயிர் -1/2 கப், மிளகாய் தூள் -1 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனியா – 1ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், கருவேப்பிலை – கொத்து, நல்லெண்ணெய் டேபிள் ஸ்பூன்

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் அரை கப் தயிரை கட்டிகள் இல்லாமல் கரைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டிகள் இருந்தால் சட்னி செய்யும் போது திப்பி திப்பியாக வந்து விடும். அடுத்து ஒரு வெங்காயத்தை நல்ல பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது சட்னியை தாளித்துக் கொள்ளலாம்.

அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த சட்னி ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்த போவதால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். இவை இரண்டும் பொரிந்த உடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக பத்து பல் பூண்டை இடி உரலில் சேர்த்து நல்ல பஞ்சு போல நசுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்து வெங்காயத்தை கருகாமல் பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் மாற்றி விட்டு மிளகாய் தூள், தனியா தூள் உப்பு அனைத்தையும் சேர்த்த பிறகு எண்ணெயிலே பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு தயிரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டிருங்கள்.

- Advertisement -

தயிர் சேர்த்த பிறகு நாம் இப்படி கிளறவில்லை என்றால் தயிர் கட்டி கட்டியாக மாறி தெரிந்தது போல் ஆகிவிடும். இப்படியே கிளறிக் கொண்டே இருந்தால் கிரேவி பாதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் எல்லாம் பிரிந்து தயிர் சட்னி பிரமாதமாக தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்துல சுவையான ரோட்டு கடை இட்லி தண்ணி குருமா ரெடி பண்ணிடலாம். ஒரு முறை இந்த குருமா செஞ்சுட்டீங்கன்னா, இனி இட்லிக்கு சாம்பார், சட்னிக்கு பதில் இதையே தான் செய்வீங்க.

இந்த சட்னி கொஞ்சம் வித்தியாசமாக புளிப்பு காரம் என அனைத்தும் சேர்ந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் ஒரு முறை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -