பத்தே நிமிஷத்துல சுவையான ரோட்டு கடை இட்லி தண்ணி குருமா ரெடி பண்ணிடலாம். ஒரு முறை இந்த குருமா செஞ்சுட்டீங்கன்னா, இனி இட்லிக்கு சாம்பார், சட்னிக்கு பதில் இதையே தான் செய்வீங்க.

- Advertisement -

இட்லி தோசைக்கு நாம் வீட்டில் எத்தனை வகையாக சைட் டிஷ் செய்தாலுமே கூட, இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்னி சாம்பார , குருமா போன்றவை எல்லாம் மிகவும் பிரமாதமாகவே இருக்கும். நம் வீட்டில் செய்வது போல் அதிக பொருட்கள் மசாலா எல்லாம் சேர்த்து கூட செய்ய மாட்டார்கள். அப்படி இருந்தாலும் அதன் ருசி அட்டகாசமாக இருக்கும். அப்படி ஒரு ருசியான ரோட்டு கடை இட்லி தண்ணி குருமா எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த இட்லி தண்ணி குருமா செய்வதற்கு முதலில் ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், தக்காளி இரண்டையும் எடுத்து கொஞ்சம் பெரியதாக நறுக்கி எடுத்துக் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் 3 பச்சை மிளகாய், 1 சிறிய துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு தோல் உரித்தது, 1/4 கப் துருவிய தேங்காய், 10 முந்திரி பருப்பு, முந்திரி பருப்பு இல்லை என்றால் அதற்கு பதில் ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த கடலையும் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இந்த குருமாவை தாளிக்க அடுப்பில் குக்கரை வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 2 சின்ன துண்டு பட்டை, 1 டீஸ்பூன் சோம்பு, 4 லவங்கம், 2 துண்டு கல்பாசி, 2 பிரியாணி இலை இவைகளை எல்லாம் சேர்த்த பின் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு 1 தக்காளியும் பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம், தக்காளி இரண்டும் வதங்கிய பிறகு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த பேஸ்டையும் இதில் சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கர் விசில் முழுவதுமாக இறங்கியவுடன் மூடியை திறந்து குருமாவின் அளவை பார்த்துக் கொள்ளுங்கள். அதிக கெட்டியாக இருந்தால் இன்னும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கும் போது கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்க சப்பாத்தி சுட்டா மட்டும் வரட்டி மாதிரி வருதா? சப்பாத்தி மாவு பிசையும் போது 2 ஸ்பூன் இந்த மாவையும் கூட சேர்த்து பிசைஞ்சு பாருங்க. சப்பாத்தி அப்படியே லேயர் லேயராக சாஃப்ட் ஆக வரும்.

அருமையான ரோட்டு கடை இட்லி தண்ணீர் குருமா தயார் சுட சுட இட்லியுடன் இந்த குருமாவை ஊற்றி தொட்டு சாப்பிடும் போது, எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று நமக்கே தெரியாமல் உள்ளே செல்லும் அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -