மஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த நான்கு இடங்கள்

mahalakshmi

எந்த வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்றாளோ அந்த வீட்டில் செல்வ செழிப்பும், மன அமைதியும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட மஹாலக்ஷ்மி நிரந்தரமாக எங்கெல்லாம் தங்கி இருக்கின்றாளோ, அந்த இடங்களெல்லாம் சிறப்பு வாய்ந்தது தான். அந்த இடங்கள் என்னென்ன என்பதை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்வோமா.

ஒரு முறை விஷ்ணுவுக்கு காமதேனுவை படைக்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்காக விஷ்ணு ஒரு பசுவை வரவைத்து, காமதேனுவாக மாற்ற, அனைத்து தேவர்களையும் அழைத்து அந்த பசுவின் உடலில் அமரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேவர்களும் அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். ஆனால் லக்ஷ்மி தேவியோ சற்று தாமதமாக வந்து விட்டாள். அதனால் பசுவின் அமர துளி கூட இடமில்லை. லட்சுமிதேவியோ பசுவில் அமர வேண்டும் என்ற முடிவினை எடுத்து விட்டாள். இடமோ இல்லை. என்ன செய்திருப்பாள்? லக்ஷ்மி தேவி, காலியாக இருந்த பசுவின் ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டாள். அந்தப் பசு லக்ஷ்மி தேவி அமர்ந்தவுடன் காமதேனுவாக மாறியது. லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கும் அந்த இடத்தை தழுவிக்கொண்டு வருவதால் தான் கோமியத்திற்கு அவ்வளவு சிறப்பு. இதனால் தான் நாம் கோமியத்தை புனிதமாக கருதுகின்றோம். பசுவின் பின்புறத்தை சிலபேர் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வதற்கான காரணமும் இதுதான்.

கோமாதா வழிபாட்டின் சிறப்பு

மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் கோமாதாவின் பின்புறத்திலும், நான்கு கால்களிலும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு அந்த மகாலட்சுமி தாயை ஒன்பது முறை வலம் வந்து, பணிந்து, பூஜை செய்து, ஒரு கட்டு அருகம்புல்லை கொடுத்து, வழிபடுபவர்களுக்கு இந்த உலகத்தில் எல்லா விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது நிச்சயமான உண்மை. ஆயிரம் கோயில்களுக்கு சென்று நாம் பெறும் பலனை ஒரு “கோ” பூஜையின் மூலம் அடையலாம். “கோ” பூஜை செய்வதன் மூலம் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும்.
உயிருள்ள பசுவிற்கு பூஜை செய்ய முடியாதவர்கள் அவர்களது வீட்டில் வெள்ளியில் செய்த காமதேனுவை வாங்கி வைத்து வழிபட்டால் உயிருள்ள பசுவிற்கு பூஜை செய்த பலனை அடையலாம்.

mahalakshmi

- Advertisement -

அடுத்ததாக நம் உள்ளங்கைகளில் மஹாலக்ஷ்மி செய்கின்றாள். இதனால் தான் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை காணவேண்டும் என்று கூறுகிறார்கள். நம் கைகளை நம்பித்தான் நம் வாழ்க்கை உள்ளது. கைகளைக் கொண்டு வேலை செய்தால் தான் தனலக்ஷ்மியை பெறமுடியும். உழைக்கும் கைகளில் மஹாலக்ஷ்மி நிரந்தரமாக இருப்பாள். செல்வச் செழிப்போடு உள்ளவரை பெரிய கை என்று கூறும் வழக்கம் நம்மில் உண்டு.

mahalakshmi

அடுத்ததாக விளக்கில் எரியும் சுடரில் எல்லா தெய்வங்களையும் காண முடியும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி அந்த அனைத்து தெய்வங்களில் மஹாலக்ஷ்மியும் இருக்கின்றாள். ஆகவே சுடரின் ஒளியில் மகாலஷ்மி நிரந்தரமாக வாசம் செய்கின்றாள்.

mahalakshmil

திருமகளான மஹாலக்ஷ்மி திருமாலின் மார்பில் வாசம் செய்வது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. திருமகளின் அருளைப்பெற திருமாலையும் சேர்த்து வணங்க வேண்டும். அடியவர்களுக்கு அருள் தரும்படி திருமாலுக்கு கூறுவதே திருமகள் தான் என்பது உண்மை.
மஹாலக்ஷ்மியின் அம்சத்தை பெற்றிருக்கும் விஷயங்களை நாம் போற்றி வணங்குவதன் மூலம் ஏற்படும் பலன்கள் அதிகம்.

இதையும் படிக்கலாமே:
தாலி கயிறு மாற்றும் முறை

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details about Mahalakshmi vasam seium portukal in Tamil.