தீராத நோய்கள் தீர சிவன் கோவிலுக்கு இந்த மூன்று தானங்களை தொடர்ந்து செய்து வாருங்கள் உடனே நல்ல தீர்வு கிடைக்கும்

dhanam
- Advertisement -

கோவில்களுக்கு சென்று மனதார இறைவனை வேண்டி வழிபடுவது நமது உடல் நலமும், நமது குடும்பமும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான். ஆனால் நோய் நொடி இல்லாமல் இருந்தால் மட்டுமே கோவில்களுக்கும் செல்ல முடியும், இறைவனை வழிபட முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நோய்கள் இல்லாத மனிதன் இல்லை. அனைவரது வீட்டிலும் மாத்திரைகள் வைப்பதற்கென்று தனி அலமாரி இருக்கிறது. இதில் அனைவருக்கும் தேவையான மாத்திரைகளை வைத்துள்ளார்கள். அப்படி மாத்திரை இல்லாமல் ஒரு மனிதன் தூங்குவது என்பது கூட இன்று கடினமாக உள்ளது. இவ்வாறான நோய்கள் நம்மை விட்டு விலக சிவன் கோவிலுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே கோவிலுக்கு சென்று வரும் பொழுது அங்கு உள்ள ஏழை எளியவர்களுக்கு, நம் கையில் உள்ள பணம் அல்லது பழங்கள் தானமாக கொடுப்பது அனைவரின் வழக்கமாகும். இவ்வாறு அடுத்த வேலைக்கு உணவு கூட கிடைக்காதவர்களுக்கு நாம் தானம் செய்வது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.

- Advertisement -

இவ்வாறு கோவிலுக்கு சென்று வரும் பொழுது பிறருக்கு தானம் செய்வதே நமக்கு அதிர்ஷ்டமாக அமைகிறதல்லவா? அதுபோல கோவிலுக்கு தானம் கொடுக்கும் பொழுது நமது நோய் நொடிகள் முற்றிலுமாக தீர்ந்து விடுகிறது. அவ்வாறு சிவன் கோவிலுக்கு இந்த பொருட்களை தானமாக கொடுக்க தீராத நோய்கள் உடனே தீரும்.

பொதுவாகவே சிவன் கோவில் என்றால் அங்கு பிரசாதமாக கொடுக்கப்படுவது விபூதி தான். இந்த விபூதி சிவன் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்படும். எனவே சிவன் கோவிலுக்குச் செல்லும் பொழுது சுத்தமான பசும் சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை வாங்கி ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, அதனை சிவன் கோவில் பூசாரியிடம் இது கோவிலுக்கு கொடுக்கப்படும் தானம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக முப்பெரும் தெய்வங்களும் வாசம் செய்யும் விசேஷமான அரச மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளைத் தானமாக வழங்க சிறப்பு பலன்கள் கிடைக்கிறது. அதாவது யாகங்கள் செய்யும் பொழுது அதில் சேர்க்கப்படும் குச்சியில் ஒன்று தான் அரச மரக்குச்சி. தப்பித் தவறியும் இந்த அரச மரத்திலிருந்து விழும் குச்சியை வீட்டில் சுடுதண்ணீர் போடுவதற்கோ அல்லது சமைப்பதற்கோ அடுப்பு எரித்து பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு செய்வது பாவம் செய்வதற்கு சமமாகும். எனவே அரச மரக் குச்சிகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கியோ, அல்லது உங்கள் வீட்டிற்கு அருகில் அரசமரம் இருந்தால் மரத்திலிருந்து தானாக விழும் குச்சியை சேகரித்து, காயவைத்து அதனை ஒரு கட்டு போல் கட்டி, அதனையும் கோவில் பூசாரியிடம் தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பது கோடி புண்ணியங்களை உங்களுக்கு சேர்க்கிறது. அடுத்ததாக விசேஷ நாட்களில் இரட்டை இழை கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை பயன்படுத்த வேண்டும். இந்த பச்சரிசி மாவை கோவிலுக்கு செல்லும் பொழுது எடுத்துச் சென்று அங்கு ஒரு ஓரத்தில் சிறிய கோலம் போட்டு வர, கோவிலுக்குள் இருக்கும் ஈ, எறும்புகள் அதனை சாப்பிட்டால் உங்கள் உடல்நலம் விரைவில் குணமாகும்.

- Advertisement -