பூஜை அறையில் தினமும் தண்ணீர் வைக்க வேண்டுமா? அதை மறுநாள் என்ன செய்வது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

theertham
- Advertisement -

பூஜை செய்யும் போது கட்டாயம் தண்ணீர் வைத்த பிறகு தான் பூஜையைத் துவக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் செய்யும் பூஜையானது நிறைவு பெறுவதில்லை. இதனால் நீங்கள் வேண்டியது பலிக்காமல் போகும் எனவே பூஜை அறையில் கட்டாயம் தண்ணீரை வைக்க வேண்டும். பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கும் தண்ணீரை விடுத்து பூஜையை துவங்குவது முறை அல்ல. அப்படி பூஜையில் வைக்கும் தண்ணீரைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

deepam

பூஜை அறையில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது பஞ்ச பூதங்களும் இருக்க வேண்டும். நிலம், ஆகாயம், விளக்கு எரியும் தீபம் நெருப்பு, காற்று மற்றும் தண்ணீர் இவை அனைத்தும் அங்கு இருக்கும் பொழுது தீபத்தை ஏற்றும் பொழுது தான் தெய்வீக சக்தியை நம்மால் உணர முடியும். அங்கு பரவும் தெய்வீக அதிர்வலைகளே நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றி தரும் என்பது நம்பிக்கை. எனவே பூஜை அறையில் தண்ணீரை முதலில் வைத்து பின் பூஜையை தொடங்குங்கள்.

- Advertisement -

இப்படி வைக்கும் தண்ணீரானது தினமும் மாற்றி அமைக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கிறீர்களோ, இல்லையோ, ஆனால் தினமும் தண்ணீரை மட்டும் மாற்றி விட வேண்டும். செவ்வாய், வெள்ளியில் நீங்கள் பூஜை செய்யும் பொழுது புதிய தண்ணீரை வைத்து அதில் பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் சேர்த்திருப்பார்கள். குறிப்பாக பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் துளசி இலைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். பச்சை கற்பூரத்தை அதிக அளவில் சேர்க்கக் கூடாது எனவே கொஞ்சமாக நொறுக்கி சேர்த்தால் போதும்.

thulasi-theertham

தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி இலைகள் போன்றவற்றை சேர்க்கலாம். இந்த தெய்வீக மணம் பூஜை அறை முழுவதும் பரவும் பொழுது இறைசக்தி ஆகர்சனம் ஆகிறது. பூஜை செய்யும் பொழுது இத்தகைய மணம் நம் மனதை ஒருமுகப்படுத்தும். முழுமனதுடன், பக்தியுடன் பூஜை செய்ய வழிவகை செய்யும். எனவே தான் பூஜை அறை எப்பொழுதும் தெய்வீக மணம் கமழும் படி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

- Advertisement -

பூஜை முடிந்ததும் அந்த தீர்த்தத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் குடிக்க கொடுக்க வேண்டும். மறு நாள் முடியும் வரை தண்ணீர் அப்படியே இருக்கலாம் ஆனால் அதற்கு மேல் தொடர்ந்து தீர்த்தத்தை அப்படியே விட்டு வைப்பது முறையல்ல. அது காற்றில் உலர்ந்து நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும். இப்படி பூஜை அறையில் வைக்கப்படும் தீர்த்தமானது குறையக்கூடாது எனவே அது குறையும் முன்னரே உங்கள் வீட்டில் செடி, கொடிகள் இருந்தால் அதற்கு ஊற்றி விடுங்கள்.

plant-in-kitchen

அப்படி இல்லாத பட்சத்தில் அந்த தண்ணீரை வேறு எங்கும் கொட்டக் கூடாது. கண்டிப்பாக எச்சில் துப்பும் வாஷ்பேஷனில் கட்டாயம் ஊற்றக் கூடாது. இந்த தண்ணீரை நீங்கள் சமையலறையில் இருக்கும் சிங்கிள் ஊற்றி விடலாம் அல்லது செடிகளுக்கு ஊற்றலாம். சமையலறையில் எப்பொழுதும் ஒரு மண் தொட்டியை வைத்து இருந்தால் அந்தத் தொட்டியில் ஏதாவது வெயில் தேவைப்படாத சிறிய அளவிலான செடிகளை வளர்க்கலாம். அதில் இந்த மாதிரியான தண்ணீர், பூஜை அறையில் இருக்கும் பூக்கள் போன்றவற்றை போட்டு வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -