தீய சக்தியின் ஆதிக்கம் உங்கள் வீட்டில் இருக்கின்றது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்! தீய சக்திகளை வீட்டில் இருந்து விரட்ட, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்வது?

narasimha

ஒருவருடைய வீட்டில் எப்போது இறைவழிபாடு செய்வதற்கான தடைகள் அதிகமாக வருகின்றதோ, அந்த வீட்டில் தெய்வ சக்தியின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகின்றது என்பது அர்த்தம். எதிர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டில் குடி போகப் போகிறது என்பது அர்த்தம். ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் தினந்தோறும் இறைவழிபாட்டை செய்யவேண்டும். காலையில் தீபம் ஏற்ற முடியாதவர்கள் கூட, மாலை ஒரு முறையாவது பூஜை அறையில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யாமல் இருக்கவே கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சில நாட்கள் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் அது வேறு விஷயம்.

poojai

காரணமே இல்லாமல் வீட்டில் தீபம் ஏற்றாமல், பூஜை அறையை அப்படியே போட்டு வைப்பது வீட்டில் கஷ்டம் வரப் போவதை உணர்த்தும் அறிகுறி. இரண்டாவதாக சுத்தமாக இருக்கக்கூடிய வீடு ஏதாவது ஒரு காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக அசுத்தமடையும். காரணமே இல்லாமல் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

இதுநாள் வரை பழைய உடைந்த பொருட்களே இல்லாத வீட்டின் திடீரென்று உடைந்த, நிறைய பொருட்கள் சேர ஆரம்பிக்கும். குறிப்பாக தேவையற்ற உடைந்த இரும்பு பொருட்களை நம் வீட்டின் தேக்கி வைத்து இருப்போம். ஏன் என்றே தெரியாது! காரணமே தெரியாமல் நம் வீட்டில் குப்பை கூளங்கள் நிறைந்திருக்கும். கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால் செல்ல முடியாத சூழ்நிலை நிலவும். வீட்டில் சுப காரியம் தடை ஏற்படும்.

kettasathi-1

மன அமைதி இருக்காது. ஒரு கட்டத்தில் நாமே இதை உணர தொடங்கி விடுவோம். ‘நம்முடைய வீட்டில் ஏதோ ஒன்று சரியில்லை, இறை அம்சம் நிறைந்திருக்கவில்லை’ என்று உள்ளுணர்வு நமக்கு சொல்லத் தொடங்கி விடும். அடிக்கடி காலில் அடிபட்டு கொண்டே இருக்கும். நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்களுடைய வீட்டில் இருந்தால் நிச்சயமாக எதிர்மறை சக்திகளில் ஏதோ ஒன்று உங்கள் வீட்டில் ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

- Advertisement -

அது ஏவல் பில்லி சூனியம் என்ற பெரிய பிரச்சனையாக இல்லை என்றாலும், கண்திருஸ்டி கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலில் ஏதோ ஒரு துர்தேவதை உங்களை ஆட்டிப் படைக்க தொடங்கியிருக்கும். சரி, இதை சரி செய்ய என்ன செய்வது?

elumichai-palam

ராகு கால நேரத்தில் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனை கோவிலுக்கு சென்று வழிபடலாம். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருந்தபடியே தீபம் ஏற்றி வைத்து அம்பாளை மனதார நினைத்து வழிபாடு செய்யலாம்.

varahi

அடுத்தபடியாக பிரத்தியங்கிரா தேவி, நரசிம்மர், வாராஹி அம்மன், மகா பத்ரகாளி, அங்காள ஈஸ்வரி இப்படி உங்கள் வீட்டின் அருகில், இதில் எந்த தெய்வத்தின் சன்னிதானம் இருந்தாலும் அந்த கோவிலுக்கு ராகு கால நேரத்தில் சென்று, இந்த தெய்வங்களை தரிசனம் செய்ய வேண்டும். எப்படி? ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து, அந்தப் பழத்தை உக்கிர தெய்வங்களின் பாதங்களில் வைத்து பூஜை செய்து, அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி கொண்டு வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

durga

இப்படியாக வாரத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களை உக்கிர தெய்வங்களின் கோவிலில் இருந்து எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து, பழைய எலுமிச்சம்பழத்தை குப்பையில் போட்டு விட வேண்டும். தொடர்ந்து 11 எலுமிச்சம் பழங்களை இப்படியாக உங்களுடைய வீட்டில் வைத்து தீபம் ஏற்றி தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டாலே போதும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தானாக விரட்டி அடிக்கப்படும்.

kaali-abishegam1

வீட்டை ஒரு முறை நன்றாக முழுமையாக சுத்தம் செய்து, வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு வீட்டை எப்போதுமே கமகமவென்று வைத்துக்கொள்ளுங்கள். கெட்ட சக்தியின் ஆதிக்கம் நீங்க இந்த பரிகாரங்களே கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.