தேய்பிறை நிலவு போல உங்களது கஷ்டங்கள் குறைந்து கொண்டே போகவும், வளர் பிறை நிலவு போல உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றங்கள் படிப்படியாக உயரவும், இந்த 2 பொருள் போதுமே!

surya-chandran

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே போகவும், நமக்கு வரக்கூடிய நன்மைகள் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லவும், தேய்பிறையிலும், வளர்பிறையிலும்  இந்த இரண்டு கிரகங்களை நினைத்து, இந்த இரண்டு தானியங்களை வைத்து, இந்த இரண்டு தீபங்களை ஏற்றினால் போதும். வாழ்க்கையில் தீராத துயரங்களும் தீருவதற்கு, அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செய்து வந்த பரிகாரங்களை, சுலபமான முறையில் இந்த காலகட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு, எப்படி சுலபமாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

pournami

உங்கள் வீட்டில் பீங்கான் கிண்ணம் இருந்தாலும் பரவாயில்லை. கண்ணாடி பவுல் இருந்தாலும் பரவாயில்லை. அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சில்வர் பாத்திரத்தை மட்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம். மண் குடுவை இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை. முதலில் அமாவாசை தினத்தில், வளர்பிறையில் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றிகள் படிப்படியாக உயர வேண்டும் என்பதற்காக, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அமாவாசை அன்று மாலை நேரத்தில் உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு ஒரு சிறிய தாம்பூலத்தின் மேல், கண்ணாடி பவுலை வைத்து விட்டு, அதில் கோதுமை தானியத்தை நிரப்பவேண்டும். அந்த தானியத்திற்கு அருகில் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

Pournami days in Tamil Calendar

அமாவாசை தினத்திலிருந்து பௌர்ணமி நாள் வரும் 15 நாள் வரை அந்த தானியத்தை மாற்றத் தேவையில்லை. தினம்தோறும் ‘ஓம் சூர்யாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து சூரிய பகவானை மனதார நினைத்து கொண்டு தீபம் ஏற்றி வைத்தால் போதும். பதினைந்தாவது நாள் பௌர்ணமி தினத்தன்று நீங்கள் சூரிய பகவானை வேண்டி வைத்திருக்கும் தானியத்தை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டு விட்டு, அந்தப் கண்ணாடி பவுலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

மீண்டும், பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணி அளவில் உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அதே கண்ணாடி பவுலில் முழுமையாக பச்சரிசியை நிரப்ப வேண்டும். பச்சரிசி கிண்ணத்திற்கு பக்கத்தில் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, ‘ஓம் சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து சந்திர பகவானை வேண்டிக் கொள்ள வேண்டும். தேய்பிறையிலும் தொடர்ந்து 15 நாட்கள் சந்திர பகவானை நினைத்து இந்த வழிபாட்டை தொடர வேண்டும். 15 நாட்கள் முடிந்ததும் அமாவாசை தினத்தன்று இந்த பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு இறையாக வைத்துவிட வேண்டும்.

amavasai

அம்மாவாசையில் இருந்து பௌர்ணமி தினம் வரை சூரிய பகவானை வழிபட வேண்டும். பௌர்ணமி தினத்தில் இருந்து மீண்டும் அமாவாசை வரும் வரை சந்திர பகவானை வழிபட வேண்டும். அமாவாசைக்கும் பௌர்ணமி தினத்திற்கும் இடைப்பட்டு வரும் 15 நாட்களும் நீங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் தானியத்தின் அருகில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

wheat

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சூரியனும் சந்திரனும் இல்லாமல் இந்த உலகம் இயங்காது. இந்த இரண்டு கிரகங்களின் ஆசிர்வாதத்தை முழுமையாகப் பெறுவதற்கு இதை விட சுலபமான பரிகாரம் எதுவும் இல்லை.

தேய்பிறையில் நாம் செய்யக்கூடிய சந்திர பகவானின் வழிபாடு நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர, தீராத நோய்கள் தீர, காரியத்தடை இவைகளை படிப்படியாக குறைக்கும். வளர்பிறையில் நாம் சூரிய பகவானை வேண்டி செய்யக்கூடிய இந்த வழிபாடு, நம்முடைய வாழ்க்கையை படிப்படியாக உயர்த்திக் கொண்டே செல்லும். நல்லவேளை, செல்வவளம், ஆரோக்கியம் இவைகளில் மேன்மை அடைய சூரியனின் வழிபாடு கை மேல் பலன் கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மூக்குக்கு மேல் கோபம் வருபவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் கோபம் குறைந்து அதிசயம் நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.