தந்தையை மிஞ்சிய தெனாலிராமனின் மகன் – குட்டி கதை

Thenali-raman

ஒரு சமயமும் அரபுநாட்டு மன்னர் ஒருவர் கிருஷ்ணதேவராயருக்கு அழகிய வண்ணங்களோடு பூ பூக்கும் ரோஜா செடிகள் பல வற்றை அன்பளிப்பாக கொடுத்தார். மன்னரும் அதை தோட்டத்தில் வைத்தார். சில நாட்களில் அந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்கின. அந்த வழியாக சென்ற தெனாலி ராமனின் மகன் இதை கண்டு, இவளவு அழகிய பூக்களை பறித்து சென்று அன்னையிடம் கொடுத்தால் அவர் மகிழ்ச்சிகொள்வாரே என்று எண்ணி பூக்களை பறித்தான்.

Thenali raman story

இதை கண்ட காவலாளிகள், பூக்களை பிரித்த குற்றத்திற்காக தெனாலி ராமனின் மகனை கைது செய்தனர். பூக்கள் நிறைந்த கையோடு அவனை மன்னரிடம் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். தன் மகம் கைது செய்யப்பட்டிருப்பதை கண்ட தெனாலிராமன் செய்வதறியாது திகைத்தான். உடனே தான் போர்த்தி இருந்த துண்டை எடுத்து தன் மகன் மீது போர்த்தி விட்டு, இன்று வெயில் அதிகமாக இருப்பதால் இந்த துண்டு இவனை காக்கும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

தெனாலி ராமனின் மகன் உடனே யோசிக்க துவங்கினான். நம் தந்தை இந்த துண்டின் மூலமாக நமக்கு ஏதோ ஒரு தகவலை சொல்லி இருக்கிறார். அது என்னவாக இருக்கும் என்பதை யோசித்து சில நொடிகளில் அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டான். உடனே தன் கைகளில் இருந்த ரோஜா பூக்களை ஒவ்வொன்றாக உன்ன ஆரமித்தான். அவன் மேல் துண்டு போர்த்தி இருந்ததால் அவன் போக்களை உண்பதை காவலாளர்களால் காண முடியவில்லை.

Thenali raman story

சில நிமிடங்களில் அவர்கள் மன்னர் இருக்கும் இடத்தை அடைந்தனர். திருட்டு சம்பவம் குறித்து மன்னரிடம் காவலாளிகள் முழுமையாக விளக்கினார். மன்னரும் தீர விசாரித்தார். இறுதியாக, இவன் திருடிய பூக்கள் எல்லாம் எங்கே என்று மன்னர் கேட்டார். அனைத்தும் இவனிடம் தான் உள்ளது அரசே என்று காவலாளிகள் கூறினர். அப்போது தான் தெனாலி ராமனின் மகன் பேச துவங்கினான். அரசே இவர்கள் பொய்யுரைக்கிறார்கள். நான் பூக்களை பறிக்கவே இல்லை. என் தந்தையின் மீது இவர்கள் கொண்ட கோபத்தால் என்னை வெறுமனே கைது செய்து என் மீது அபாண்டமாக பழி சுமத்தி தண்டனை பெற்று தர எண்ணுகிறார்கள் என்றான். இதை கேட்டு காவலாளில்கள் அதிர்ந்து போனார்கள். தெனாலி ராமனையே இவன் மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டனர். பூக்கள் இல்லாததால் தெனாலிராமனின் மகம் விடுவிக்க பட்டான். அதோடு காவலாளிகளை அரசர் எச்சரித்து அனுப்பினார்.

- Advertisement -

Thenali raman story

ஒருவழியாக தந்தையை போல புத்திசாலித்தனமாக யோசித்து, தந்தையின் உதவியோடு ஒரு பெரும் பிரச்னையில் இருந்து தப்பித்தோம் என்று எண்ணியவாறே துள்ளி குதித்துக்கொண்டு தன் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு சென்றான் தெனாலிராமனின் மகன். இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்த்த பதிவுகளை படிக்க தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்

English Overview:
This is a Thenali raman story in Tamil. In this story Thenali raman’s son was caught by security. Since he theft the flowers. But with his talent Tenali raman son was escape. The above story explains how he escaped from that.