விநாயகருக்கு பிடிச்ச பூரண கொழுக்கட்டை! இந்த டிப்ஸ் தெரிஞ்சுகிட்டா நாளைக்கு நீங்க செய்யப் போற கொழுக்கட்டை சொதப்பவே சொதப்பாது.

kozhukattai3
- Advertisement -

விநாயகருக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச இனிப்பு சுவை நிறைந்த பூரண கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேருக்கு நன்றாக சமைக்க வராது. நன்றாக சமைக்க தெரிந்தவர்கள் இந்த கொழுக்கட்டை செய்தால் கூட, அதில் பதம் சரியாக வராது. கடையிலிருந்து வாங்கிய கொழுக்கட்டை மாவு, அரிசி மாவில் இப்படி பூரண கொழுக்கட்டை செய்தால் அது ஆறிய பின்பு, மேலே இருக்கும் மாவு மிகவும் வறண்டு போய் ரஃப்பாக மாறிவிடும். ஆறிய பின்பும் சாஃப்ட்டாக கொழுக்கட்டை கிடைக்க, பின் சொல்லக்கூடிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நீங்க செய்த கொழுக்கட்டை பிள்ளையாருக்கு ரொம்பவும் பிடிக்கும். வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் பூரணம் தயாரித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெல்லம் – 3/4 கப், தண்ணீர் – 1/4 கப், ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி மீண்டும், வெல்லத்தை அதே கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக 1 கப் – தேங்காய் துருவலை வெல்லக் கரைசலோடு சேர்த்து ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன், 1 சிட்டிகை உப்பு, சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொடுங்கள். வெல்லத்தின் பச்சை வாடை நீங்கி, தேங்காய் வெல்லத்தில் வெந்து, கொஞ்சம் திக்காக வரும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். ஏனென்றால் இந்த பூரணம் சூடு ஆற ஆற இன்னும் கட்டிப்பிடிக்கும். பூரணம் நன்றாக ஆரட்டும். சூடாக இருக்கும்போது பூரணத்தை தட்டு போட்டு மூடக்கூடாது. வெல்லம் இன்னும் தண்ணீர் விட தொடங்கி விடும்.

- Advertisement -

அடுத்தபடியாக கொழுக்கட்டை செய்ய மாவு தயார் செய்துவிடலாம். அடுப்பில் ஒரு கடையை வைத்து 1 1/2 கப் அளவு தண்ணீர், நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதி வந்தவுடன் 1 கப் அரிசி மாவை இந்த தண்ணீரில் கொட்டி கட்டிகள் விழாமல் கலக்க வேண்டும். மாவு தண்ணீரில் நன்றாக வெந்து கெட்டி பதம் வந்ததும். அடுப்பை அணைத்து விடுங்கள். (கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு, அரிசி மாவு, இதில் எந்த மாவு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். வீட்டிலேயே நீங்கள் பச்சரிசி மாவு அரைத்து இருந்தால், அதை வறுத்து விட்டு ரெசிபிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)

மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மாவின் மேல் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, உங்களுடைய கையில் நெய் தடவிக் கொண்டு, மாவை கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொடுக்க வேண்டும். இப்போது கொழுக்கட்டை மாவும் தயார். பூரணமும் தயார்.

- Advertisement -

கொழுக்கட்டை மாவை திறந்து வைக்க கூடாது. ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். இல்லை என்றால் மாவு வறண்டு போய் டிரை ஆகிவிடும். மாவு டிரை ஆகிவிட்டால் கொழுக்கட்டை ரஃப்பாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்போது தயாராக இருக்கும் மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளை தயார் செய்து, உங்களுக்கு தேவையான வடிவத்தில் கொழுக்கட்டையாக மாற்றி உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லி பானையில் 8 லிருந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் போதும். சூப்பரான பூரண கொழுக்கட்டை தயாராக இருக்கும்.

பின்குறிப்பு: கடையிலிருந்து வாங்கிய மாவு சாஃப்ட்டாக கிடைக்க வேண்டும் என்றால் சுடுதண்ணீரில் போட்டுத்தான் மாவை பிசைய வேண்டும். கட்டாயமாக நெய்விட்டு தண்ணீரை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் மாவை பிசையும் போது மாவு ரஃப் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது. வாயில் வைத்த உடன் கரையும் அளவிற்கு இந்த கொழுக்கட்டை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நெய் அவசியமாக இதில் கொஞ்சம் சேர்க்க வேண்டும். மேலே சொன்ன குறிப்பை சரியாக பின்பற்றினால் கொழுக்கட்டை நிச்சயம் சொதப்பாது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -