தேங்காய் பால் எடுக்காமல் தேங்காய் சாதம் சுவையாக எளிதாக எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? ஈஸி மெதர்ட் தேங்காய் சாதம்!

coconut-rice-sadham
- Advertisement -

பொதுவாக தேங்காய் சாதம் என்றால் தேங்காய் பால் எடுத்து குக்கரில் செய்வது உண்டு அல்லது தேங்காய் பால் சேர்த்து பிரியாணி போல கிண்டுவதும் உண்டு. ஆனால் தேங்காய் துருவல் கொண்டு ரொம்பவே சுலபமான முறையில் ஈசி மெத்தர்டில் எப்படி தேங்காய் சாதம் சுவையாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
துருவின தேங்காய் – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

தேங்காய் சாதம் செய்முறை விளக்கம்:
தேங்காய் சாதம் செய்வதற்கு முதலில் துருவின தேங்காய் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் சாதம் செய்யும் பொழுது எப்பொழுதும் தேங்காயின் உடைய பின்பகுதி தோலை எடுத்து விட்டு செய்வது தான் நல்லது. தேங்காய் உடைய தோலுடன் செய்யும் பொழுது நிறைய சாப்பிட முடியாது, திகட்ட ஆரம்பிக்கும். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த அளவிற்கு ஒரு ஆழாக்கு அதாவது கால் கிலோ அரிசியை நீங்கள் சாதமாக வடித்து வைப்பது சரியாக இருக்கும். கூடுதல் சாதம் செய்பவர் அதற்கேற்ப அளவுகளையும் கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள்.

இது போல தேங்காய் சாதம் அல்லது வெரைட்டி ரைஸ் செய்யும் பொழுது சாதத்தை உதிரி உதிரியாக வடிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் சாதத்திலேயே நீங்கள் உப்பு சேர்த்து விட வேண்டும். அப்பொழுது தான் சுவை தூக்கலாக இருக்கும். சாதத்தில் உப்பு போட்டு நன்கு உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் பெரிய வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் தேங்காய் சாதம் இன்னும் சூப்பராக இருக்கும். விரும்பாதவர்கள் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் சாப்பிடும் பொழுது வாய்க்கு கிடைத்து நல்ல சுவையாக இருக்கும், எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப அதிகமாக கூட சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் பொடி பொடியாக சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பச்சை மிளகாய் வெள்ளையாக சுருள வதங்கியதும், துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மீதமான இட்லி இருந்தா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க. இதிலிருந்து ஒரு துண்டு இட்லி கூட யாருக்கும் மிச்சம் கிடைக்காது.

பூ போல தேங்காய் துருவல் சேர்த்ததும் நன்கு வதக்கி விடுங்கள். இந்த தேங்காய்க்கு தேவையான அளவிற்கு மட்டும் கொஞ்சம் போல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவல் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்து நன்கு எண்ணெயுடன் சேர்ந்து திரண்டு வர வேண்டும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். ஆறிய சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒன்றுபோல் கரண்டியை வைத்து அழுத்தம் கொடுத்து பரப்பி விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள், செம டேஸ்டியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதை விட சூப்பராக தேங்காய் சாதம் ஈஸியான முறையில் செய்ய முடியாது. இதனுடன் காரமாக எந்த ஃப்ரை வைத்து கொடுத்தாலும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -