என்ன! வீணாக தூக்கி கீழே போடும் இந்த கொட்டாங்குச்சியை வைத்து இத்தனை வேலைகளை சுலபமாக செய்யலாமா? அது என்னனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க.மிஸ் பண்ணிடாதீங்க.

cocount peal cooker milk curd
- Advertisement -

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் வீட்டில் பயன்படுத்திய பிறகு தேவை இல்லை என்று தூக்கி எறியும் சில பொருட்களில் இருக்கும் பயன்களை நினைத்தால் நாமே ஆச்சரியப்பட்டு விடுவோம். அந்த வகையில் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் வேண்டாம் என நினைத்து தூக்கி எறியும் ஒரு கொட்டாங்குச்சியை வைத்து என்னென்ன பயன்கள் உண்டு என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் எப்பொழுதும் காலையில் பரபரப்பாக வேலை செய்யும் போது பருப்பு, அரிசி சிறிது நேரம் ஊற வைத்து அதன் பிறகு குக்கரில் வைத்தால் தான் சீக்கிரம் வேகம். இனி இவற்றை எல்லாம் வேக வைக்கும் போது அதில் ஒரு துண்டு தேங்காய் சிரட்டை சுத்தம் செய்து போட்டு வேக விட்டால் போதும் பருப்பு, அரிசி எல்லாம் நன்றாக சீக்கிரம் வெந்து விடும். அதே நேரத்தில் பொங்கி வெளியே ஊற்றி நமக்கு வேலையும் அதிகப்படுத்தாது.

- Advertisement -

அதே போல இந்த வெயில் காலத்தில் தினமும் வீட்டில் தயிர் தேவைப்படும். சில நேரங்களில் உறை ஊற்றி வைக்க மறந்து விடுவோம். அப்போது மதியம் உணவுக்கு தேவைப்படும் தயிரை உடனே தயார் செய்ய வேண்டும் என்றால், உடனே தேங்காய் சிரட்டில் உறை ஊற்றி வைத்து விடுங்கள். மதிய சாப்பாட்டிற்கு சீக்கிரம் தயிர் கிடைத்து விடும். இதே குறிப்பை மழை காலத்தில் கூட செய்யலாம்.

அதை போல் நீங்கள் உறையூற்ற பயன்படுத்தும் பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும், இந்த தேங்காய் சிரட்டில் ஊற்றி வைக்கும் பொழுது தண்ணீர் எல்லாம் உறிந்து கடைகளில் கிடைப்பது போல நல்ல கெட்டியான தயிர் கிடைக்கும்.

- Advertisement -

அதே போல் வீட்டில் உப்பு ஜாடியில் எப்போதும் ஒரு துண்டு தேங்காய் சிரட்டை போட்டு வைத்தால் உப்பிலிருந்து நீர் விட்டு வீணாகாமல் இருக்கும். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களிலும் தேங்காய் சிரட்டை போட்டால் கெட்டுப் போகாமலும், பூச்சி வைக்காமலும் இருக்கும்.

இந்த தேங்காய் ஓட்டை கீழே தூக்கி போடாமல் அதில் கொத்தமல்லி, புதினா போன்ற சிறு தாவரங்களை நட்டு வைத்து வளர்த்தால், வீட்டிற்கு தேவையானவற்றை நாமே வளர்த்தது போலவும் இருக்கும். பார்க்கவும் அழகாக இருப்பதோடு, இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- Advertisement -

தேங்காய் சிரட்டை மட்டுமில்லாமல் இதன் நாறும் கூட நமக்கு பல வகையில் பயன்படும். பாத்திரத்தில் படிந்த கடினமான கறைகளை தேய்க்க கம்பி நார் போன்றவற்றை பயன்படுத்தாமல் தேங்காய் நாரை பயன்படுத்தும் போது சீக்கிரமாக கறை நீங்கி விடும். அது மட்டும் இன்றி கம்பி நாரை பயன்படுத்தும் போது பாத்திரம் சில சமயங்களில் கீறல் விழுந்தது போல ஆகும். தேங்காய் நாரை பயன்படுத்தும் போது அப்படி ஆகாது.

இதையும் படிக்கலாமே: என்னங்க தங்க நகையை கடையில் கொடுத்து பாலிஷ் போட பயமாக இருக்கா? இனி கொஞ்சமும் பயப்படாம உங்க பழைய நகையை நீங்களே பைசா செலவில்லாமல் பளிச்சென்று மாற்ற முடியும். இதோ அதுக்கான சூப்பர் ஐடியா

இப்படி நமக்கு தேவை இல்லை என தூக்கிப் போடும் ஒரு பொருளில் இத்தனை விஷயங்களை நாம் செய்து கொள்ளலாம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலே இருக்கலாம் தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பயனடையலாம்.

- Advertisement -