எவ்வளவு பெரிய கஷ்டமும் காணாமல் போகும். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது 9 நாளில் நிறைவேற, இந்த 1 தேங்காய் போதுமே!

vinayagar

யார் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் உண்மையான இறை வழிபாட்டிற்கு நிச்சயம் கைமேல் பலன் உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையான இறைவழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் குறிக்கோளாக இருந்தாலும், ஆசையாக இருந்தாலும் அதை மனதில் சொல்லிக்கொண்டே, விநாயகப் பெருமானை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றிதான். 9 நாட்கள், இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு, அடுத்த 3 மாதங்களுக்குள், நீங்கள் எண்ணியது நிறைவேறும். இந்த பரிகாரத்தோடு, உங்களது விடா முயற்சியும் அவசியம் தேவை என்ற கருத்தோடு இந்த பதிவிற்குள் செல்லலாமா?

karpaga-vinayagar

வழிபாட்டு முறை என்பது வேறு வேறாக இருந்தாலும், நம்பிக்கை மன உறுதியில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் இருக்கவே கூடாது. இந்த பரிகாரத்தை தொடங்குவது முதல், உங்கள் மனதில் உங்களது குறிக்கோள் மட்டும்தான் இருக்க வேண்டும். அதாவது சொந்த வீடு கட்ட பணம் சேர்க்க வேண்டுமா? நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? வீட்டில் செல்வம் சேர வேண்டுமா? குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா? வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் ஆரோக்கியம் பெற வேண்டுமா? எதுவாக இருக்கட்டும். அந்த ஒரு வார்த்தையை மட்டும் நேர்மறையாக உங்கள் மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு, வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உங்கள் மனதில் உள்ளது. ஆனால், அதற்கான பணத்தை சேர்க்கும் சூழ்நிலை உங்களிடத்தில் இல்லை. அதற்கான வருமானமும் உங்களிடத்தில் இல்லை. ‘வீடு கட்டுவதற்கு பணம் சேர்க்க நல்ல வழியைக் காட்டு’ என்றவாறு மனதிற்குள் சொல்லிக் கொண்டே இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள் அவ்வளவு தான்.

thengai-coconut

இந்த பரிகாரத்தை தொடங்கும் நாள் அஸ்வினி நட்சத்திரம், மகம், மூலம், இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு தினத்தில் தான் தொடங்க வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள் 9 தேங்காய், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பன்னீர் இது மட்டுமே போதும். பரிகாரத்தை அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முந்தைய நாள் இரவே தேங்காயை வாங்கி நன்றாக சுத்தம் செய்துவிட்டு, அதாவது மேல் இருக்கும் குடுமியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றபடி, மேலே உள்ள தேங்காய் நார்களை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு மரப் பலகையின் மீது அமர்ந்து, உங்களது குறிக்கோளை மனதில் சொல்லிக் கொண்டே, ஒரு சிறிய கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் பொடியை சேர்த்து கொஞ்சமாகத் பன்னீர் விட்டு, நன்றாகக் குழைத்து கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் தேங்காவில் இந்த மஞ்சள் கரைசலை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். தேங்காய் மஞ்சள் நிற தேங்காயாக மாறிவிடும். அதன் பின்பு தேங்காயை சுற்றி மூன்று குங்குமப் பொட்டு வைத்து, அந்த தேங்காயை ஒரு தட்டில் வைத்து உங்கள் பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள்.

kasthuri-manjal

மறுநாள், அஸ்வினி நட்சத்திரத்திற்கு உண்டான நாள்வரும். காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களது குறிக்கோள் நிறைவேறும் என்று நினைத்துக்கொண்டு, அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு உங்களால் விநாயகருக்கு அருகம்புல், எருக்க மாலை, பழம், எதை வாங்கி தரமுடியுமோ அதை வாங்கிக் கொடுத்துவிட்டு, வழிபாடு செய்தால் போதும்.

pillaiyar-prayer

விநாயகரை ஒரு முறை வலம் வந்துவிட்டு, உங்கள் கையில் இருக்கும் தேங்காயை சிதறு தேங்காயாக விட்டுவிடுங்கள். முதல்நாள் ஒரு தேங்காயை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டாவது நாள், இதே போல இரண்டு தேங்காய், மூன்றாவது நாள் மூன்று தேங்காய், என்றவாறு ஒன்பது நாட்களுக்கு 9 தேங்காய் வரை இந்த பரிகாரத்தை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

thengai

முதல் நாள், முதல் தேங்காயை உடைக்கும் தினம் தான் அஸ்வினி நட்சத்திரமாக இருக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் நாட்களுக்கு நாம் எதுவும் பார்க்க தேவையில்லை. உங்களுடைய மனம் உறுதியாக இருக்க வேண்டும். குறிக்கோளில் வெற்றி அடைய வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம்கூட குறையக்கூடாது. வீட்டிலிருந்து தேங்காயை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று உடைக்கும் வரை, உங்களது குறிக்கோள் மட்டும் தான், உங்கள் மனதில் ஓடவேண்டும்.

pray

பரிகாரத்தை நல்லபடியாக 9 நாள் செய்து முடித்து விடுங்கள். அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களது முயற்சியைக் கைவிடக்கூடாது. கட்டாயம் நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறுவதற்கு ஒரு வழி கிடைத்திருக்கும், என்பதில் சந்தேகமே கிடையாது. விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நம்பி வழிபாடு செய்பவர்கள் தோற்றதில்லை, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தேங்காய் தீபம் ஏற்றுவது நல்லதா? எந்த தெய்வத்திற்கு? எந்த எண்ணெயில் தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.