தேங்காய் தீபம் ஏற்றுவது நல்லதா? எந்த தெய்வத்திற்கு? எந்த எண்ணெயில் தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

coconut-deepam
- Advertisement -

பொதுவாக தேங்காய் தீபம் பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக இடம் பெறுவது இல்லை. தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்றுவது முறை அல்ல. தேங்காய் தீபத்தை பற்றிய குறிப்புகள் அவ்வளவாக சாஸ்திரத்தில் இல்லாவிட்டாலும் பழங்கால வழக்கப்படி பெண் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது. தேங்காய் தீபத்தைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

coconut-diya1

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான தீபங்கள் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். அதற்கு உதாரணமாக துர்க்கை அம்மனை எடுத்துக் கொள்வோம். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் துன்பங்கள் தீரும் என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சாஸ்திரம் கூறும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அது போல விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைப்பது வெற்றிக்கு வழி வகுக்கும் என்று கூறுவார்கள். இந்த வகையில் தேங்காய் தீபத்தை எதற்காக பயன்படுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது. பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். அது போல் வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

ghee

தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது. திருமண தடை நீங்கவும், நல்ல வரன் அமையவும், தொழில் வளம் சிறக்கவும் அம்மனை நினைத்து அம்மன் சன்னிதானத்தில் தேங்காய் விளக்கு ஏற்றி முறையாக வழிபடுவார்கள். இதனால் அவர்களுடைய வேண்டுதல்கள் விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் சிலர் விநாயகர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இது மிகவும் தவறான வழக்கம், இதை செய்யாதீர்கள்.

- Advertisement -

தேங்காய் தீபத்தை பொறுத்தவரை நம்பிக்கையின் பெயரில் பக்தர்கள் கடைப்பிடித்து வரும் அற்புதமான தீப வழிபாடு முறை. இதனை அம்மனுக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பலரும் அனுபவபூர்வமாக தங்களின் குறைகள் நீங்க கண்டுள்ளனர். இதை எப்படி முறையாக ஏற்றுவது? என்பதை பார்ப்போம். ஒரு நல்ல தேங்காயாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

coconut-diya

தேங்காயின் குடுமியை நீக்கிவிட்டு சரிசமமாக இரண்டாக உடைக்க வேண்டும். தீபத்திற்கு ஏற்றப்படும் தேங்காய் தண்ணீரை பூமா தேவிக்கு ஆவாகனம் விட வேண்டும். அதனை அருந்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் இரு மூடிகளிலும் பாதி அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எந்த தீபத்திற்கும் ஒற்றை திரியை பயன்படுத்தக் கூடாது, எனவே இரண்டு திரிகளை எடுத்துக் கொண்டு ஒன்றாக திரித்துக் கொள்ளுங்கள். தேங்காய் தீபம் ஏற்றுவதற்கு சிறிய தாம்பூலத் தட்டை தேவைப்படும்.

- Advertisement -

praying-god1

தாம்பூல தட்டில் வாழை இலை விரித்து அதன் மேல் பச்சரிசியை பரப்பி தேங்காய்களை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் உங்களது வேண்டுதல்களை அம்பாள் சன்னிதானத்தின் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இது போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒன்பது வாரங்கள் வரை செய்து வர உங்களது குறைகள் அனைத்தும் நீங்கும். இதனை வீட்டில் செய்வதை விட கோவில்களுக்கு சென்று செய்வது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.

இதையும் படிக்கலாமே
வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வத்தை, தயக்கமில்லாமல் வீட்டிற்குள் வரவைக்க இதை செய்தாலே போதும். நம் வீட்டிற்குள் தெய்வம் குடியேறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -