வீட்டின் தெற்கு மற்றும் தென்மேற்குத் திசையில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் உடனே மாற்றி விடுங்கள்! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும்.

vastu-sad-men
- Advertisement -

ஒரு வீட்டில் வடகிழக்கு எவ்வளவு முக்கியம் என்று வாஸ்து கூறுகிறதோ! அதே அளவிற்கு தென்மேற்கு திசையும் மிகவும் முக்கியம் என்கிறது வாஸ்து. வடகிழக்கு பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு அள்ளித் தருமோ! அதே அளவிற்கு தென்மேற்கு பணத்தை வீண் விரயம் ஆக்கிவிடும். வடகிழக்கு வெட்ட வெளியாக இருப்பது போல், தென்மேற்கு மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பது நியதி. வடகிழக்கு பகுதியில் எந்தப் பாரமான பொருட்களையும் வைக்க மாட்டார்கள், ஆனால் தென்மேற்கு பகுதியில் பாரம் இல்லாத பொருட்களை வைக்கக்கூடாது என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படி தென்மேற்கு மற்றும் தெற்கு தரும் வாஸ்து குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் குழியாக இருந்தால் நிச்சயம் அதனை மண்ணை போட்டு மூடி புதைத்து விட வேண்டும். பள்ளமாக இருக்கும் தென்மேற்கு திசை வீண் விரயத்தையும், கடன் பிரச்சனைகளையும் உண்டு பண்ணும். உங்கள் வீட்டின் அமைப்பு எப்படி இருக்கின்றது? என்பதை பொறுத்து தான் உங்களுடைய வாழ்வாதாரமும் அமையும் என்பது சாஸ்திர கூற்று. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரம் கூறுவது போல தெற்குத் திசை என்பது தரையை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் நீங்கள் செடிகளை வைத்து வளர்க்க விரும்பினால் தாராளமாக வளர்க்கலாம். ஆனால் அந்த இடத்தில் வளர்க்கும் செடி வகைகளை எந்த காரணம் கொண்டும் நீங்கள் வேருடன் வெட்டக்கூடாது. உயிர்ப்பு தரும் நைருதி மூலையில் வளர்க்கப்படும் செடிகளை வேருடன் பிடுங்கி எறிந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படக்கூடும். இதனால் தேவையற்ற பொருள் இழப்புகள் கூட சந்திக்க நேரலாம். எனவே தெற்கு திசையில் செடிகளை வளர்க்கும் முன்பு அது நிரந்தரமாக அங்கே வைக்க முடியுமா? என்பதை சிந்தித்த பிறகு வைப்பது நல்லது.

வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருக்கும் மதில் சுவர் பகுதியிலிருக்கும் மதில் சுவரை விட தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மதில் சுவர் உயரம் அதிகமாக இருக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரானது வெளியில் செல்லும் திசை தெற்குத் திசையாக கட்டாயம் இருக்காதவாறு பார்த்துக் கொள்வது உத்தமம். தெற்கு திசையை நோக்கி நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரானது செல்லும்படி அமைத்து இருந்தால், அந்த வீட்டில் கட்டாயம் லக்ஷ்மி கடாட்சம் குறைந்துவிடும்.

- Advertisement -

தென்மேற்கு பகுதியில் திண்ணைகள் போன்ற உட்காரும் இடங்களை அமைத்து இருந்தால் அதனை அகற்றிவிட்டு வேறு எதற்காவது அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அந்த இடத்தில் காலியாக திண்ணை போன்ற அமைப்புகள் இடம் பெறக்கூடாது எனவே அங்கு வேறு வகையில் மாற்றி அமைத்துக் கொள்வது பிரச்சனைகளை தீர்க்கும்.

தென்மேற்கில் நீங்கள் அமைத்திருக்கும் மதில்சுவர் விரிசல் விட்டு இருந்தாலும், இடிந்த நிலையில் இருந்தாலும் அதனை கட்டயாக சரி செய்துவிட வேண்டும். அப்படியே விட்டு விட்டால் அதன் மூலம் கூட வீட்டில் தேவையற்ற பிரச்சனைகளும், மன சஞ்சலங்களும் உருவாகக்கூடும் என்கிறது வாஸ்து. தென்மேற்கு திசையில் நீங்கள் வீடு அமைத்து இருந்தால், அந்த இடத்திலேயே இன்னொரு வீடு போல ஒரு அமைப்பை அதே திசையில் நீங்கள் உருவாக்கிக் கொண்டால் நிறைய அதிர்ஷ்டங்கள் வந்து சேரும்.

- Advertisement -